திங்கள் 07 2014

நாயைக் குளிப்பாட்டி...நடு ரோட்டில் நிற்க்க வைத்தாலும்........

கம்பீரம்
படம் வினவு


















வெயிலின் கொடுமை  மாலை வேளையில் சற்று தனிந்தது. அவ்வேளையில் வேலைகள முடித்துவிட்டு வீட்டீற்கு திரும்பி வந்து கொண்ட இருந்த நேரம்.

அடாது மழை பொழிந்தாலும்,நான் டூவீலர் ஓட்டும்போது பறப்பதில்லை.அதற்க்காக மற்ற வண்டிக்காரர்கள் என்னை ஓரம் கட்டி விடும் அளவுக்கு மெதுவாகவும் ஓட்டுவதில்லை.  அதே நேரம் பறப்பவர்களுக்கு என்னால் அவர்களுக்ககு எரிச்சல் ஏற்படும் நிலையையும் எற்ப்படுத்துவதில்லை.

டூவீலரில்  கிழக்கிலிருந்து வந்து கொண்டு இருந்த நான்... மேற்க்காக திரும்ப வேண்டும் தெற்கு வடக்காக உள்ள  பைபாஸ் ரோட்டில் தெற்க்கிலும் வடக்கிலும் இடைவிடாமல் ஆறு சக்கரமும்,நாலு சக்கரமும் மூன்று சக்கரமும் இரு சக்கரமும் கொஞ்சம்கூட கேப்பு விடாமல் சென்று கொண்டு இருந்தன.

திரும்புவதற்க்காக   சீர் இல்லாமல் இஷ்டத்துக்கு நின்று கொண்டு இருந்த டூவீலர் வீரர்கள்,பொறுமை தாங்காமல், கிடைக்கும் சிறு இடைவெளிகளில் புகுந்து விரைவாய் சென்றனர்.

நானோ....பொறுமை காத்து பொருமையாக கடந்து வந்தேன். திரும்பி வடக்காக வந்த சிறிது தூரத்தில்.. கருப்பு கண்ணாடியுடன் காக்கி சட்டை அணிந்த கொழுத்த உருவம் ஒன்று....

ரோந்து வேனில்  சாய்ந்து தொப்பியை காற்றுக்காக வீசிக் கொண்டு இருந்தது. சட்டென்று அந்த உருவம் கையை நீட்டி  என்னை ஓரங்கட்டச் சொன்னது.

எனக்கு பின்னால் வந்த டூவீலர்கள் ஓரங்கட்ட வாய்ப்பு கொடுக்காமல் பறந்து சென்றதால்.........என்னையும் தவறவிடக்கூடாதாவாறு ரெம்ப பாதுகாப்புடன்  என்னை பாதுகாத்தது அந்த கொழுத்த உருவம்.

ஓரமாய் சென்று வண்டியை நிறுத்திய நான்.......... இடுப்பில் கை  வைத்தப்படி அந்த கொழுத்த உருவத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன.

அந்த கொழத்த உருவமமோ....என்னை ஓரங்கட்டிவிட்ட மகிழ்ச்சியில்....எனக்கு துனையாக  வண்டிகளை ஓரங்கட்ட  நடு ரோட்டுக்கு நகர்ந்தது.

இதற்கு இடையில் ரோந்து வண்டிக்குள் ஒட்டுநர் இருக்கையில் இருந்த இன்னொரு கொழுத்த உருவம். என்னைப்பார்த்து சவுண்டு விட்டது. அது விட்ட சவுண்டு  என் காதுக்குள் எட்டாததால் ...வேன் முகப்பு கண்ணாடி வழியாக சைகை காட்டியது.

சைகையை கவனித்த நான் அருகில் சென்றேன். வண்டி ஆர்சியை எடு,இன்ஸ்சுரன்ஸை காட்டு, என்றது. வண்டிக்குள் சென்று எடுத்து வந்து
காண்பித்த போது கொழுத்த உருவத்தின் முகம் சோர்வாகியது  ஓட்டுநர்  உரிமம் எங்கே என்று கேட்டபோது  அது முகம் மலர்ந்தது.

திரும்ப வண்டிக்குள் வந்து ஓட்டுநர் உரிமத்தை தேடிக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து இன்னொரு டூவீலர் ஓரங்கட்டப்பட்டது. சிறிது நேர தேடலுக்குப்பின் ஓட்டுநர் உரிமத்தை காட்டினேன்.

