வியாழன் 05 2014

கோவணத்துணிக்காக பக்தனின் சொத்தை அபகரித்து அருள் பாலிக்கும் கடவுள்.

படம்.ta.wikipedia.org

















அமர்நீதி நாயனார் என்பவர். பக்தர்களிலே சிறந்த சிவ பக்தர்.

சிறந்த பக்தர்களை சோதிப்பதுதான் கடவுளின் வேலை. அப்படித்தான் எல்லா கடவுள் புரட்டு நூல்களும் கூவிவிட்டுச் சென்று உள்ளன. அந்தத் தவப்படி கடவுளின் வேலையாக................

சிறந்த சிவ பக்தராக விளங்கிய அமர்நீதி நாயனாரை சோதிக்க எண்ணிய பரமன்.

முனிவர் வேடத்தில் வந்து ஒரு கோவணத்துணியை அமர்நீதியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும்படியும், சில நாட்கள் தான் திரும்ப வந்து கொளவதாகவும் கூறிச் சென்று உள்ளார்.

 அமர்நீதி நாயனாரோ  கோவணம் கட்டாததால், கோவணத்துணியின் பயன்பாடு தெரியாததால்   முனிவரின் கோவணத்துணியை மூக்கைப் பிடித்து அருவருப்பு அடையாமல்   பய பக்தியுடன்  அந்த கோவணத்துணியை வாங்கி வைத்து பாதுகாத்தார்.

முனிவர் வேடத்தில் வந்த கடவுள் கொடுத்த கோவணத்துணி கடவுளின் கைங்கரியத்தால் மயமாய் மறைந்துவிட்டது.

மீண்டும் கடவுள்  பழைய முனிவர் வேடத்தில் வந்து,  தான் கொடுத்த கோவணத்துணியைக் கேட்டார்.

பத்திரமாக வைத்த இடத்தில் போய் தேடிப்பார்த்த அமர்நீதி நாயனார். கோவண்த்துணி மயமானதை கண்டு அதிர்ச்சியுற்று.... முனிவரிடம் வந்து உண்மையைச் சொல்லி மன்னிக்க வேண்டினார்.

முனிவர்  வேடத்தில் இருந்த கடவுளோ.... தொலைந்த கோவணத்துணியை போன்ற ஒரு துணியைக் காட்டி.., அதற்கு ஈடாக துணியைக் கேட்டார்.

அமர்நீதி நாயனாரோ அந்தத் துணிக்கு ஈடாக தராசில் எடைக்கு எடையாக தன்னிடமுள்ள பொன் பொருள்  என எவ்வளவு வைத்தும் அந்த துணிக்கு ஈடாகவில்லை.

கூமுட்டை பக்தர்க்கோ.. கோவணத்துணி உள்ள  தராசின் கீழ் வெயிட்டான் காந்தம் மற்றும் வேற்றுப் பொருளை கடவுள் வைத்தள்ளாரா என்று சோதிக்கத் தெரியவில்லை.. “கடவுள்தான் பக்தரை சோதிக்கலாம், பக்தர்கள் கடவளை சோதிக்க விதி இல்லாததும் ஒரு காரணமாக இரந்ததால் பக்தர் அமர்நீதி நாயனார் சோதிக்கவில்லை..

கடைசியாக.. அமர்நீதி நாயனார் தன் குடும்பத்துடன் தராசில் அமர்ந்தவுடன் தராசு  கோவணத்துணிக்கு சமமான எடையாக வந்தது.

சிவ பக்தரான அமர்நீதி நாயனாரின் பொன். பொருளை சுருட்டியதோடு அல்லாமல் பகதனின் குடும்பத்தை தனக்கு அடிமையாக்கிய பூரிப்பில்... .

“மெச்சினேன் பக்தா... உன் பக்தியைக் கண்டு” என்று ஒரு பொன் மொழியை உதிர்த்து, முனிவர் வேடத்தை கலைத்து கடவுள் பரமனாக காட்சி தந்து அருள் பாலித்தபடி   கம்பி நீட்டி விட்டு மறைந்தார்.


4 கருத்துகள்:


  1. நண்பரே,,, பண்டைய காலமானதால் சிவபெருமான் தப்பித்து விட்டார் இன்றாயிருந்தால் ? எடு உனது I.D.யை என்று கேட்டிருப்பார்கள்.
    www.Killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கில்லர்ஜீக்கு, சிவபெருமான் என்ன ?அவ்வளவு கூமுட்டையாகவா இருப்பாரு.... அங்கங்கே போடு பணம்.மொய்யெல்லாம் செய்து விடுவார்.

    பதிலளிநீக்கு
  3. சிரிப்புடன் தான் படித்துமுடித்தேன். இந்த பதிவால் உங்களுக்கு ஷொட்டைவிட குட்டுதான் அதிகம் கிடைக்கும் என தோன்றுகிறது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. எதாவது ஒன்னு கிடைக்கட்டுமே திரு. சாமானியன் அவர்களே!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...