பக்கங்கள்

Saturday, February 15, 2014

போங்கடா நீங்களும் ஒங்க சமத்துவமும்.

Kandasamy Muthurakku
தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்களா ? -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா --- அய்யயோ அதெல்லாம் முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்கள கோவிலுக்குள்ள விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்கள உங்க வீட்டு உள்ள விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்கள ஊருக்குள்ள உங்களோட ஒன்னா சமமா வாழ விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில அவங்க ஊருக்கு ஒதுக்குபுறமா சேரில தான் வாழனும்.

சரிங்க கடைசியா ஒன்று தாழ்த்தப்பட்டவங்கள செத்த பிறகு உங்களோட இடுகாடுலயே புதைக்க/ எரிக்க விடுவீங்களா -- அய்யயோ அதெல்லாம் முடியவே முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி அவங்க தனி இடுகாடுல தான் புதைக்கணும்.

தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க -- அது எப்படிங்க ஞாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா. எல்லாருக்கும் சமமா தான் இருக்கனும் இப்படி பிரிக்க கூடாது.

செத்த பிறகு கூட எங்கள சமமா நினைக்க மாட்டாங்களாம் ஆனா இடஒதுக்கீடுக்கு எதிரா பக்கம் பக்கமா சமத்துவம் பேசுவாங்கலாம்.

போங்கடா நீங்களும் உங்க சமத்துவமும்.

(முகநூலில் கண்டது)

4 comments :

 1. தகனம் செய்யும் சுடுகாட்டில் கூட ஜாதிதான் ..அங்கேயும் இல்லை சமரசம் !

  ReplyDelete
 2. செத்தவுகளாம் சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் போறதா சொல்றாங்களே! அங்கேயும் சாதி வச்சிருப்பாங்க.......

  ReplyDelete
 3. இப்படியே நாமும் கத்திகிட்டு கிடக்க வேண்டியது தான். அவங்கபாட்டுக்கு ஜெகஜோதியா வாழ்றாங்க.. :(

  ReplyDelete
 4. பண பலமும் ஆள்பலமும் இல்லாத நானாவது கத்துறேன். அவுங்களுக்கு ஈடாக இருக்கிறவங்க அவுக....மூச்சுகூட விடமாட்டுறாங்களே!!! திரு.இக்பால் செல்வன் அவர்களே!!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com