வியாழன் 08 2014

போடீ...வேலையத்தவளே......ஒரு சாமி பேசின கதை..!!!

படம்.










ஒரு ஊருல ஒரு தெரு இருந்திச்சு...அந்தத் தெருவுக்கு ஒரு கோயிலு இருந்துசசு..அந்தக கோயிலுல ஒரு சாமி இருந்சுச்சு அந்த சாமிக்கு பேரு காளியம்மனாம்.அதோட வீடு புறம்போக்கு இடத்துல  காங்கிரிட் ல கட்டப்பட்டு இருந்திச்சு..

அந்த காளியம்மன் என்ற பெண் சாமியானது  வாரத்துக்கு செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே குளிக்குமாம். அந்தச் சாமிக்கு சோப்பு போட்டு, மஞ்சள் பூசி குளிப்பாட்டி,மாற்றுச் சேலை கட்டிவிடுவது வரை அந்தக் கோயிலின் ஆம்பள  பூசாரிதான்.

 அந்தக் கோயிலின் திருவிழாவின்போது சாமியாட்டம் ஆடுவதும்  இந்த பூசாரிதான். இதோடு கூட அந்தத் தெருவுக்கே நாட்டாமையும் இந்த பூசாரிதான்.

செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் நாட்களில் பூசாரி தாம்பாளத்தட்டில் நிறைய சூடத்தை கொட்டி அதை எரியவிட்டு காளியம்மன் முகத்தில் காட்டுவதும் பிறகு பக்தர்களுக்கு காட்டுவதோடு  காலையிலும் இரவிலும் காளியம்மன் வீட்டிற்கு மேல் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை கட்டி எட்டு தெருவுக்கு கேட்குமளவுக்கு பாட்டு போடுவாங்கே........ இரவில் அந்த பாட்டுகளை கேட்டுக்கொண்டே காளியம்மன் சாமி தூங்கி விடுமாம்.

இப்படியே வழக்கமாக நடந்துகிட்டு இருந்துகிட்டு இருக்கிறப்போ...அந்தத் தெருவுல இருந்த ஒரு பொம்பளை இந்த காளியம்மன் சாமி கிட்ட வந்து ஒரு மாசமா விடாது வந்து கடன் கேட்டுச்சு..,அதாவது வரம் கேட்டுச்சு

ஒரு மாசத்துக்கும் மேலாக வந்தும் ஒன்னும் கிடைக்காததால் அந்த பொம்பள கோபம் கொண்டு கோபத்துல “காளியம்மன “ஏடாகூடமாக திட்டினா..

“ஏண்டி,நீயெல்லாம் ஒரு சாமியா...??? எத்தன நாளா,விடாம..வந்து வேண்டுகிறேன். இரக்கப்பட்டு...என்னிக்காவது கண்ண தொறந்து நான் கேட்டத கொடுத்து இருக்கியா...டீ...சிறுக்கி மவளே...மூதேவி...அவளே..
இவளேன்னு கண்டபடி திட்டி இருக்கா..

பொறுத்து பொறுத்து பார்த்த காளியம்மனுக்கும் கோபம் தலைக்கு மேல ஏறியது. அடித்த வெயிலுல காளியம்மனுக்கும் கோபம் பொத்துகிட்டு வந்திருச்சு.... அதுவும் பொம்பளதானே..

திடிரென்று காளியம்மன் அவளை பார்த்து “ஏண்டி,வேலையத்த சிரிக்கி,ஏண்டி இப்படி என்னைய் ஏசுற.....”,  “நானே இந்த பூசாரியோட அலும்பு தாங்க முடியாம ..யாருகிட்டா சொல்லி அழுவுறதுன்னு.தவியாய் தவிச்சு கிட்டு இருக்கேன்”.

இதுல நீ வேற வந்து ஒப்பாரி வக்கிறது இல்லாமா...! என்னைய கண்ட மாணிக்கு பொளந்து கட்டுறயேடி.....என்றது சாமி

திட்டிக்கிட்டு இருந்தவளோ...காளியம்மன் பதிலுக்கு திட்டியதை கண்டதும் தான் திட்டுவதை  ஸ்டாப்பாக்கி..,.. வாய்மூடி,மெய் மறந்து தான் கேட்க வேண்டிய வரத்தையும் மறந்து விட்டு காளியம்மன் வாயையே பார்த்தாள்.

