திங்கள் 28 2014

ஜோடி மைனாவில் ஒன்றைக் காணோம்...........


ta.wikibooks.org













அடித்து பிடித்து எங்கப்பன்கூடப் பிறந்த சித்தப்பன்காரனுடனும் அவன்பொண்டாட்டி பிள்ளைகளுடனும்,  வழக்கு தொடுத்த என்அப்பனின் பண்ணையாரையும் எதிர்த்தும் போலீஸ ஸ்டேசனுக்கும் விடாமல் அலைந்தும்  என்இடத்தில் வீட்டருகே ஒரு கோயிலைக் (கழிப்பறை-கக்கூஸ்) கட்டிவிட்டேன்.

வீட்டோடு சாமி கும்பிட(வெளிக்கு போக கழிப்பறை) கோயிலு இருந்தாலும் பழைய பழக்க தோஷத்தின் காரணமாக வாரத்திற்கு ஒரு முறை,சற்று தொலைவில் உள்ள வயல்வெளிக்கு  நடை பயணம் செல்வேன்.

நடை பயணத்தின் போதே.நான் வழக்கமாக சாமி கும்பிடும்(வெளிக்கு இருக்கும்) இடத்தில் அமர்ந்து சாமி கும்மிட்டுகிட்டு இருக்கும்போது சற்று தொலைவில் இரண்டு மைனாக்கள், என்னைக கவனித்தபடி கிசு கிசுத்தவாறு  களிப்புடன் மெல்ல பூநடை நடை பயின்று கொண்டு இருந்தன.

நானும் அந்த இரண்டு மைனாக்கள் என்னைப் பார்த்து பயப்படாமல்.என்னை ஒரு பொருட்டாக  மதிக்கவில்லை என்பதற்க்காக கோபம் கொள்ளாமல் விறுட்டென்று எழுந்து நிற்காமல்.. அதுகள் பூ நடை நடைந்து நடை பயில்வதை பார்த்தவாறு நெடு நேரம் வரை ஆடாமல் அசையாமல் இருந்திருந்தும். எதன் பொருட்டோ.. ரெண்டும் விசுக்கென்று பறந்து சென்றன.

அந்த ரெண்டு மைனாக்களும் காதல் மொழியோ..அல்லது வேறு ரகசியமோ கிசுகிசுத்தவாறு பூநடை நடப்பதையும். இடையிடையே என்னைக் கவனிப்பதையும் எனது செல்போனில் படம் புடிக்க ஆசை இருந்தாலும்..

என்னில் சிறு அசைவு ஏற்பட்டாலும் அது அதுகளுக்கு இடைஞ்சலாக வோ பயத்தையோ ஏற்ப்படுத்தி விடக்கூடாது என்பதற்க்காக என் ஆசையை முறித்துக்கொண்டேன.

பிற்பாடு.உள்ளாடையை கழற்றி கையில் பிடித்தக் கையோடு, பம்பசெட்க்கு அருகில்சென்று கைகால்களை கழுவிவிட்டுக்கொண்டு திரும்பிய நேரம்.

அந்த ரெண்டு மைனாக்களும் எனக்கு கேட்கும்படியாக சவுண்டு விட்டபடி எனக்கு முன்பாக சென்று,நான்செல்லும் வழித்தட பாதையில் அமர்ந்தது. முன்பு போலவே, பூ நடை பயில்வதும், தலையை சிலிப்பி என்னைக் கவனிப்பதும் தங்களுக்குள் கிசுகிசத்தவாறு தரையை கொத்துவதும் நிமிர்வதுமாய் இருந்தது.

என் மிதியடி சத்தத்தால் அலறியடித்து பறந்துவிடக்கூடாதென்பதால் நடையை நிறுத்தி நின்று விட்டேன.

திடிரென்று  எனக்கு எதிர் திசையில் ஓடிவந்த ஒரு நாய்,என்னைக் கண்டதும்  தன்வழிப்பாதையை மாற்றி மைனாக்கள் இருந்த  பக்கம் திரும்பியது.

