புதன் 07 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(4)

படம.இந்நேரம் .காம்











வீட்டுக்கு வரும் வழியில்  சண்டையைப் பற்றி  தெரிந்தவர்   என்னாச்சு என்று விவரம் கேட்டார்.

வழக்கப்படியே போலீசுக்காரன்கள் அவர்களுக்கு சாதகமாகத்தான் நடப்பார்கள் என்றார். குருசாமி மகன் தன் கட்சிக்காரர்கள் மூலமாக ஒன்னுமில்லாம ஆக்கிபுடுவான்.. என்று மேலும் கூறினார்.

நீதி,ஞாயம் எதுவும் கிடையாதா.......??? என்றார் கேட்டவர்.

நீதி,ஞாயம் எல்லாம் காசு உள்ளவனுக்குத்தான் என்றார் கணேசன்.

“அவிங்களும், எத்தனை நாளுக்குத்தான்  போலீசுகாரனுக்கு காசு கொடுப்பாங்கே என்றார் .

ஒருத்தன் ரெண்டு பேருன்னா திண்டாடுவாங்க.... இங்கே எனக்கு எதிராக  தெருவையே களமிரக்குவாங்கே  நாட்டாம தன் தனிப் பிரச்சனையை  பொதுப் பிரச்சனைன்னு  மாத்தி,என்றார்  வீட்டுக்கு இவ்வளவுன்னு வரி போட்டு வசூல் செய்து கொடுப்பாங்கே, அதுதானே அப்பயிலிருந்து நடக்குது என்றார் கணேசன்.

எத்தனை நாட்களுக்கதான் ஆடுவாங்க...அவிங்களுக்கு கேடு காலம் வராமலா..போய்விடும். என்றார் ஆறுதலாக...

என்னதான் போலீசுக்காரங்கே சொல்லுறாங்கே.............என்றார் மீண்டும்

நாளைக்கு காலையில வரச் சொல்லியிருக்காங்க.....அப்ப ராசியா போங்கன்னு சொல்லுவாங்க....என்றார் கணேசன்.......

நீ அடிச்சிருந்தா....ஊரே பரப்பி இருப்பானுக...என்றவர் ..டீ குடிக்க கூப்பிட்டபோது. வேண்டாம் வீட்டுக்கு போயி சாப்பிட்டுறுவேன் மறுத்துவிட்டு.. வீட்டுக்ககு கிளம்பினார் கணேசன்.

வீட்டீல் இருப்பவர்களிடம் தன்னை அடித்தவனை போலீஸ்காரர்கள் அடித்து திட்டியதாக... அவர்களுக்கு ஆறுதலுக்காக சொல்லி நாளைக்கு வரச் சொல்லியிருப்பதையும் இன்னவாறு சொல்வார்கள்  என்று சொல்லிவிட்டு அசதியில் சிறிது மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்தார்.

நல்லவேளை, எந்த மனஉளச்சலும், பரபரப்பும் பயமும் இல்லாமல்  நாளைக்கு என்ன சொல்லவாங்கே என்ற சிந்தனையும் இல்லாமல் நிம்மதியாக தூங்கினார் கணேசன்.


காலை பதினோறு மணி வாக்கில் போலீஸ் ஸ்டேசன் சென்றார். எல்லாம் முன்னேற்பாடாக  முடிவு பன்னிவிட்டு எதர்த்தாமாக செயல் படுவது போல்  செயல் பட்டனர். ரைட்டர்  வேறு ஒருவராக இருந்தார். பழைய ரைட்டர்க்கு நைட் டூட்டியாம்.

நேற்று வந்தவர்களில் அனைவரும் வந்திருந்தனர். கூடுதலாக செல்லமணி,அழுகுமணியுடன் திமுக பிரமுகர் ஒருவரும் வந்திருந்தார்.
சிறப்பு எஸ்ஐ கணேசனை கூப்பிட்டு பேசினார்.

