வெள்ளி 25 2014

ஆளுவது அதிகார வர்க்கம்! ஆடுவது தேர்தல் நாடகம்!

உலகை குலுக்கிய பத்து நாட்கள் (அக்டோபர் திரைப்படம்) – வீடியோ!
படம் வினவு.

தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டங்கள் ,திட்டங்கள் போடுவதும், அதை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம் அதை நடைமுறைப்படுத்தி நிர்வகிப்பதுமான இரட்டை ஆட்சி முறைதான் இந்திய நாட்டில் பிரிட்டீஸ் காரன் காலந்தொட்டு ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கிறது.

இத்தகைய  ஜனநாயக இரட்டை ஆட்சி முறையில் ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் செய்யும் லஞ்ச ஊழல்கள், முறைகேடுகள்,அராஜகங்கள்,அடக்குமுறைகள் போன்ற வற்றிக்கு பின்னே
ஜனநாயகம் என்ற வலைக்குள் ஒரு பெரிய கொள்ளைக்கூட்டமே ஆதாயம் அடைகிறது.

இந்தக் கொள்ளைக்கூட்டம்தான். இந்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகள்
இவர்கள் அந்நிய- பன்னாட்டு ஏகபோக தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்நாட்டை கொள்ளை அடிக்கவும் கொளுக்கவும். இந்திய நாட்டின் ஏராளமான விளை நிலங்களை வளைத்து குவித்து கொண்டு இருக்கின்றன.

இவர்களின் சுரண்டல்களையும் கொள்ளைகளையும் பாதுகாப்பதற்குத்தான். இந்நாட்டின்  போராடும் கூலி-ஏழை விவசாயிகள் தொழிலாளர்களை  ஒடுக்குவதற்கும் இவர்களின் நலனை பாதுகாப்பதற்கும்  சேவை செய்வதற்கும்தான் ஜனநாயகம்,தேர்தல்  உரிமை,கடமை என்கிற பெயரில் ஓட்டுகட்சிகளும், அதிகாரிகளும் நாடகமாடுகிறார்கள்.

விவைாசி உயர்வு, வேலைவாய்ப்பினமை, போன்ற அத்தியாவசிய மானவற்றிக்கு இவர்கள் வழியில் மனு கொடுத்தும் பலன் கிடைக்காத போது  போராடினாலோ, தடியடி ,துப்பாக்கிசூடு ,பொய்வழக்கு என்றுநடத்தி அடக்குவது வாக்காள மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரவர்க்கமும் போலீசும்தான்.

உலகத்திலே பெரிய ஜனநாயக நாடாக பீத்திக் கொள்ளும் இந்திய ஜனநாயக நாட்டின் இந்திய அரசியல் சட்டமோ மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு குடியிருப்பு கல்வி,மருத்துவம்,போன்ற அடிப்படை உரிமைகளை அது உத்தரவாதம் செய்யவில்லை.

ஆனால், பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்கள், அவற்றின் தரகர்களான தரகுமுதலாளிகள்,  மற்றும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக சொத்துரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இவர்களின் சுரண்டலும் கொள்ளையும் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் இவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது   இவர்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்க்காகத்தான் போலீசும் அதிகாரவர்க்கம் மற்றும் நீதிமன்றங்களும்  அடக்குமுறை போன்றவற்றை ஏவி பாடுபட்டு சேவை செய்கிறது.

 நடத்துகிற தேர்தல்களை ஜனநாயகத் தேர்தல்களை் என்று கூறி மக்களை ஏய்க்கிறது. தரகுஅதிகார முதலாளிகளையும்,நிலப்பிரபுக்களையும் இவர்களுக்கு சேவை செய்கிறவர்களையும் பாதுகாக்கும் சர்வதிக் காரத்துக்கான  உரிமைதான் இந்தத்தேர்தல்கள்.

இந்தச் சர்வாதிகாரத்தை தெரிந்தோ தெரியாமலோ  அங்கீகரித்து ஓட்டு போடுவது என்பது இந்த போலி ஜனநாயகத்தை பாதுகாத்து நியாயப்படுத்துவதற்கு ஒப்பானது.

தற்போது நிலவும் இரட்டை ஆட்சி முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு  சட்டதிட்டங்களை நிறைவேற்று வதற்கே உரிமை உள்ளது.(சில சட்டங்கள் இந்த பிரதிநிதிகளுக்கு தெரியமலே நிறைவேறும்) இந்த பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறை படுத்துவதற்கும்
கிடப்பில் போடுவதற்கும் இந்த அதிகார அரசு நிர்வாகங்களுக்கே அதிகாரம் உள்ளது.

இப்படி உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் தரகுஅதிகாரமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதாயமாக இருந்தால் உடனே நிறைவேறுவதும், மக்களுக்கான அடிப்படை திட்டங்களாக இருந்தால் கிட்ப்பில் போடப் படுவதைப்பற்றியும் எவரும் ஒன்றும் செய்யமுடியாது.

இதற்கு மாற்றாக.தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே சட்ட திட்டங்களை இயற்றவும்,இயற்றிய சட்டங்களை அமுல்படுத்தவுமான அதிகாரமுள்ளவர்களாகவும்,தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்யும்போது எந்த மட்டத்தில் இருந்தாலும், ஊழல். முறைகேடுகள், போன்ற குற்றமிழைத்தால்  அவர்களின் பதவி,பொறுப்புகளை ரத்து செய்துவிட அதிகாரம் அளிக்கும் தோதலே ஜனநாயகத்தேர்தல் ஆகும்.

இத்தகைய புரட்சிகரமான ஜனநாயகத் தேர்தலின் ஆட்சியிலேதான் அணைத்து மட்டங்களிலும்  மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் மக்களுக்கு பொருப்பானவர்களாக, சேவை செய்யக்கூடியவர்களாக, மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்களாக இருக்கமுடியும்.

இத்தகைய ஆட்சிமுறையினைக் கொண்ட தேர்தலே உண்மையான ஜனநாயகத் தேர்தலாகும். இந்தத் தேர்தலினால் நடத்தப்படும் ஜனநாயகம் உண்மையான ஜனநாயகமாகும்.

இப்படி இல்லாத எந்தத் தேர்தலும் போலித் தேர்தலே அன்றி ஜனநாயகத் தேர்தலாக இருக்க முடியாது.


நன்றி! புதியஜனநாயகம்.

http://www.vinavu.com/2011/11/07/10-days-that-shook-the-world/

2 கருத்துகள்:

  1. இப்படி எல்லாம் குடிமகன் யோசித்து விடக் கூடாதுன்னுதானே தெருவுக்கு தெரு மதுக் கடையை திறந்து வைத்துள்ளார்கள் ,சகல் சீர்கேடுகளை அனுமதிக்கிறார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. குடிக்காதவர்களான நாம யோசிப்போம்ஜீ

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...