பக்கங்கள்

Tuesday, April 22, 2014

என்னப்பாத்தா..........கேட்ட.........???நல்ல காலத்திலே பொல்லாத காலமாக தூங்க முடியாம,தூக்கந்தான் வராம.. தவிக்கும் தூங்கா நகரத்தின் ஒரு பகுதி பெரியார் நிலையம்...

அதிகாலை 5.30 மணி அளவில் வழித்தடம் 30 எண் கொண்ட ஒரு பேருந்து ஒன்று கூட்டமில்லாமல் ஒண்றிரண்டு பேருடன் மேற்கு புறமான பாலத்தில் மெதுவாக சென்றது.

அதன் ஓட்டுநர் எவ்வித பரபரப்பு இல்லாமல் பாலத்தை கடந்து  பேருந்தை ஓட்டிச் சென்றார். மொசகுடி பங்களா என்றும் டிராவல்ஸ் பங்களா என்றும் டி.பி. பங்களா என்றும் டிபி மெயின்ரோடு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ரோட்டைக் கடந்து. நிற்க வேண்டிய நிறுத்தத்தில் ஏற வேண்டிய பயணிகள் இல்லாததால் வேகமெடுத்து அரசரடியை தாணடியது

பேருந்து நடத்துனரோ ஏறிய பயணிகள் இருவருக்கும் பயண சீட்டை கொடுத்துவிட்டு சுறு சுறுப்பாக நின்று கொண்டு இருந்தார்.

பேருந்து அரசரடியைத் தாண்டி காளவாசலை நெருங்கிய போது ஒருவர் ஓடியபடி பேருந்தில் ஏறினார். நடத்துனருக்கு அருகில் நின்றதால் நடத்துனர்
பயணசீட்டுக்கு காசுக்காக கையை நீட்டினார்.

ஏறியவரோ... நா...ன் போலீசு...... என்றார்.

நடத்துனரோ...... காலையிலே ஓசி போனியா....என்றபடி மனத்துக்குள் நிணைத்தவராக......... ஏறிய பயணி போலீசு மாதிரி தெரியாததால் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.

கோபம் கொண்ட போலீசு என்று சொன்ன நபர்... ஏண்டா....என்னப் பாத்தா...கேட்ட என்ற மாதிரி  “பளார் .” என்று ஒரு அறை விட்டார்.

“பளார்” அறையை பெற்ற நடத்துனர்  கத்த ஆரம்பித்துவிட்டார்.

பேருந்தில் ஏறிய நபர்க்கும் நடத்தனருக்கும் பயண சீட்டில் வாக்குவாதம் எற்பட்டு கொண்டு இருப்பதை கவனித்துக் கொண்டே மெதுவாக ஓட்டி வந்த நடத்துனர்.

 “பளார்” என்று நடத்துனர்..வாங்கியதும் சட்டென்று பேருந்தை நிறுத்திவிட்டு அவரும் சத்தம் போட ஆரம்பித்தவிட்டார்.

“பளார்” விவகாரம் அறிந்ததும் அடுத்தடுத்து வந்த பேருந்து ஓட்டுனர்களும் பேருந்தை ஆங்கங்கே நிறுத்திவிட்டு அணி சேர்ந்தனர்.

அணி சேர்ந்தவுடன்..“நடத்துனரை தாக்கிய போலீசை கைது செய்” என்று கோஷங்களும் மறியலும் நடைபெற்றது.

“பளார்” பரபரப்பு பற்றி செய்தி அறிந்ததும்  பக்கத்தில் இருந்த இரு காவல் நிலையங்களிலிருந்து போலீசார் களும், பொக்குவரத்து துணை மேலாளரும்,பொது மேலாளரும்  சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

தடியடி எதுவும் நடத்தாமல் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் “பளார்”விட்ட போலீஸ் அதிகாலையிலயே போதையில் இருந்ததாக கூறி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்,

நடத்துனர்.“பளார்” அடி வாங்கியதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்..

முழு விசாரனைக்கு பொறவு “பளார்” விட்ட போலீசு மீது போலீசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பிறவு, ஆங்கங்கே...குண்டக்க..மண்டக்கா நிறுத்தி இருந்த பேருந்துகள் “நாங்க  யாரு.”ன்னு சொன்ன மாதிரி...சர்ர்ரு.....புர்ர்ரன்னு புகையை கக்கியபடி உருண்டு ஓ......ஓ.......ஓடின.............


5 comments :

 1. வெள்ளனவே காமெடியாவுல இருக்கிது

  ReplyDelete
 2. வெள்ளனவே காமெடியாவுல இருக்கிது

  ReplyDelete
 3. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 4. திரு.hameedu jamanஅவர்களுக்கு தூங்கா நகரத்தின் காமொடி இது....நன்றி!

  ReplyDelete
 5. திரு.நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் அவர்களுக்கு மீண்டும் முயல்க என்ற பதிலுக்கு ஏற்ப ..,பலமுறை முயன்றும் என்னுடைய மனு தங்களின் அலுவலகத்தால் தள்ளுபடி செய்யபட்டது..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com