பக்கங்கள்

Friday, February 07, 2014

திருட்டு காதல் படுத்தியபாட்டால் கைதான திருட்டுக் காதலர்கள்.....................

திண்டுக்கல் அருகே வேடபட்டியை சேர்ந்தவர் பாண்டி முனியப்பன்.39. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் மகள் வேணிக்கும்32 கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2பெண்,2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வெள்ளையம்மாள் அடிக்கடி மகள் வேணி வீட்டுக்கு வந்து போகும் போது,அதே ஊரைச்சேர்ந்த பெரிய...சாமி40 என்பவருடன் திருட்டு காதல் ஏற்ப்பட்டு ,பெரிய சாமியுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இதே மாதிரி, வெள்ளையம்மாளின் மருமகன் பாண்டி முனியப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருட்டு காதல் ஏற்பட்டு ,இருவரும் தொடர்பில் இருந்துவந்தனர்.

இந்த நிலையில். பாண்டி முனியப்பன். தனது மனைவிக்கும் தன் நண்பன் துரைப்பாண்டிக்கும் திருட்டு காதல் தொடர்பு இருப்பதை அறிந்த கொண்டதும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால்.பாண்டி முனியப்பனின் இம்சை தாளாமல் தவித்து வந்த வேணி தனது திருட்டு காதலர் துரைப்பாண்டியுடன் தனது தாயின் திருட்டுக் காதலர் பெரிய சாமியையும் சேர்த்துக் கொண்டு கொடுமை செய்துவந்த பாண்டி முனிய அப்பனை சரமரியாக குத்தி கொலை செய்தார்.

இது குறித்து பாண்டி முனியப்பனின் தாய் வள்ளியம்மாளின் புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுக்காதல் படுத்திய பாட்டால் கொலை செய்த  வழக்கில துரைப்பாண்டி,பெரியசாமி,வேணி ஆகிய திருட்டு காதலர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்தக் திருட்டு காதலிலும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் திருட்டுக் காதல் செய்யனும்முனு சாதி வெறி சமுதாய தலைவர்கள் போர்  பிரகடனம் தொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

2 comments :

  1. கொலை பண்ணாலும் தன் ஜாதிக்குள்ளேயே கௌரவக் கொலை பண்ணிக்கட்டும் !
    த ம 1

    ReplyDelete
  2. அய்யோ..கொலையா...? இது தப்பாச்சே...........இதுதான் சாக்கன்னு தங்களுக்கு ஓட்டு போடாதவங்களையேல்லாம் கொல்லுவாங்களே!!!!!!!!பகவான்ஜீ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com