பக்கங்கள்

Tuesday, February 11, 2014

நல்லம்மாள் மகன் என்ன லூசா..? உண்மைக்கதை

மாநகராட்சியின் 69 வது வார்டில் துப்பரவு ஊழியராக பணியாற்றி தனது 58 வயதில் பணி நிறைவு பெற்றவர் திருமதி நல்லம்மாள்.

திருமதி நல்லம்மாளுக்கு முதலாவதாக ஒரு பொண்ணும் இரண்டாதவதாக ஒரு ஆணும் உள்ளனர். திருமதி நல்லம்மாளின் கனவர் ,மகனின்  நான்கு வயதில்  பரலோகம் சென்று விட்டார்.

படிப்பும்,விவரமும்,ஆதரவும் இல்லாமல் திக்கு தெரியாத காட்டில் தனித்து விடப்பட்ட நல்லம்மாள் தவியாய் தவித்துப்போனார். தனது கனவர் பன்னை அடிமையாய் வேலை பார்த்த ஆண்டைகளின் வீடுகளிலே வீட்டுப் பணிப்பெண்ணாக தன் வாழ்வைத் தொடர்ந்தார்.

வீட்டு வேலை செய்து வந்தபோது  சில நல்லவர்களின்  மனைவிமார்களின் உதவியால் ஊராட்சி வார்டுகளில்  துப்பரவு சிப்பந்தியாக  சேர்க்கப்பட்டு, ஊராட்சி வேலை நேரம் போக , மீதி நேரத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டதுக்கு நன்றிக்கடனாக ஆண்டைகளின் வீடுகளிலும் வேலை செய்து வந்து தன் குடும்ப வண்டியை ஓட்டி வந்தார் திருமதி நல்லம்மாள்.

ஊராட்சி நகராட்சியாக மாறி நகராட்சி மாநகராட்சியாக ஆகி 35ஆண்டுகள்  பணியாற்றி 58வயது ஆகியவுடன் பணி ஓய்வு பெற்றார். .தன்னுடைய பணப்பலன் பெருவதற்க்காக மூன்று ஆண்டு காலமாக  நல்லம்மாளின் மகன்  மண்டல அலுவலகத்துக்கும் தலைமை அலுவலகத்துக்குமாக அலைந்து போட வேண்டியவர்களுக்கு போடு பணம் போட்டு,மொய் செய்ய வேண்டியவர்களுக்கு மொய்யெழுதி .கடைசியாக 35 வருட பணிக்காலத்தை கணக்கில் சேர்க்காமல் 28 வருடத்தை மட்டும் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு .ஒரு லட்சத்து அய்ம்பத்திஅஞ்சு ஆயிரத்தை   பணப்பலனாக பெற்றார் திருமதி நல்லம்மாள்.

அந்த ஒரு லட்சத்து ஐம்பதைந்தாயிரத்துக்கான செக்கை.“பாக்கியா” பைன்னாசில் கொடுத்து பணமாக பெற்று.....திருமதி நல்லம்மாளும் அவரது மகனும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கியதுமே.........அவர்களை சுற்றி  ஒரு கூட்டமே கூடியது.

கூடி நின்ற கூட்டத்திடம் நல்லம்மாளின் மகன் சொன்னான். “அய்யா. அம்மா உங்களிமிடருந்து என்அம்மா வாங்கிய கடனை இல்லை என்று சொல்லவில்லை.  என் அம்மாவின் பணப்பலன் குறைவாக வந்துள்ளது. எனது தாயாரின் பணிப்பதிவேட்டில் பணிபுரிந்த நாட்களை பதிவு செய்யும் அலுவலர்கள் ஆறு வருடங்களை பதிவிடாததால். பணப்பலன் குறைந்தற்கு காரணம்.

இந்த ஒரு லட்சத்து அய்ம்பத்திஅய்ந்தாயிரத்தை வைத்துக்கொண்டு .வட்டியும் அசலுமாக சேர்த்து உங்கள் அனைவரது கடனையும் அடைக்க முடியாது. ஆகையால் வட்டியை கேட்காமல்.அசலை மட்டும் வாங்கிச் செல்லுமாறு உங்கள் பனிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்றான்.

