பக்கங்கள்

Thursday, February 13, 2014

மேல் சாதிக்காரர்கள் மதம் மாறலாம் சாதி மாறலாம்.ஆனால்.......

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து டீக்கடை வைத்த அங்கயற்கன்னி என்பவர்க்கு . அன்று அவர்க்குதபால் வரும்போது அங்கயற்க்கன்னி வலையன் என்று வரும்.

அந்த அங்கயற்கன்னி வலையன் இன்று..அங்கயற்கன்னி பிள்ளையாக மாறி.சேனைத்தலைவர் அறக்கட்டளையின் முக்கியஸ்தராகவும்,வ.உ.சி பேரவையின் பிரமுகராகவும் மாறிவிட்டார்.

அந்த பிள்ளை சாதியைச் சேர்ந்த ஒருவர். அய்யர்வீட்டுப் பொன்னை கலியாணம் செய்து பிறந்த தன் மகன்களை அய்யராக்கி சான்றிதழும் பெற்றுவிட்டார்.

பிரமலைக்கள்ளர், சேர்வை,கள்ளர் இந்த சாதியை சேர்ந்தவர்களெல்லாம் தேவர்சமூகமாகவும் முக்குலுத்தோராகவும் மாறிக்கிறலாம்.  அல்லது சாதி மாறாமல் கிறிஸ்தவ மதத்துக்கும்  மாறிக்கிறலாம்

இப்படி மேல் சாதியின்னு சொல்லிக் கொல்பவரெல்லாம் மதம் மாறாமல் சாதி மாறலாம்...அல்லது மதம் மாறலாம் சாதி மாறலாம்  ஆனால்..........

காலங்காலமாக மேற்படியார்களால் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் மதம் மாறினாலும்,பெயர் மாறினாலும் சாதி இழிவு மட்டும் மாறுவதில்லை, சாதியை மாற்றிக் கொண்டாலும் சாதிவெறிக்கொண்ட சமூகக்கூட்டம். மாற்ற விடுவதில்லை. சரி...

சாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம் என்றால் அரசும் விடுவதாக இல்லை.

4 comments :

 1. இன்றைக்கு பவுத்தமும் உயர்கல்வியும் இருந்தும் சாதியத்தை தகர்த்தெறிய மு டியவில்லையே !! நன்றி! விவரணன் நீலவண்ணன் அவர்களே!!!

  ReplyDelete
 2. இதில் இருந்தே தெரிகிறது ,அரசுக்கு தலைமை தாங்குபவர்கள் யார் என்று !
  த.ம 1

  ReplyDelete
 3. அப்புறம் சும்மாவா செல்லுறாங்க.... அரசே! சாதிவெறி அரசாங்கமா இருக்கன்னு...........

  நன்றி!Bagawanjee KA

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com