சனி 03 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1)

படம் சித்திரவீதிக்காரன்.














முன்கதை---
                       


இன்ஸ்பெக்டர்தான் இருக்காருல சார், அவர பார்க்கிறேன் சார். என்றபோது,

நீயா....நேரடியா..கொடுத்தா.....எங்கள சத்தம் போடுவாறீய்யா.... பொறு நான் கேட்டு வந்து சொல்றேன் என்றார் ரைட்டர்.

அரை மணிக்கு மேல் காத்திருந்த அவர். மீண்டும் ரைட்டரை பார்த்து,”சார்,என்றார். பொறு...பொறு.....இன்ஸபெக்டர் பேசிக் கொண்டு இருக்கிறார்.  என்றார் ரைட்டர்.

இனஸ்பெக்டர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது.  பொறுமையுடன்  போலீஸ் நிலையத்துக்கு வெளியில் வந்து நின்றார். வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் இவரை இன்னும் ஓரமாக நிற்கச் சொன்னார்.

அப்போது. புத்தம் புதிய கார் ஒன்று போலீஸ் நிலையத்துக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து வெள்ளையும் சொள்ளையமாக தடித்த வர்கள் நான்கு பேர்கள் இறங்கினார்கள். இறங்கியவர்கள்.  நேராக இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றனர். போனில் பேசிக்கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் முகம்மலர அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ,எதிரே இருந்த நாற்காலியை சுட்டிக் காட்டி அமரச் சொன்னார்.

வந்தவர்களும் முக மலர்ச்சியுடன் நாற்காலியில் அமர்ந்து இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவை வாங்கி படித்து பார்த்த இன்ஸ்பெக்டர்.. படித்து முடித்துவிட்டு அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

வெளியே நின்று இவற்றையெல்லாம்  கவனித்துக் கொண்டு இருந்தவருடன்  புகார் கொடுக்க வந்த  மேலும் சிலரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்..

வெள்ளையும் சொள்ளையுமானவர்கள் வந்த காரியம் முடிந்துவிட்ட திருப்தியில் காரில் ஏறி மறைந்து விட்டனர். ரைட்டரை பார்த்தபோது வயர்லெஸ்ஸில் ஓவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ரைட்டர் ஓவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்து. பின் மெதுவாக அவர் மேஜைக்கு அருகில் சென்றார்.

ஏறெடுத்து பார்த்த ரைட்டர்,இவரை பார்த்து  மீண்டும் பொறு பொறு என்றபடி இவரின் மனுவை தேடிக்கொண்டு இருந்தார். மற்றவர்களும் இவரை தொடர்ந்து பின் சென்ற போது அவர்களையும் பொறு...பொறு என்று சைககை காட்டியபடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக..ஒவ்வொரு பேப்பராக எடுத்து ஒவ்வொரு போலீசுக்கும் கொடுத்து விவரம் சொல்லி முடித்த பிறகு,தொப்பியை தேடி எடுத்து தலையில் மாட்டிக் கொண்டு  வாங்கி வைத்திருந்த..புகார் மனுவை எடுத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றார்.

 சென்ற சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் கத்துவது கேட்டது. இன்ஸ்பெக்டரிடம் திட்டு வாங்கிய ரைட்டர் முனங்கியபடி தொப்பியை கழட்டியபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். ரைட்டரின் முகம் கோபமாக  தெரிந்ததால் புகார் கொடுத்தவர்கள் யாரும் அவர்க்கு அருகில் செல்லவில்லை.

பக்கத்தில் பிடித்து வைத்து அமர்த்தி இருந்தவர்களில் இருவரை ரெண்டு போலீஸ்காரர்கள்.  லத்தியால் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  உட்கார்ந்து இருந்த ரைட்டர் அடிவாங்கிக் கொண்டு இருப்பவர்களை பார்த்து இவரும் பேசிக் (கத்திக்) கொண்டே அவர்கள் அருகில் சென்று  இன்ஸ்பெக்டர் தனக்கு கொடுத்த திட்டுக்கு பதிலடி கொடுத்தார்.

பிறகு இருக்கையில் வந்தமர்ந்த ரைட்டரிடம்....சிறப்பு எஸ்ஐ ஒருவர்(எஸ்எஸ்ஐ) ,இன்ஸ்பெக்டர் சவுண்டு விட்டதைப் பற்றிக் கேட்டார்.

ரைட்டரோ....,“எஸ்எஸ்ஐ எல்லாம் புடுங்குறாங்கேளா....?.“என்பதை சுறுதி குறைத்து கிசுகிசுத்துவிட்டு.. ஒவ்வொரு எஸ்எஸ்யையும் கூப்பிட்டு ஒவ்வொருத்தரிடமும் வந்திருந்த மனுவை கொடுத்தார்.

வெளியே நின்றபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவரை,.,
கணேசன் என்று கூப்பிட்டார் ரைட்டர்.

ரைட்டர் கூப்பிட்டதும் அவரிடம் சென்ற போது ஒரு எஸ் எஸ்ஐயை காட்டி அவரிடம் செல்லுமாறு பணித்தார்.

கணேசன் புகாரை படித்துப்பார்த்த  சிறப்பு எஸ்ஐ வண்டி வச்சியிருக்கியா? என்றார்.

சிறப்பு எஸ்ஐ கேட்டதை புரிந்து கொண்ட கணேசன். இல்ல ...சார்..சைக்கிளல் வந்திருக்கேன் சார். என்றார்.

ஆட்டோ புடி என்றவர். இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக ...இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்றவர் நெடு நேரம் கழித்து வந்தார்.

சிறப்பு எஸஐ வெளியே வந்ததை பார்த்து அவரிடம் சென்றார் கணேசன்.

கணேசனைப் பார்த்த சிறப்பு எஸ்ஐ ரைட்டரிடம் ஏதோ சொன்னார். ரைட்டர் கணேசனைப் பார்த்து எந்த ஏரியா என்று கேட்டார்.கணேசன் தனது ஏரியாவை சொன்னதும் ரைட்டர் தனது செல்போனில் பேச ஆரம்பித்தார்.

தொடரும்............................







4 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

    2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

    தற்போது பதிவை இணைக்கலாம்.

    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  2. அப்புறத்தை இன்னைக்கு சொல்றேன்ஜீ

    பதிலளிநீக்கு
  3. இணைக்க முயல்கிறேன் நிகண்டு அய்யா..........

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...