பக்கங்கள்

Monday, April 21, 2014

லோட்டாவுமில்லை....நேட்டோவுமில்லை...

புனிதமாக்கப்படும் தேர்தல்
http://www.vinavu.com/2014/04/14/psuedo-democratic-elections-cartoons/
வாக்காள பெரு மக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!!

உலகத்திலே பெரும் ஜனநாய்க நாடான இந்தியாவில் மக்களின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துவதற்க்காக 16வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சில இடங்களில் நடந்து முடிந்து ஓட்டுப் பெட்டிகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் இரு தினங்களில் நடைபெற இருக்கிறது.

கல்தோன்றா..மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடீயான தமிழ்க்குடியில் ஏப்ரல் 24ல் சித்திரை 11-ல் வாக்கு பதிவு நடைபெறப்போகிறது.

இந்தத் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ஒரு கட்சியை சார்ந்தவங்க பிரதம வேட்பாளரு இவர்தான்னு ஒரு ஆள அறிவிச்சு தேர்தல் பரப்புரை செய்தாங்க........

இன்னொரு கட்சிகாரங்க....யாரு பிரதமருன்னு அறிவிக்க முடியாம அல்லாடிக்கிட்டு இருந்தாங்க.. கடைசியில அவுங்களும்  தங்களுடைய அருமைகளை சொல்லி பரப்புரை செய்துகிட்டு வாராக...

மூத்த குடியர்கள் வாழும் தமிழ் நாட்டிலோ...கூட்டணி பேரம் அமையாமலும் தேர்தல் சீட்டு கிடைக்காமல்....அந்தக் கட்சியில் இருப்பதா....வேணாமா என்று குலுக்கு சீட்டு போட்டு பார்த்தும் எதிலும் முடிவு கிடைக்காமல் சில இடதுவலதுகள்  குண்டியில எத்து வாங்கிய பின்னும் சொரனை கெட்டு வாழ வழியின்றி தனிதனியாக போட்டியில் குதித்து தங்களுடைய பராமக்(அக்)கிரமங்களை  ரெண்டு வருஷமாக பருவ மழை தவறிய போதும் முளைக்க வழியில்லாத போதும் அள்ளி விதைக்கின்றன.

ஆக.. இந்த 16வது தேர்தலில் 5முனை போட்டியாககட்சிகள் தேர்தல் போட்டியில் குதித்து உள்ளன.

ஒவ்வொரு கட்சிக்கும் சொந்தமான பல சேனல்கள் கொண்ட தொலைக்காட்சிகளும்,ஒவ்வொரு கட்சிக்கும் சார்பான கொள்கை விளக்க செய்தி ஊடகங்களும் தங்களின் கொள்ளை வசதிக்கேற்ப தொழில் நுட்ப வசதிகளுடன் தங்களுடைய கொள்ளைகளையும். இனிமேல் செய்யப்போகிற கொள்ளைகளையும் பட்டியலிட்டு பரப்புரை  செய்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தக் கட்சிக்காரனைப்பற்றி அந்தக் கட்சிக்காரனும்.அந்தக் கட்சிகாரனைப்பற்றி இந்தக் கட்சிக்காரனும் தங்கள் தங்கள் வண்டவாளங்களைபற்றி  அவர்களுக்கு தெரிந்தே அள்ளி  வாக்காளர்கள் ஆகிய உங்கள் முன்னால் எந்தவொரு குற்ற வுணர்ச்சி இல்லாமல் திருடனை பற்றி திருடனே பிடித்த கதையை வாக்காளர்கள் ஆகிய நீங்களே வாய பொளக்கும் அளவுக்கு அள்ளி தொளிக்கிறார்கள்.

ஆக. இவர்களின் பரப்பரையின்படி எந்தக் கட்சியும் ,அந்தக் கட்சியின் சார்பாக போட்டிடும் எந்தவொரு வேட்பாளனும் நல்லவனில்லை என்பதும் எவன் வந்து ஆண்டாலும்  இதுதான் கதி மோட்சம் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இந்த  மனநிலையில் இருக்கும் வாக்காளரை தாசா செய்யும் நோக்கத்தில் என்னையும் ஒரு வேட்பாளானாக அனைத்து தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளேன்.