நாய் ஓடி வருவதைக்கண்ட ஜோடி மைனா ஒன்று சட்டென்று சிறகைவிரித்து பறக்க..,அதனைத் தொடர்ந்து மற்றொன்றும் சிறகை விரித்து பறந்தது.

நானும் வீட்டுக்கு வந்தபிறகு அதுகளை,அவைகளை மறந்துவிட்டேன்.

நேற்றைய வாரம்  ஞாயிற்றுக்கிழமை அந்த வயல்வெளிகளை அடைந்தபோது தான் இரண்டு மைனாக்களின் நிணைவு வந்தது. நிணைவு வந்தவுடன் அவைகளை தேடினேன்.வழக்கமான சாமி கும்பிடும் இடத்தில் சாமி கும்மிட்டவாறே அவைகளை தேடினேன். என் கண்களுக்கு தென்படவில்லை.

எழுந்திருக்க முயன்றபோது ஒரு மைனா மட்டும் பறந்து வந்து தரையில் நின்றது. தரையை தொட்டவுடன் அது பூ நடை பயிலவில்லை. ஓரே இடத்தில் நின்றது. வேண்டா வெறுப்பாக தரையை தொட்டது.

சற்று சந்தேகத்துடன் கண்களை கூர்மையாக்கிவிட்டு இன்னொரு மைனாவை தேடினேன். சுற்றியுள்ள இடங்களின் அக்கம்பக்கங்களை கவனித்தேன். இரண்டில் ஒன்றைக் காணவில்லை

ஜோடி மைனாவில் ஒன்றைக் காணாதது எனக்கு என்னவோ போலிருந்தது. அதை போக்க சட்டென்று எழுந்து நின்றேன்..என் சந்தேகம் உறுதியாயிற்று.
நான் எழுந்தவுடன் பதறியடித்து ஒரு மைனா மட்டுமே பறந்தது.வருத்தப்பட்டு போனேன்

என்ன நடந்திருக்கும்...அசை போடலானேன். சாதிப்பிரச்சனை ஏற்ப்பட்டு இருக்குமோ...? சாதிவெறி கொலை வெறியாய் மாறியிருக்குமோ....??மைனாக்கள் காதலினால் ஜோடி சேர்ந்து திரிந்தது. சாதிவெறி கொண்ட மனிதர்களின் கண்களை உறுத்தியிருக்குமோ.......???

சிந்திக்க தெரிந்த மனித இனத்தில் ஒப்பற்ற போற்றுதலுக்குரிய தாய் பாசமே...
சாதி வெறிபாசமாய் மாறி .தாய் பாசத்தையே கேடாக பயன்படுத்தி பெற்று வளர்த்த மகளையும் மகளின் கருவிலே வளரும் உயிரையும் கொன்று சாதிவெறியை நிலைநாட்டும்போது........

அய்ந்தறிவே பெற்றிறுக்கும் அந்த மைனா..சாதிவெறியின் கொடுருரத்தால் மாய்ந்திருக்கலாம்..................

சோகமாய் பறந்த அந்த ஒற்றை மைனா பறந்த திக்கை நோக்கி நடந்தேன். கண்ணில்பட்ட அந்த ஒற்றை மைனாவும் காணவில்லை.

மறு ஞாயிறை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். அந்த ஒற்றை மைனாவும் என் கண்ணில் தென்படுமா.........??? அல்லது நாயக்கன் கொ்ட்டாய் இளவரசன் மாதிரி......... மறைந்து போகுமா என்று.ஃஃஃ??????????????



3 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  2. மைனாககளைக் கொல்லும் வெறியர்கள் எண்ணிக்கை சமூகததில் மைனாரிட்டி தான் என்பது ஆறுதல் தரும் செய்தி !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. மைனாரிட்டிகளும் இல்லாது போனால் ரெம்பவும் நிம்மதியான செய்தியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...