ஓட்டுநர் உரிமத்தை வாங்கிப்பார்த்த உருவம் வேண்டுமென்றே கீழே நலுவ விட்டது. அது அருகில் வந்து  நின்று கொண்டு இருந்த கருப்பு கண்ணாடி அணிந்திருந்த உருவத்தின் பூட்ஸ் காலுக்கு அருகில் விழுந்தது.

சுதாரித்த நான் சிறிது நேரம் நின்றென்.நான் நிணைத்தது மாதிரியே அந்த கண்ணாடி அணிந்திருந்த காக்கி சட்டை் உருவம் திடிரென்று நடு ரோட்டுக்கு ஓடி ஒரு டூவீலரை மடக்கி பிடித்து ஓரங்கட்ட ஓடியது. அந்த நேரம் நான் குனிந்திருந்தால் பூட்ஸ் காலால் எத்து வாங்கியிருப்பேன். தெரியாமல் எத்து விட்டாலும் அது சாரின்னு கூட சொல்லாது.

பிறகு குனிந்து ஓட்டுநர் உரிமத்தை எடுத்தேன். காசு பறிக்க வழியில்லாததால் ஓட்டுநர் உரிமத்தை கீழே போட்டதாக பின்னால்தான் தெரிந்து கொண்டேன.
எனது அறிவுக்கு எதுவுமே லேட்டாகத்தான் தெரியும் ,புரியும்.

ஏற்கனவே, காக்கி சட்டைகளின் கைங்கரியத்தால்தான் என் காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டன. அத்தகைய அனுபவ பாடத்தால் அதுகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.

வெயிலில் வாடி களைத்துப்போயி கருத்துப்போன ஒருவரை மடக்கி பிடித்து ஓரங்கட்டியிருந்தது கருப்புக கண்ணாடி.

ஓரங்கட்டப்பட்டவரிடம் கருப்பு கண்ணாடியே  எல்லா ஆவணத்தையும் கேட்டது. அவரிடமும் வசூலாகவில்லை..

கொழுத்த இரு காக்கி சட்டைகளின் வசூலிருந்து தப்பிய   நானும் அவரும்  சேர்ந்தே  சற்று தள்ளி வந்தபோது   அவர் சொன்னார்.

மாலை வேலை ஆனதால் டீ குடிக்க வசூலில் இறங்கியிருக்கிறார்கள் என்றார்.

அவர்களுக்கு படி இருக்குமுல்ல என்றேன் நான்.

அந்த படிகளுக்குத்தான் இப்படியான வசூல் என்று விபரமாகச் சொன்னார்.

காலையில் டிபனுக்காக வசூல், மதியம் வசூல் சாப்பாட்டிற்க்காக,மாலையில் டீக்காக வசூல், இரவில் ஊத்துவதற்க்காக வசூல் என்றார்.

நானும் எதுவும் தெரியாத மாதிரி நிஜமாத்தானா....என்றேன்.

அட..ஆமங்க......நாா... பொய்யா சொல்றேன்..  விளக்குமாறுக்கு பட்டு குஞ்சம் கட்டியிருந்தாலும். என்னான்டு சொல்லுவீங்க...........விளக்குமாறுன்னுதானே சொல்லுவிங்க.

ஆமா.............

அது மாதிரி.... எவ்வளவுதான் சந்தனம் போட்டு நாயை குளிப்பாட்டி நடு ரோட்டில் நிக்க வச்சாலும்.........அந்த நாயின் குணம் மாறியா போயிடும்.
நாயும் மாறுவதில்லை.........நாயும் குணமும் மாற்ப்போவதில்லை......
என்றார்

நான் இடது பக்கம் திரும்புவதற்கு முன்பு வரை......சொல்லிக் கொண்டே வந்தார். அவர் அனுபவத்தை.................


2 கருத்துகள்:

  1. என் அனுபவம் ...ஒரு லேடி போலீஸ் coin போன் அருகில் 'ரெண்டு ஒரு ரூபா காயின் இருந்தா கொடுங்க 'என்றார் .நானும் அவர் கையில் இரண்டு ரூபாய் இருக்கும் போலிருக்குன்னு நினைத்து ஒரு ரூபாய் காயின் இரண்டைக் கொடுத்தேன் .அவர் வாங்கிக் கொண்டு போனில் பேசினார் ,பேசி முடித்தபின் என்னை திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டார் !
    இதை என்னென்று சொல்வீர்கள் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஆக.... ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும்அதுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவாகிறது.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...