திங்கள் 27 2014

இவரெல்லாம் பகுத்தறிவு பாசறையில் இருந்தவராம்............!!!

சோழவந்தான் அருகே,காடுபட்டியை சேர்ந்தவர் குணசேகரன் வயது40 .இவர்.செல்லம்பட்டி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர்.

இவர் தனியார் நிதி நிறவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே விவசாயமும் செய்து வந்தார்.

இவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் நிதியை பெற்று,தனியார் நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். செலுத்திய தொகைக்கான பாண்ட் காலம் முடிந்தவுடன் பணத்தை திருப்பி தர நிதி நிறுவணம் மறுத்துள்ளது.

இதனால் பணம் கொடுத்தவர்கள் குணசேகரனைன தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குணசேகரன்

விட்டுக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிதி நிறுவனத்தின் மெத்தனப்போக்கால் தற்கொலை செய்து கொள்கிறேன். என்றும்,மனைவி குழந்தைகளை மாமியார் வசம் ஒப்படைத்து விடும்மாறு தெரிவித்துள்ளார்.

சாகும்வரை மூத்திரப்பையுடன்  விடாது,அயராது மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் இருந்தவர்க்கு நீதிமன்றம்,பத்திரிகை,போராட்டம் போன்ற வடிவங்கள் தெரியாமல் தற்கொலைக்கு போனது கொடுமையிலும் கொடுமை.......................

2 கருத்துகள்:

  1. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்ததினால் நம் நாட்டு சட்டமும் போலீஸும் ஒரு துரும்பை கூட அசைக்காது என்று தெரிந்து தன் உயிரை மாய்த்து கொண்டார் அந்த மானஸ்தன்

    பதிலளிநீக்கு
  2. ஒரு துரும்பைக்கூட அசைக்காது என்பது உண்மைதான் அதற்க்காக சிலரைத்தவிர மற்றவர்களெல்லாம் தற்கொலை செய்வதில்லை. அப்படியிருக்கும்போது பகுத்தறிவு பாசறையில் இருந்தவருக்கு கூடுதலான அனுபவம்,பொறுப்பு இருப்பதனால் தற்கொலை தவறு என்று சுட்டிக் காட்டி இருக்கிறேன் திரு.Barari அவர்களே!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...