அடித்தவன் படிக்கிற பயல் என்றும் தெரியாமல் சண்டையிட்டதாகவும், இதுதான் முதல் தடவை என்றும் இனிமேல் எந்தச் சண்டைக்கும் தான் போக மாட்டேன் என்றும் கூறுகிறான். அவன் கூட வந்தவர்களும்  வழக்கோ அபராதமோ விதிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். என்றார்.

மேலும் அவரே சொன்னார். கோர்ட்டுக்கு போனாலும் கேசு வருச கணக்கா இழுததுக் கொண்டே போகும் ரெண்டு பேருக்குமே செலவுதான்.  அதனால  இந்த ஒருதடவை மன்னிச்சு விடுங்கன்னு இன்ஸ்பெக்டர்  சொன்னார்.... என்றார்.

நா...ன் இன்ஸ்பெக்டரை பார்க்கலாமா..? என்றபோது..நீ பார்த்தாலும் இதைத்தான் சொல்வார். என்றார். பதிலக்கு ரைட்டரும் சிறப்பு எஸ்ஐ சொன்னதையே அவரும் சொன்னார்.

 இவர்களுடன் வந்த பிரமுகரும் இதைத்தான் சொன்னார். அவன் திரும்பவும் சண்டைக்கு வந்தால் என்ன சார்........... வரமாட்டான். வந்தால் அவன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

இன்ஸ்பெக்டரை பார்க்க விடாமல் இவர்களே சொல்வதாக சந்தேகம் கணேசனுக்கு இருந்தாலும் ,காசு புகுந்து விளையாடி இருப்பதை தெரிந்து கொண்டு .அவ்வளவுதான் தன் சக்திக்கு இதற்கு மேல்  இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டார். மீறி முரண்டு புடித்தால் இவிங்களும் நம்மல போட்டு பா்த்துருவாங்கே என்று நிணைத்துக் கொண்டு................

ரைட்டர் கொடுத்த வெள்ளை பேப்பரில் வாங்கி சிறப்பு எஸ்ஐ சொல்லிய பிரகாரம்.......... சண்டையிட்டு கொலை முயற்சி செய்தவன் மன்னிப்பு கேட்டபடியால் என் புகாரில் மேற்கொண்டு நடவடிக்கை வேண்டாம் என்று கேட்டக் கொள்வதாக எழுதிக் கொடுத்தார் கணேசன்.

கணேசனை கொல்ல முயற்சி செய்த வளவன்,” தான் தெரியாமல் சண்டையிட்டு விட்டதாகவும் இனிமேல் சண்டையிட மாடடேன் என்றும்  மீறி நடந்தால் காவல்துறை  தன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்வதாகவும் எழுதிக் கொடுத்தான். சாட்சியாக ஏழுரையும் அவன் மனைவி ராணியும் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

ரைட்டரும் சிறப்பு எஸ்ஐயும் வளவனை ”டேய் படிக்கிறத விட்டுட்டு சண்டை போடக்கூடாது என்று எச்சரிக்கை விட்டு செல்லமாக ரெண்டு தட்டு தட்டினர்.

கணேசனை பார்த்து , பையன் சண்டைக்கே வரமாட்டான். என்றபோது ஏழரைமற்றும் ராணி அழுகுமணி,செல்லமணி இவர்கள்  பற்கள் வெளியே தெரியாமல் புன்முறுவல் பூத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஒரு வழியாக கணேசன் கொடுத்து கொலை முயற்சி புகார்  கட்டப் பஞ்சாயத்து மூலமாக  ஒருதலை பட்சமாக முடித்து வைக்கப்பட்டது.


2 கருத்துகள்:

  1. இனி பிரச்சினை வராது என்று உறுதியாய் நம்பலாமா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அவனிடமிருந்து பிரச்சினை வராது என்று உறுதியாக நம்ப முடியாது வேறு ஒரு ரூபத்தில் வரலாம்..வராமலும் இருக்கலாம், அகனி வெயிலில் மழை வந்த மாதிரியும் இருக்கலாம் ஜீ

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...