நான் நீங்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் லோட்டா அல்ல, அதே சமயத்தில் ஒலக ரவுடியான அமெரிக்காவின் கூட்டுப்படையான நேட்டோவும் அல்ல....பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நோட்டா.....என்றால் அதுவுமில்லை... யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டாதான் நான்.

இந்தத் தேர்தலில் நான் நிறுத்தப்பட்டுள்ளது காலத்தின் கட்டாயம். நான் மற்ற பணக்கார கட்சிகளின் சார்பாகவோ...சுயேச்சைகளின் சார்பாகவோ நிறுத்தப்படவில்லை.... வாக்காளாராகிய  உங்களின் கோபத்தை தணிப்பதறக்காக..மடை மாற்றம் செய்வதற்க்காகத்தான் நிறுத்தப்
பட்டுள்ளேன்.

என்னை நிறுத்தியவர்களும் சரி,என்னை விறும்புகிறவர்களும்சரி.எனக்காக பரப்பரை எதுவும் செய்ததில்லை. நான் எந்தவொரு வாக்கு உறுதியையம் நான் தரவில்லை. என்னை விரும்பி என்க்கு ஓட்டளித்து பெருவாரியான வெற்றி அளித்தாலும் அதனால் வாக்காளர்களாகிய உங்களுக்கு எந்த நன்மையும் என்னால் விளையபோவதில்லை........... எனக்கு நீங்கள் அளித்த ஓட்டுக்கள் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை..

ஆகவே, நோட்டாவான எனக்கோ....அல்லது மற்ற கொள்ளக்கார கட்சிகளுக்கோ ஓட்டு அளித்தால் ஒரு மன்னும் விளையப்போவதில்லை.செக்கு மாட்டுத்தனமாக அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை வரும் தேர்தலால் ஊழலை ஒழிக்கவும் முடியாது.. ஊழில் திளைத்தவர்களை தண்டித்துவிடவும் முடியாது. சமீபத்திய உதாரணம் வாய்தா ராணி வழக்கும் வாய்தா ராஜாக்களான நீதிபதிகளுமே நல்ல உதாரணம்.

ஆக...தமிழகத்து வாக்காளர்களே!.....மாத்தி மாத்தி ஓட்டு போடுவதே தங்கள் தலைவிதி என்று நொந்து போகாமல். வெந்ததை தின்று விதி வந்து சாவோம் என்று எண்ணாமல் ...உழைக்க ஏன்?வேலையில்லை....குடிக்க ஏன்?தண்ணியில்லை..ஏன்?.  கல்வி இல்லை? மருத்துவ வசதி இல்லை ?நிம்மதியான வாழ்க்கை இல்லை. சந்தோசமான இறப்பு இல்லை இதற்கு காரணம் என்ன? யார்.இதற்கு பொறுப்பு??ஃ என்பதனை சிந்திப்பதற்க்காக.முதல் வேலையாக  முதல் சுழியாக  ஓட்டுப் போடுவதை நிறுத்துங்கள் சிந்திக்க முற்ப்படுங்கள்........

அந்த சிந்தனை மூலமாக வருங்கால சமுதாயத்திற்கு நல்லதொரு தொடக்கமாக அமையட்டும் என்று கேட்டு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றியை தெரிவித்து இத்துடன் என்பரப்புரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி!!1

5 comments :

 1. லோட்டாவுமில்லை<<<<<<.


  ReplyDelete
 2. லோட்டாவுமில்லை

  ReplyDelete
 3. அப்ப வாக்களிப்பது நம் உரிமைன்னு சொல்றதெல்லாம் வெறும் கண் துடைப்புதானா?
  த ம 1

  ReplyDelete
 4. வாங்க ஹமிது ஜமான் அவர்களே! வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 5. உங்களுக்கே கண்துடைப்புன்னு தெரியாதப்போ சாதாரண மக்களுக்கு என்னத்த புரியப்போகுது...ஜீ

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com