ஞாயிறு 04 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(2)

முன்கதை.!.

1.ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.. - 5/2/2014 -

2.ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1) - 5/3/2014



ரைட்டர் செல்போனில் பேசி முடித்ததும். கணேசனை பார்த்து  உங்க 
ஏரியாவுல அம்பேத்கார்   சிலை இருக்குல     அங்க ஒரு போலீசு இருப்பாரு..
அவர போயி பாரு.அவரு வந்து விசாரிப்பாரு      ஏழு மணிக்கு மேல...இவர
 வந்து பாரு....என்று சிறப்பு எஸ்ஸ்ஐ சுட்டிக்காட்டினார்.


சிறப்பு எஸ்ஐயும் ஏழு மணிக்கு மேல என்னை வந்து பாரு....என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவர் . நாலைந்து தடவை உதை்த்தப்பின் ஸ்டார்ட ஆன பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.

காலை பத்து மணிவாக்கில்  புகார் கொடுக்க வந்த கணேசன். இன்ஸ்பெக்டர் வருகைக்காக காத்திருந்து பின் சிறப்பு எஸ்ஐக்காக காத்திருந்து ஒரு வழியாக 3மணிவாக்கில் தன் ஏரியாவில் உள்ள அம்பேத்கார் சிலையை நோக்கி சைக்கிளில் புறப்பட்டார்.

அம்பேத்கார் சிலை பீட்டுக்கு அருகில் வந்து பார்த்தால் டூவிலர்க்கு அருகில் பிளாஸ்டிக் சேர் காலியாக இருந்தது. பக்கத்து டீக் கடையில் விசாரித்தால் கவனிக்க வில்லை என்றார்கள். பக்கத்தில் டாஸ்மாக் கடை இருந்தது.. சந்தேகத்துடன் அங்கு போய் பார்த்தார். அங்கும் இல்லை..

காலையில் ஏற்ப்பட்ட கைகலப்பில்  ஏழரை மகன் திருமா வளவன்அடித்த அடியின் வலி இப்பொழுதான்  தெரிய ஆரம்பித்தது.. காலையில் சாப்பிடாததால் உண்டான கிறக்கம் பசியை உண்டாக்கியது. சைக்கிளை உருட்டியபடியே தன் வீட்டை நோக்கி நகர்ந்தார்.

தெரு நுழைவில் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள நாட்டாமை குருசாமியின் வீட்டின் முன் ஏழரைமகனும் அவன் பொண்டாடியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.இவரைக் கண்டதும் ஏழரை மகன் வளவன்..

குருசாமியிடம் ,நீ சும்மா இருப்பா அவன.அடப்புல போட்டு தள்ளுறேன் பாரு என்றான் இவரைப் பார்த்தபடி... அவன் தாயார் ராணியோ......நீ சும்மாயிரு  மச்சான். அவனவன் சூத்த அறுத்துவிட்டா......இருக்கிற இடம் தெரியாம இருப்பாங்கே மச்சான்  என்றாள்.

கணேசனோ,எதிர்த்து எதுவும் பேசாமல் கேட்காதவன் மாதிரி தன்வீட்டுக்கு வந்தான். தெருவில் குருசாமியின்  ஏவல் கூட்டத்தின் பெண்கள் அணி இவனைப் பார்க்காதது மாதிரி தெருவை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் விலகி சென்று வீட்டின் சுவரில் சைக்கிளை சார்த்தி வைத்துவிட்டு முகம் கைகளை கழவி விட்டு பேருக்கு கொஞ்சம் தண்ணியும் கஞ்சியும் குடித்துவிட்டு  போலீசை பார்க்க கிளம்பினார்.

தூரத்தில் வரும்போதே போலீஸ பீட்க்கு அருகில் ஒரு போலீஸ் அமர்ந்திருப்பதைக் கண்டதும்  விரைவாக வந்தார். வந்தவர் அந்த போலீசைக் கண்டதும்  வணக்கம் சொல்லி தன் பெயரைச் சொல்லி  போலீஸ் ஸ்டேசன் ரைட்டர் தங்களை பார்க்கச் சொன்னதை சொன்னார்.

ஒங்க வீடு எங்கே இரக்கிறது என்று கேட்டார். பக்கத்தில்தான் நடந்தே செல்லலாம் என்று அவர் சொன்னபோது  எழுந்து தொப்பியை மாட்டியபடி அவர்க்கு பின் நடந்து வந்தார்.

நடந்து வரும்போதே உன்னுடன் ச ண்டை போட்டவர்களின் பெயர்களை சொல்லு என்றார். 

தெருவுக்குள் நுழையும்போதே குருசாமியும்அவனின் வைப்பாட்டி ராணியும் நின்று கொண்டு இருந்தார்கள்.. வந்த போலீசிடம் அவர்களை காண்பித்தார்..

வந்த போலீஸ் உன் மகன்,கனவன்  எங்கே? என்றார். மகன் படிக்க சென்று இருக்கிறான்  வீட்டுக்காரர் வேலைக்கு சென்று இருக்கிறார்  என்றார்கள்.

வந்த போலீஸ் ,சாயந்தரம் ஏழு மணிக்கு.நீங்கள் இருவரும் உங்கள் மகனுடன். போலீஸ்ஸ்டேசனுக்கு வந்துவிடனும்  என்ன ...புரியுதா........என்றார்.

போலீஸ் வந்தததைக் கண்டதும் குருசாமியின் மகள். மற்றும் மருமகள்கள் இருவர் சேர்ந்து  தாங்கள் எதுவும் பேசவில்லை என்றும் இவர்தான் முதலில் சண்டையிட்டதாகவும் அசிங்கமாக திட்டியதாகவும் படிக்கிற சின்னப்பயலலை வம்புக்கு இழுத்து சண்டையிட்டதாகவும் தோசையை ஒரே புரட்டாக புரட்டி போட்டார்கள்.

வந்த போலீஸ் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு  ஸ்டேசனில் வந்து சொல்லுங்கள் என்றார். கணேசனையும் பார்த்துவிட்டு மாலை ஏழு மணிக்கு போலீஸ் ஸ்டேசனுக்கு வந்துடுங்க என்றார்.



தொடரும்....................











2 கருத்துகள்:

  1. கணேசன் அலைவதைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  2. அவருக்கு வேறு வழியில்லை அலைந்துதான் ஆக வேண்டியிருக்கிறது.ஜீ

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...