வெள்ளி 03 2014

ஈரை பேன் ஆக்கி....பேன்-னை பெருமாள் ஆக்கி..................

www.geevanathy.com 









பட்டணத்து வாக்காளர்
ஒருவர் பட்டிகாட்டு
வாக்காளரிடம் இப்படிக்
கேட்டார்.............

“ரெட்ட இலக்கி”
ஓட்டு போட்டீயே
என்னா? கிடச்சதது
என்று...................

அது கேட்டு
பட்டிக்காட்டு
வாக்காளர் இப்படிச்
 சொன்னார்...........

அந்து துளைபோட்டு
எலி கொரித்துவிட்டு
மக்கிபோன மிச்ச
மீதியை கடைசியா.......

மாதத்தில் பனிரெண்டு
நாளுக்கு என் குடும்பம்
சாப்பிட விலையில்லா
அரிசி தர்ராங்க..............

விலையில்ல அரிசி
இட்லிக்கு  வர வே
மாட்டேன் என்று
சொன்னாலும் அதை
அரைக்க விலை
 இல்லா கிரைண்டர்
தந்தாங்க.............

வராத இட்லிக்கு
சட்னி அரைக்க
விலையில்லா  மிக்ஸி
கொடுத்தாங்க..................

உண்ட மயக்கம்
தீர்க்க... மின்
பில் கட்டும்
 டேபிள் விசிறி
தந்தாங்க..............

தூங்கி எழுந்தவுடன்
சோம்பல் போக்க
வேலை செய்வதற்கு
ஆடு......மாடு.
தாராக.................

 வரும் பொங்கலுக்கு
பொங்க வைக்க...
பொங்க சரக்கோட
இலவசமாக வேட்டி
இல்லாதவுகளுக்கு
வேட்டியும் சேலை
இல்லாதவுகளுக்கு
சாயம் போகும்
சேலையும்...............

பொங்கல சந்தோசமாக
டாஸ்மாக் அருந்தி
கொண்டு ஆடுவதற்கு
ஒரு நூறு ரூபாயும்
இலவசமா தரப்
போறாங்க...................

பட்டியல் போட்டு
சொல்லி முடித்த
பட்டிக் காட்டு
வாக்கு ஆளர்..
பட்டணத்து வாக்கு
ஆளரிடம்  கேட்டார்.

பட்டணத்து வாக்கு
ஆளர்க்கு எதுவும்
கிடைக்கலீயோ..........
என்று.................

“சட்டு என்று” பட்ட
ணத்து வாக்காளர்
சொன்னார்...........

“ஓ.....கிடச்சிருக்கே...!!!.....

காலை விடிந்தவுடன்.
நகரத்து வாசிகளுக்கு
குறைந்த விலையில்
“அம்மா..”..உணவகத்தில்
இட்லி சட்னியுடன்
குடுக்குறாங்க......................

மதியம் சாம்பார்
சாதத்துடன் சப்ளை
பன்னுறாங்க...................

சாப்பிடும் போது
விக்கி கிட்டா........
சாப்பிட்ட பின்பு
தாகம் எடுத்தா
“அம்மா” வாட்டர்
நீட்டுறாங்க............

வரும் பிரதம..
தேர்தல்ல ரெட்ட
இலைக்கே ஓட்டு
போட்டா....................

அம்மா செங்கோட்டை
எக்ஸ்பிரசுல போயி

செங்கோட்டை நாற்
காலியில் ஒக்காந்தங்
கண்ணா..................

ஈரை பேன் ஆக்கி
பேன் னை பெருமாளா
ஆக்கி. அந்தப்
பெருமாள. எல்லார்க்கு
கிடைக்க செய்து
விடுவாங்கல்ல...........

என்ன நான்
சொல்றது...........!!!!!!!!!!






4 கருத்துகள்:

  1. ஆமாம் தமிழ் மக்களை சோம்பேறி ஆக்கிட்டாங்க, இனி இந்தியா முழுவதும் அந்த செயலை தொடங்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. நாட்டு நடப்பை சொல்லியவிதம் அருமை...

    பதிலளிநீக்கு
  3. அம்மா,செங்கொட்டயில ஒக்காந்தங்கன்னா இந்தியா முழுவதும் அமுல் படுத்திடுவாங்..கும்மாச்சியாரே!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பாராட்டுக்கு நன்றி! அவர்கள் உண்மைகளே!!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...