பூசாரி வர்ரானா பாரு என்று காளியம்மன் கூறியதும் அணிச்சை செயலாக அங்குட்டும் இங்குட்டும் திரும்பி பார்த்துவிட்டு யாரும் வரவில்லை என்று தலையாட்டிவிட்டதும்.

காளியம்மன்  மீண்டும் பேசத் தொடங்கியது.செவ்வாய் வெள்ளி கிழமைகளில் என்னை குளிப்பாட்டுகிற சாக்கில்  நான் கட்டியிருக்கிற துணிமணிகளை

”பழைய படங்களில் கற்பழிக்கிற பெண்களின் சீலையை உருவும் நம்பியார் மாதிரி என் சீலையை உருவி என்னை அம்மனமாக்கி விடுறாண்டி... இந்த பூசாரி

அதோட சோப்பு போட்டு, மஞ்சள் போட்டு தேய்ச்சு, பூசி விடுகிற சாக்கில் என் மார்பு மற்றும் மறைவான முக்கியமான இடங்களில் பாலியல் சேட்டை செய்கிறாண்டி..,

இது பத்தாதுன்டு என் கன்னத்தையும் மார்பையும் ஓயாமல் தடவி பாலியல் ரீதியா கொடுமை செய்றாண்டி .. இந்தக் கொடுமையை நான் யாருகிட்டடி சொல்வேன்.............

என்னைய கும்பிடுற சிறுக்கிகளும் சிறுக்கனுங்களும், ஆம்பள சாமிக்கு ஆம்பள பூசாரியையும். பொம்பள சாமிக்கு பொம்பள பூசாரியையும் நியமிக்கச் சொல்லாம....அவிங்கஅவிங்க ரோதனைய கொட்டிட்டு போராங்கடீ...
.
மெல்லவும் முடியாம..விழங்கவும் முடியாம.. தவியாய் தவிச்சுகிட்டு இருக்கிற நேரத்துலதான்

நீ வந்து இப்படி திட்டி தீர்க்கிறடீ  ..“.போடீ... வேலையத்தவளே...சிறுக்கி மவளே, போடீ ”.....என்று காளியம்மன் திட்டியது.ம்

அப்செட்டாகி போன,. வரம் கேட்டு திட்டிய பக்தை ஆ....ஆ...ஆ...ஊ.ஊ..ஊ என்று கத்தியபடி சாமியாட்டம் ஆட ஆரம்பித்துவிட்டாள்.  இவளின் ஆ...ஊ சத்தத்தைக் கேட்டதும் தெருவில் உள்ளவர்களும் ரோட்டில் சென்று கொண்டு இருந்தவர்களும் கோயிலின் முன் கூடிவிட்டார்கள்

கூட்டத்தைக் கண்டதும் காளியம்மனும் வாய்மூடி எப்பொதும்போலவே காட்சியளித்ததுவிட்டாள்.

கோயிலுக்கு அருகில் இருந்த தன்வீட்டில் டீவி பார்த்துக் கொண்டு இருந்த பூசாரி வந்தான். வந்ததும் திருநீற்று சாம்பலை எடுத்து சாமிஆட்டம் ஆடி கொண்டு இருந்தவளின் தலையில் ஒரு பிடி சாம்பலை அள்ளி போட்டான்.

திறுநீற்றை கொஞ்சம் கையில் எடுத்து அவளின் நெற்றியில் பூசுவதற்க்காக பூசாரி கையை நீட்டிய போது,   “எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது, என்னத்தைச் சொல்வது என்று தெரியாமல்  அலறியடித்தபடி மயங்கிவிட்டாள்..அந்த பக்தை...


4 கருத்துகள்:

  1. அடுத்து ,கருவறையிலேயே காம லீலைகளை அந்த பக்தையிடம் அரங்கேற்றுவார் அந்த பூசாரி !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அய்யோ...அதனால்தான் பூசாரியைக் கண்டதும் அலறி மயக்கமடைந்துவிட்டாரா...???

    பதிலளிநீக்கு
  3. அடடா.ஆம்புலன்ஸ் ஸே விபத்துக்குள்ளாயிட்டே.

    பதிலளிநீக்கு
  4. வாங்க.. சேக்காளி ரெமப நாளா காணோம்முனு பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...