ஞாயிறு 11 2014

விவசாயின் மகனாகப் பிறந்து விவசாயத்தின் அழிவை தடுக்க மறந்த ஒரு தலைமை நீதிபதி..




விவசாயம் அழிக்கப்பட்டு.விவசாய வேலை இல்லாத ஒரு கிராமவாசி பொழப்பக்காக நகரத்தை நோக்கி படையெடக்கும்போது.நகரத்தில அரசாங்க வேலை கிதை்தவிட்ட கிராமவாசி  கிராமத்திலா இருப்பார்.

ஒரு சாதாரண ஒரு கிராமாசியையே நிலைமை  நகரத்தை நோக்கி துரத்தியடிக்கும் போது.........

ஒரு கிராமத்தில் விவசாயின் மகனாக பிறந்து. அரசு பள்ளியில் படித்து பட்டம் முடித்து.சட்ம் பயின்று வழக்குரைஞராக பணியாற்றி, ஆளும் அரசியல் கட்சியின்  சார்பில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பெற்று.படிப்படியாக நீதிபதியாகி. ஓய்வு பெறுவதற்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒரு விவசாயின் மகன்.

தன்னுடைய பணி கால்த்திலே,தனியார்மயம்.தாராளமயம், உலகமயத்தால் தன்வாழ்வுக்கும் வளத்துக்கும் உறுதுணையாக இருந்த விவசாயியான தந்தையை நிணைப்பவர் அழிக்கப்பட்ட விவசாயத்தை மறந்துவிட்டார்.

அம்பு எய்தவனைத்தான் தண்டிக்கவேண்டும்,அம்பை தண்டிக்கக்கூடாது என்று தமிழ்பழமொழியை தன் நீதிக்கு பயன்படுத்திய நீதியரசர் தனியார் மயத்தால் தாராளமயத்தால் உலகமயத்தால், விவசாயத்தோடு நாடே கொள்ளை போகும்போது தண்டிக்காமல் இருந்துவிட்டார்.

உலகத்திலே சிறந்த அரசியல் அமைப்பைக் கொண்ட நாடு இந்தியாதான் என்று பறை சாற்றியவர்.

சாதிவெறி.மதவெறி,ஏழை,பணக்காரன். இருப்பவனுக்கு ஒரு நீதி,இல்லாதவனுக்கு ஒரு நீதி, காலம் தாழ்த்திய நீதி.நீதி மறந்த நீதி போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை, வசதியாக மறைத்துவிட்டார்.

இவருடைய அனுபவம் யாருக்கு பயன்படும், உள்ளதுஉள்ளபடி இந்தியாவின் ஏழைகளுக்கு பயன்படுமா...??? அல்லது பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு பயன்படுமா.......? இவர் சொல்லிக் கொள்ளும் இவருடைய வாழ்வுக்கும் வளத்துக்கும் ஏணியாக இருந்த விவசாயத்துக்காகவது பயன்படுமா....???
இவரின் தாய் மொழிக்காகவது பயன்படுமா.....???.

தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில்  தமிழை வழக்கு மொழியாக்ககு என்ற போராட்டத்தின்போது வாய்தா வாங்கியே வழக்கு அறிஞர்கள்ஆன வர்கள் தமிழகத்திலிருந்து உச்ச நீதிபதியாக இருந்த இவரை  தமிழை வழக்கு மொழியாக்கி விடுவார் என்று ஆகா ஓகோ என்று புகழ்ந்துரைத்தார்கள் அவர் நம்பிக்கை வைத்தார்கள்.  நம்பிக்கை வைக்கச் சொன்னார்கள். அந்த நம்பிக்கை புஸ்வானமாகியது

விவசாயின் மகனாகப் பிறந்து விவசாயத்தின் அழிவை தடுக்க மறந்த ஒரு தலைமை நீதிபதி.. தன் தொழிலுக்காக வேற்று மொழியில் வாழ்பவர் எப்படி தமிழ் மொழிக்காக எப்படி இருப்பார்.

2 கருத்துகள்:

  1. தலைமை நீதிபதிக்கே இவ்வளவுதான் அதிகாரம் போலிருக்கே !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. எல்லா நீதி அரசர்களும் இப்படித்தான் நீங்க சொல்வது மாதிரி கடைசியில சொல்லி தப்பிச்சுகிறாங்க......

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...