புதன் 29 2014

டாஸ்மாக்கை அடித்து நொறுக்காத மகன்...............


மதுரை மாவட்டம்,திருமங்கலம், முத்து நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி வயது 70, இவரது மகன் சரவணன் வயது 34,

பந்தல்போடும் தொழில் செய்து வந்த பந்தல் அமைப்பாளர் சரவணனுக்கு டாஸ்மாக்கின் புன்னியத்தால் குடிபழக்கம் இருந்து வந்துள்ளது.

தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப குடிபழக்கத்தை விட முடியாத சரவணன். தன் தந்தையிடம் 1000 ரூபாய் கேட்டு உள்ளார். தந்தையோ மகனுக்கு ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சரவணன். வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தையை ஒரே போடாக போட்டுவிட்டார்.

இதனால் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
குடிபழக்கத்தால் கொலை செய்துவிட்ட சரவணனோ சிறையில் .

சிறையிலே அடைக்கப்பட்ட சரவணன் டாஸ்மாக்கு  யாரை அடிப்பார்.!! 

குடிக்க காசில்லை என்றால் குடிப்பழக்த்துக்கு ஆளாக்கிய டாஸ்மாக்கை அடித்து நொறுக்காமல்,தந்தையை நொறுக்கிவிட்டார் பந்தல் அமைப்பாளர்.

இதனால் சகல குடிமக்கள் உள்ள வீட்டாள்கள்,. இருக்கும்- கிடைக்கும்
சொற்ப காசு பணத்தை குடிமக்களிடமும் திருடர்களிடமும் இருந்து
பாதுகாக்க, எல்லோருமாக  சேர்ந்து குடுமபத்தையும் ஊரையும்
நாசப்படுத்துவது பத்தாதுன்னு உயிரையும பறிப்பதை தடுக்க
 வேண்டுமென்றால் டாஸ்மாக்கை  ஓட ஓட விரட்டி அடித்து
நையப்புடைத்து நொறுக்குவதைத்  தவிர வேறு வழியில்லை.


3 கருத்துகள்:

  1. //ஆத்திரமடைந்த சரவணன். வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தையை ஒரே போடாக போட்டுவிட்டார்.//
    பொன்முட்டையிடும் வாத்தை கொண்ணுபுட்டானே பாவிபயல்

    பதிலளிநீக்கு

  2. ///குடிபழக்கத்தை விட முடியாத சரவணன். தன் தந்தையிடம் 1000 ரூபாய் கேட்டு உள்ளார். தந்தையோ மகனுக்கு ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார்.///

    இதுக்கு காரணம் அரசாங்கம்தான் கடையை திறந்து வைச்சா மட்டும் போதுமா சரக்கு விலையை குறைக்க கூடாதா? அல்லது சரக்கு வாங்குவதற்கு அரசாங்க லோன் ஏதும் கொடுக்க ஏற்பாடு பண்ணக் கூடாதா? இப்படியெல்லாம் செய்யாமல் குடிகாரங்களை மட்டும் குறை சொல்லுவது நன்றாக இல்லை

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துரைப்படி குடிக்க தெரிந்த குடிமகன்.குடி அரசை ஒன்னும் செய்யமுடியவில்லையே ஏன்?.அதனால் குடிமகன்மேல்தான் முதல் குறை.

    நன்றி! மதுரைத்தமிழன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...