பக்கங்கள்

Tuesday, April 15, 2014

3,015ரூபாய் கொடுத்து ஒரு பேனா வாங்கிய சிறுமியின் கதை.


படம்.தமிழ்நண்பர்கள்.காம்

என்னாது இது கிறுக்கத்தனமா?? இருக்குது என்கிறீர்களா........அப்படி என்ன அந்தப் பேனாவில் இருக்கிறது என்கிறீர்களா.???

அதைத்தான் படித்துப்பாருங்களேன் அப்படியான அதிசியத்தை.........

நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் துரை.இவரது மகள்தான் நட்சத்திரா என்று பெயர் கொண்ட சிறுமி. இவர்தான் ரூ.3,015யை கொடுத்து ஒரு பேனாவை வாங்கியிருக்கிறார்.

சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்  6வது படிக்கும் நட்சத்ராவின் தந்தை துரை .சிர்காழி நகர திமுக. பொருளாளராக இருப்பதால்.திமுக கட்சியின் தலைவர் கரணாநிதியின் மீது நட்சத்ராவுக்கு தனிப் பாசம். அந்த பாசத்தின் காரணமாக,திமுக வின் தேர்தல் நிதிக்காக.கடந்த  15 நாட்களாக சக மாணவிகளிடம் தேர்தல் நிதி வசூல் செய்துள்ளார்.

அவ்வாறு வசூல் செய்த நிதியான ரூபாய்3,015யை சிர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தேர்தல் நிதியை வழங்கினார் நட்சத்திரா.

நட்சத்ரா வழங்கிய தேர்தல் நிதியை பெற்றுக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி .நட்சத்ராவை பாராட்டியதோடு.அவருக்கு தன் பேனாவை பரிசாக வழங்கினார்.

இதுதான் ரூ3.015யை கொடுத்து ஒரு பேனா வாங்கிய சிறுமியின்கதை

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com