ஞாயிறு 13 2014

கலியாணம் முடிப்போம்.தாலிகட்டிக்குவோம். ஆனா ஒன்னா இருக்க மாட்டோம்....

ஓவியம் : ஓவியர் முகிலன்
படம்.வினவு


















வரும் பதினாறாவது தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி ஒருவர் இப்படி நக்கல் அடித்தார்

ஊர் அறிய கலியாணம் பேசி தாலி கட்டிக்கோவோம், ஒரே இலையில் சோறு தின்போம்.  ஆனா ரத்திரியில ஒன்னா இருக்க மாட்டோம் என்றார்

இன்னாது இது ஒரே புதிரா இருக்குது. எந்தக் கூட்டணியைப் பற்றி சொல்றார் என்று திகைத்து போயி அவரை பார்த்தால்...........

புரியலையா...... ஓங்களுக்கே புரியலைன்னா...நா....என்னத்த சொல்ல என்றபடி அவரே சொல்ல நக்கலின் விளக்கவுரையை சொன்னார்.

நான் கலியாணம் ஆனவன்(பிஜேபி) என்று ஒத்துக்கிட்டவன் கட்சிக்கும், கோபாலு கட்சிக்கும்ம் கூட்டணி ஏற்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில்அவர்களின் கொள்கை விளக்கத்தில்  பேசியதை சொன்னார்.

“நான் கலியாணம் ஆனவன்” கட்சிக்காரன் என்ன சொல்றான்.என்றால். கோபாலு கட்சியின் “ஈழ கோரிக்கை”யில் எங்களுக்கு உடன்பாடு இல்லேங்கிறான்.

கோபாலு கட்சி தலீவரு என்ன சொல்லுது என்றால்..... நான் கலியாணம் ஆனவன் கட்சியின் “பொது சிவில் சட்ட”த்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லேங்கிறான்.


கலியாணத்துல தாலி கட்டிக்கிருவாங்கேலாம்,ஓரே இலையில சாப்பிடுவாங்கேலாம் ஆனா ரத்தரியில் ஒன்னா இருக்க மாட்டாங்கலாம், ஒன்னா படுக்க மாட்டாங்கலாம்.....

பிறகு.. எதுக்குடா கலியாணத்துல தாலிகட்டிகிறாங்கே..ஒரே இலையில சாப்பிடுறாங்கே..........ஓரே கூட்டணிங்ரேங்கே  கொள்கை கூட்டணிங்கிராங்கே......

கோபத்தோடு சொன்னார்.

பிறகுதான் அவர் சொன்னதின் உள் அர்த்தம் புரிந்தது.

3 கருத்துகள்:

  1. தனக்கு கல்யாணம் ஆனதையே இந்த தேர்தலில் தான் மோடி சொல்லியிருக்கார். பொது வாழ்விற்க்கு வந்த உன்னிடமே நேர்மை இல்லையடா.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயதார்த்தம்தான் முடிஞ்சுருக்கு ,இப்பவே பிரச்சினையா ?இன்னும் எத்தனை நாளைக்கு தம்பதிகள் போல் நடிப்பார்கள் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. பட்டம் பதவி கிடைக்கிறவரைக்கும் என்று நிணைக்கிறேன் ஜீ

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...