 கடன் கொடுத்த கூட்டத்திலிருந்து பிச்சைத்தேவரும், கழுவாயி யாத்தா,மாயக்கா,பேச்சியக்கா.ஆகியோர் அவர்களுக்கே உரித்தான
வட்டார மொழியில் சத்தம் போட்டார்கள்.

யப்பே.....ய்........ய்...... என்னா............ம்..... இதென்னப்பா பேச்சு......வட்டி என்ன கொஞ்சமா? .விடுறதுக்கு..... .......ஏய்ய் நல்லம்மா.......என்னா..........ஓ.........மகன் இப்படி சொல்றான்.       இதுக்குத்தான் நீ கேட்டவுடனே........கடன தந்தோம்மாக்கும்...........இதென்ன  வழுவட்ட பேச்சு என்றார் பேச்சியக்கா..

என்னப்பா...............நல்லம்மா மகனே..........இதுதான் உன் நேர்மையாக்கும சரியில்லப்பா.....வட்டியும் அசலையும் கொடுக்கப் பாரு .என்றார் பிச்சைத்தேவர்.

“யப்பா.........ய்ய்....நல்லம்மா மகனே..........ஒங்கம்மா கூட வேல பாக்கறவளுக்கு ஓங்கம்மா எங்கிட்ட கடன்வாங்கிக் கொடுத்தா............அவளுக ஒங்கம்மாவ ஏமாத்தி புட்டாளுக.............. அவளுக மாதிரி நீ...........எங்கள ஏமாத்திரி யாக்கும்
ஒழுங்கா..மரியாதையா வட்டி மொதலுமாக காச வச்சுட்டு போ..........ஆமா.
நீ ஏமாந்ததுக்கு நாங்கலா பொறுப்பு......சே.....என்றார் கழுவாயி.யாத்தா......

சரித்தா................எங்கம்மாவின் இரக்க குணத்த சாதகமாக பயன் படுத்திக் கிட்டாக......அவுககிட்ட கேட்டபோது,வாங்கினவுகல்ல பூச்சான் வீட்டுக்காரம்மா மட்டும்தான்  உங்ககிட்டஒத்துகிட்டு  .நல்லம்மக்காகிட்ட கேக்காதீங்க நானு தந்துரேன் சொன்னாங்க.......மத்தவங்க எங்கம்மாகிட்ட கடன் வாங்கித்தரச் சொல்லவே இல்லேன்னு சொல்லிட்டாங்க.....அவுககிட்ட எப்படி வாங்குறதுன்னு சொல்லுங்க  என்றான் நல்லம்மா மகன்.

கந்தசாமி பிள்ளை மட்டும்..அய்யா,நல்லம்மாமகனே,...... எங்களுக்கு ஒழிச்சுவிடப்பா............... நாங்க போறோம்............என்றார்.

ஏற்கனவே தனது தாயிடம் யார் யாரிடம் கடன் வாங்கிய விபரம்.வட்டி கொடுத்த விபரம், உடன் வேலை பார்த்தவங்களுக்கு கடன் வாங்கி கொடுத்த விபரத்தையெல்லாம் தன் தாயிடம் கேட்டு எழுதி வைத்துக்கொண்டதைக் கொண்டும் .அதோடு கடன் கொடுத்தவர்கள் உண்மையைச் சொல்கிறார்களாக என்றும். அவர்களிடம் மீண்டும் கேட்டு அவர்களிமிருந்து தனது தாயார் வாங்கிய கடன் பணத்தை  எண்ணிக் கொடுத்தான்.

 அரிசி கொடுத்தே கடனை எற்றி வைத்த அரிசிகாரம்மா . மட்டும் பத்தாயிரத்துக்கு இருபதாயிரம் என்று சத்தியம் பன்னி சாதித்தார்.

அரிசிகாரம்மா...........நீங்க ரேசன் அரிசிய தீட்டி நல்ல அரிசின்னு  அதிக விலைக்கு வித்து கடன ஏத்தினது எல்லாம் எனக்கு தெரியும்.......ம்மா....... என் அம்மாவால நானும் ஏமாந்தினது வாஸ்தவம்தான். அதுக்காக இன்னமும் ஏமாத்தினா எப்படிம்மா...............

ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க..........ஒங்களுக்கு பயந்துகிட்டு.
நான் பணம் தரல...............எங்கம்மா ஒங்கிட்ட கை நீட்டி வாங்கியிருச்சென்னு தான் . வாங்கின பணத்தை திரும்பத் தர்ரேன். போலீஸ.கோர்ட்டு போனால் ஒங்களால் கொடுத்த பணத்தை வாங்க முடியுமா......??? எங்கம்மா என்ன ஒங்களிடம் எழுதியா.......கொடுத்திருக்கு..............நான்  பணம் இல்லேன்னா என்ன செய்விங்க..........கொன்றுவிங்களா......... அவனவன் எழுதிக் கொடுத்த பணத்தையே வாங்க முடியுமா..???....தவிக்கிறது ஒங்களுக்கு தெரியுமா.?.........

அரிசிகாரம்மாவுடன் கூட வந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும்.
“இந்தாம்மா...........நல்லம்மா மகன் பொய் சொல்லமாட்டான். அவன் அப்பன் அம்மாவை விட ஒருபடி மேல இருக்கான்..  கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிறது பெரிய விசயம்.. நீ ரேசன் அரிசிய கொடுத்து கடன ஏத்தினத புட்டு வச்சிட்டான் ....உள்ளது மோசம் போயிரும் பாத்துக்க என்றதும்.

நல்லம்மா மகனே............மன்னிச்சிருப்பா...............சும்மா....சொன்னேன்ப்பாஃ
எல்லாக் கடனும் பத்தாயிரத்துக்குல்லதான் வருது. மன்னிச்சுறுப்பா நல்லம்மா மகனே......நீ கொடுக்கறத.............கொடுப்பா என்றார் அரிசிகாரம்மா.

கடைசியாய் பிச்சைத்தேவர்.மாயக்கா.பேச்சியக்கா........ மூவரும்  புலம்பியபடி சரி....நல்லம்மா மகனே, அசல கொடு.......... ஒங்கத்தாவின் வேறுபணம் எதுவும் வாங்கினால்...பின்னாடி......வட்டிய கொஞ்சம் கொஞ்சமாக கொடு என்றார்கள்.

பின்னாடியெல்லாம் கொடுக்க முடியாது. எங்காத்தாவுக்கு பென்சனே ரெண்டாயிரம்தான் வரும்....... அதவச்சுதான் நானும் எங்காத்தாவும் கஞ்சி குடிக்கனும்.......அதையும் ஒங்கிட்ட குடுத்திட்டா நாங்க எப்படி கஞ்சி குடிக்கிறது என்றபோதுதான்

நல்லம்மா மகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்ற விபரம் அங்கு இருந்தவர்களுக்கு தெரிந்தது.

திருமதி நல்லம்மாளின் ஓய்வுப் பணத்தை கொண்டு திருமதி நல்லம்மாள் தனது பிள்ளைகளுக்கு வாங்கிய கடனையும் தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடனையும் தன் மகன் மூலமாக அனைத்து கடனையும் அடைத்துவிட்டு மீதி இருந்த ஒன்பதாயித்து சில்லரையுடன்  நல்லம்மா கவலையுடன் தன் மகனை தொடர்ந்தார்.

நல்லம்மாள் கவலையுடன் இருப்பதை பார்த்ததும் நல்லம்மா மகன் சொன்னான். அவுங்ககிட்ட வாங்கின பணத்தை தானே அடச்சோம் கவலைய விடும்மா..... கஞ்சி இல்லேன்னாலும் கடன் இல்லாம இருக்கலாம் என்று தேற்றினான்.

 திருமதி.நல்லம்மாளின் ஓய்வூதிய பணப்பலன் பணத்தை நல்லம்மா மகன் கூடி நின்ற கூட்டத்திடம் எண்ணி கொடுப்பதைக்.தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என்னவென்று  விசாரித்து தெரிந்து கொண்ட பின்.................

”நல்லம்மாள்  மகன் என்ன லூசா” என்று கேட்டபடி வியப்புடன் சென்றார்கள்.


....


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com