திங்கள் 10 2014

நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றுதான் நாட்டை ஆளும்..

இந்திய பண நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றுதான் இந்திய நாட்டை ஆளும். மற்றொன்று அதுக்கு பக்கபலமா இருந்து எதிர்கட்சி என்ற போர்வையில ஜால்ரா தட்டும்.

பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்திடமிருந்து தனி சாம்ராஜியமாக நடைபோட்டு வருகிற காலந்தொட்டு  வல்லராச போகிறதாக பீத்திகிட்டு திரிகிற இந்தக்காலம் வரை நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றுதான் ஆண்டு வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த இரு பக்கங்களைத்தவிர மூன்றாவது பக்கம் நாணயத்தில் இருக்க வாய்ப்பில்லை. அதுகள் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றில் அணி வகுத்து கொள்ள வேண்டிய நிலைதான்.

இந்திய நாணயத்தின் இருபக்கங்களில் ஒன்று காங்கிரஸ்,மற்றொன்று பாரதீய ஜனதா, மூன்றாவது பக்கத்துக்கு அல்லாடுபவைகள் உதிரிகட்சிகள் இரு பக்கங்களில் ஒன்றை தொங்கியே  கிடக்க வேண்டியதுதான்.

நாணயத்தை நாணயமிக்க நாணயமாக மற்றவல்ல நக்சல்பாரி புரட்சியாளர்களோ..... சிதறு தேங்காய்கள் மாதிரி சிதறிக் கிடக்கிறார்கள்.

எங்கள் வழிதான் சிறந்தது, நாங்கள் காட்டும் வழிதான் சரியானது என்று தததுவத்துக்குள் தத்துவம் பேசிககொண்டு வீறுநடை போட முடியாமல் கிடக்கிறார்கள்.


இவர்களின் உழைக்கும் மக்களோ, இலவசங்களுக்கு மயங்கி, அடிபட்டு மதிபட்டு,மெய்ஞானத்தை மறந்து ,மீடேற வழியின்றி  அஞ்ஞானத்தில்
முழ்கி கிடக்கிறார்கள்.

 இந்திய நாணயத்தின் இரு பக்கங்களேர் அழுக்கேறி,பாசிப்படர்ந்து கோரமாய் காட்சி அளித்து பயமுறத்துகிறது.

120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சாம்ராஜ்யத்தை  நாணயத்தின் இருபக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் ஆளும் அதுதான் பூதகரமாக கண்ணுக்கும் சித்தத்திற்கும்  தெரிகிறது ..பதிகிறது.

2 கருத்துகள்:

  1. #நாங்கள் காட்டும் வழிதான் சரியானது#
    இன்னும் இது காட்டும் வழியா தெரியலே ,காட்டு வழியில் தான் இருக்கிறது ,நாட்டு வழியில் வருவது எப்போ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஒன்னு ரெண்டு காட்டு வழிய விட்டுட்டு நாட்டு வழியில வந்திருக்கு.........

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...