வியாழன் 17 2014

தண்ணீர்க்கு கண்ணீர் விட்டால் பலனேதுமில்லை...

www.vinavu.com
















பூமியானது 80 சதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது இதில் 77சதம் கடல்,2சதம் பனிக்கட்டி,மீதமுள்ள 1சதம்  தான் நல்ல தண்ணீர்.இந்தத்தண்ணீரைத்தான் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் மற்ற அத்தியாவசிய உயோகத்துக்கும் பயன் பட்டு வரப்படுகிறது.

நாசமா போக வேண்டிய பக்கிகளால் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம்,உலக மயம் போன்ற மயங்களின் புண்ணியத்தால் தண்ணீரும் வணிகமயமாகி விற்பனை சரக்காக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டமும் அதாள பாதாளத்துக்கு சென்றுவிட்டது.பருவ மழையும் தவறிய  விட்டது. இந்தக் காலங்களில் ஏற்ப்படும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இந்திய ஆட்சியாளர்களும் சரி,ஜனநாயகம் என்று பேரிலே ஆளுவதாக சொல்லிக் கொல்லும் கட்சிகளும்  சரி,மக்கள் நலனை தங்களின் உயிர் மூச்சாக கொள்வதில்லை.

இந்த  இரண்டு கூட்டுக் களவானிகளும் தேர்தலுக்கு தேர்தல் வாய் சொல்லில் பறை சாற்றி ஒரு முழத்துக்கு நாலு முழம் பூவை காதில்  சுற்றுவதில் கில்லாடி பாதர்களகவே இருக்கிறார்கள்.

இருக்கப்பட்டவர்கள் காசு கொடுத்து தண்ணீரை வாங்கிக் கொள்கிறார்கள்.

இல்லாதவர்கள் தண்ணீர்க்கு அலையாய் அலைந்து ஒருத்தருடன் ஒருத்தர் சண்டையிட்டு புலம்பி தவிக்கிறார்கள்.இத்தகைய நிலமையை எண்ணி வெம்பி தண்ணீர்க்கு  கண்ணிர்விட்டாலும் அந்தக் கண்ணீரால் பலனேதுமில்லை.

தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி ஓட்டுப்போட்டாலும் விடிவு காலமும் பிறக்கப் போவதில்லை.. ஏனென்று கேட்கவும் துப்பு இ்ல்லை....நம் கண்ணீரால் பலனேதும்  கிடைக்கப் போவதில்லை என்பதையும்  உணரப் போவதில்லை.

2 கருத்துகள்:

  1. தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லாதவர்கள் நாடு வல்லரசு ஆகிவருகிறது என்று வெறும்கையால் முழம் போடுகிறார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நரம்பில்ல நாக்கு அல்லவா....அப்பிடித்தான் கதைப்பார்கள் ஜீ

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...