பக்கங்கள்

Monday, April 21, 2014

கருப்புக்குடை வேண்டாம். கருப்பு கண்ணாடி மாட்டிக்கிடலாமா...?காலையிலயே வெயிலு மண்டையை பொளந்திருச்சு... இந்த வெய்யில்ல ஜனநாயகத்த காப்பத்த வேண்டி ஒவ்வொரு கட்சிக்காரனும் ஓட்டு போடு ஓட்டு போடுன்னு பிச்சை   கேட்டு வாரானுக.....அவிங்களுக்குத்தான் வயித்து வலி கொளுத்தும் வெய்யிலுல வாரனுங்க என்றால் ......நானு இந்த பாழாய் போன வழுக்கு மண்டையை வச்சுகிட்டு இந்த வெய்யிலுல போக முடியுமாடா.........குடையை தேடி எடுடா .......குடைய பிடிச்சுட்டே போயிட்டு வந்துடுறேன் என்றார்.அவர்.

மாமா....வெயிலுல கருப்பு குடைய பிடித்துக் கொண்டு போகக்கூடாது மாமா. கருப்புக் குடைய பிடித்துக் கொண்ட போனால் சூரிய ஒளிக்கதிர்கள் ஒங்க மேலயே இறங்கும் மாமா...என்றான் மாப்பிள்ளை.

“டேய், தேடி எடுத்து தர்ர சோம்பேறி பட்டுக்கிட்டு, இப்படியெல்லாம் அரிவியல் காரன் சொல்ற மாதிரி கத சொல்லக்கூடாது மாப்ள”... என்றார்.

“இல்ல மாமா...பேப்ரோட   கூட வருமே?..........அந்த புத்தகத்துல போட்டு இருக்காங்கே மாமா.......அதத்தான் சொன்னேன்மாமா...என்றான் மாப்பிள்ளைக்காரன்.

“அடப் போடா,  பக்கத்த நெரப்புவதற்க்காக அவிங்க எதையாவது ஔறி கொட்டுவாங்கே....அதப்போயி நம்பிகிட்டு............... நம்ப கிட்ட எது இருக்கோ அதத்தாண்டா பயன்படத்தனும்.....சரி..... கருப்புக் குடை வேண்டாம் என்றால் கருப்பு கண்ணாடி அணியாலாம்மா.............

”கருப்பு கண்ணாடியப்பத்தி ஒண்ணுமே போடலியே மாமா....”

“அதெப்படி போடுவான்...பத்தரிகைகாரன் வேலையே அதுதாணேடா.........
ஜனநாயகத்தின் நாலாவது துண்ன்னு சொல்லுவான்.......ஜனநாயகத்தை காப்பாத்த  ஓட்டு போடுங்கன்னு சொல்லுவான்.  கட்சி மாறிகள் மாதிரி இவனுங்களும் கட்சி மாறுவான்  ஓட்டு வாங்கிப்போயி ஜனநாயகத்த   நட்டமா நிறுத்தப்போற அந்த நல்ல வெண்ணயின் வண்ட வாளங்களை சொல்ல மாட்டான்.  எல்லா வெண்ணெயும் நல்ல வெண்ணெய்களா இருக்கேடா  அதுக்கு மாற்று எண்ணடான்டா சொல்லமாட்டான் அதுமாதிரி தாண்டா இதுவும் என்றார்.

மாப்பிள்ளக்கு மாமா சொன்னது புரிவது மாதிரி இருந்தது........குடையை தேடி கண்டுபிடித்து கொடுத்தான்...

4 comments :

 1. எல்லாக் கட்சி விளம்பரம்
  வேணும்,அரசு விளம்பரம் வேணும் ...காசு பார்க்கிறது தானே அவங்க குறி !
  த ம 1

  ReplyDelete
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 3. காசு பார்ப்பதுதான் எங்கள் குறின்னு பட்டவர்த்தனமாக சொல்லிட்டு போக வேண்டியதுதானே. நாங்க நாலாவது துண் மட்டை கட்டைன்னு ஏன்? பினாத்தினும் ஜீ

  ReplyDelete
 4. அப்படியே !!! ஆகட்டும் நிகண்டு.காம்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com