பக்கங்கள்

Sunday, February 09, 2014

வசூல்ராஜாக்கள் எம்பிபிஎஸ்ஸிடம் சிக்காத தமபதிகள்.......

இருக்கிறவங்களும்.இனிமேல் வரப்போறவங்களும், போய் சேர்ர வரைக்கும் எப்படியாவது எந்த சுத்துல லாவது வசூல்ராஜாஎம்பிபிஎஸ்ஸிடம் மாட்டாமல் அவரிகளிடமிருந்து தப்பித்து மேலோகமோ, கீழோகமோ போய் சேர முடியாது.

இதன் காரணகர்த்தா தனியார்மயம்,தாராளமயம், உலகமயம்.

இந்த மயங்கள் வந்து கோலோச்சுவதற்கு முந்தி வந்த ஒரு தம்பதியினர் , தற்போது  நிலவும்  வசூல்ராஜாவிடம்  சிக்காமல் தப்பித்து, போய் சேர்ந்துவிட்ட தம்பதிகளை   பற்றியது..

சிவ கங்கை மா வட்டம் மானா  மதுரை அருகே வேதியரேந்தல கிராமத்தை சேர்ந்தவர் பொலயப்பன் இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களின் முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பாகும். ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது.விவசாய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துவந்தனர்.

 நான்கு தலைமுறை கண்ட பொலயப்பன்-முத்துப்பிள்ளை தம்பதியினர் வழியில் 126 பேர்கள் உள்ளனர்.

மழைக்குக்கூட மருத்துவமனைப் பக்கமோ.அதன்  அருகில்கூட ஒதுங்கவோ, எட்டிப்பார்க்கவோ இல்லை இந்த தமபதியினர்.

பொலயப்பன் தனது 112 வயதில் முன்னே செல்ல முத்தப்பிள்ளை தனது 113 வயதில் பின் சென்று பொலயப்பனை அடைந்தார்.

21 ம்நூற்றாண்டில் இந்த தமபதியர்கள் வசூல்ராஜாக்கள் எம்பிபிஸ்ஸிடம் சிக்காமல் தப்பித்து சென்றது. வியப்பாக இருக்கிறது. கொடுத்து வைத்தவர்கள்.

3 comments :

 1. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

  ReplyDelete
 2. ஒருமுறை வசூல்ராஜாவிடம் மாட்டி இருந்தால்கூட இத்தனை நாள் வாழ்ந்து இருக்க மாட்டார்கள் !
  த ம+1

  ReplyDelete
 3. நிச்சயமா........முன்னாடியே ..சேர்த்து இருப்பார்கள்......

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com