பக்கங்கள்

Sunday, December 01, 2013

“அண்ணாச்சி நீங்களா..!..!!, நல்லா இருக்கியளா”.....???...........


மேடைtuticorin-meeting-against-sand-mafia-11கடலோர கிராம மக்கள் நீண்ட தொலைவிலிருந்து பொதுக் கூட்டத்தைக் காண வந்து கொண்டிருப்பதால், அவர்களின் வசதி கருதி கூட்டம் 5:30 மணிக்குத் துவங்கும் என்றது அறிவிப்பு. சரியாக 5:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
7000 பேர் கூடிய அந்தக் கூட்டத்தில் ஒரு காட்சி...........
நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த கும்பலை நோக்கிச் சென்றோம். எப்படி கோஷம் போடுவது, என்ன கோஷம் போடுவது என்று திட்டமிடாமல் வந்திருந்தனர். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் கத்தித் தீர்த்தனர். சிலர் வைகுண்டராசன் வாழ்க என்றனர், சிலர் நாடார்களைப் பற்றிப் பேசாதே என்றனர், மொத்தம் 40 பேர் வரை இருக்கலாம். தினத்தந்தியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பொறுப்பாக வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் – புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கும்பலில் நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்த ஒருவரை ஏட்டு ஒருவர் விளித்தார்,
“யேல நீ இங்கெ என்னலெ செய்த?”
“அண்ணாச்சி நீங்களா, நல்லா இருக்கியளா” என்று அவரை நெருங்கியவன், தன் கையிலிருந்த செல்போனில் எதையோ காட்டி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பின் மீண்டும் கூட்டத்தோடு சேர்ந்து ஆவேச முகம் காட்டத் துவங்கினான். தொழில்முறை நெருக்கமாக இருக்கலாம்; நமக்குத் தெரியவில்லை.
 மீண்டும் மேடையை நோக்கித் திரும்பினோம். மேடைக்கு வலது பக்கவாட்டில் சிறு கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், “இன்னிக்கு நல்லா வசமா மாட்டுவானுவனில்லா பாத்தேன், ஓடிட்டானுவளே” என்ற தேனீர் கடைக்காரரிடம் மளிகைக் கடைக்காரர்.
 பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தோழர்களை சுட்டிக்காட்டினார், “அந்தா பாருவே கைல எந்தாம் பெரிய கம்பு வச்சிருக்காவன்னி… அந்த தெள்ளவாரிப் பயலுவ மாட்டியிருந்தா பல்லைக் களத்தி கையில குடுத்து அனுப்பியிருப்பாவ” என்று சிரிக்கத் துவங்கினார். பக்கத்திலிருந்த பலரும் அதை ஆமோதித்து சிரித்துக் கொண்டனர். மேடையில் வெவ்வேறு கடற்கரை ஊர்களைச் சேர்ந்த கமிட்டி பிரதிநிதிகளும் தலைவர்களும் உரையாற்றத் துவங்கியிருந்தனர்.

மேற்கண்டவைகள் .
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தும் போஸ்டர்கள் தூத்துகுடி நகரத்தின் சுவர்களெங்கும் முற்றுகையிட்டிருந்தன. “தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!” – என்கிற முழக்கங்களோடு

வி.வியை எதிர்த்து வி.வியின் கோட்டையான தூத்துக்குடியில்  நடந்தஒரு பொதுக்கூட்டத்தில் நடந்த கதையில் சிறு காட்சி.

நன்றி! வினவு.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com