திங்கள் 30 2014

கொலைகாரர்கள் உள்ளே உலாவுகிறார்கள் பாதுகாப்பாக........

கட்டிட இடிபாடுகள்

படம். http://www.vinavu.com/2014/06/30/mouliwakkam-building-collapse-photos/


உலகமயமாக்கத்தின் ஆசியுடன்
பெருக்கப்பட்ட நகரமயமாக்கலால்
கட்டப்பட்டு வந்த பதினோரு மாடி
கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இடித்த இடிக்கும் பெய்த
மழைக்கும் தாக்கு பிடிக்காமல்
இடிந்து விட்டதாக சொன்னான்.
பொறியாளன் ஒருவன்.

சொன்னவனும் கட்டிடத்திற்கு
முதல் போட்டவனும் அச்சாரம்
கொடுத்தவனும் கட்டிய கட்டிடத்
தோடு புதைந்திருந்தால்.............

கட்டிடம் இடி இடித்ததாலா..
பெய்த மழையிலாலா  இடிந்தது
என்ற உண்மை வெளிவந்திருக்கும்.

எந்த பரிதவிப்பும் இல்லாமல்
கொலைகாரர்கள்  உள்ளே
உலாவுகிறார்கள் பாதுகாப்பாக.....

பஞ்சம் பிழைக்க வந்த
பஞ்சைகளோ!  வெளியே
பரிதவிக்கிறார்கள் பாதுகாப்பு
இல்லாமல்........

பஞ்சையர்களின் துக்கம் பதினாறு
நாட்களில் முடிந்து விடும்...

இந்த சுயநல  பிண்டங்களுக்கோ
குறைவொன்றுமில்லை  எப்போதும்
கொண்டாட்டத்துடனே இருப்பார்கள்

அடுத்து வளர்ச்சி என்ற பெயரில்
உயிர்பலி வாங்குவதற்கு.!!!




6 கருத்துகள்:

  1. உணர்ச்சியை அழகாக செதுக்கி ( அவசரப்படாமல் ) கவிதையாக பகிர்ந்தது மிக அருமை.பாராட்டுக்கள் இப்படியே தொடருங்கள் நண்பரே

    அருமையான படைப்பு

    பதிலளிநீக்கு
  2. இன்னும் எத்தனை காவு வாங்கப் போகிறார்களோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு

  3. நண்பா,,,, நமது நாட்டைப்பொருத்தவரை உயிர்கள் இரண்டு விதம்
    ஒன்று மேல்ஜாதி (செல்வந்தர்)
    இரண்டு கீழ்ஜாதி (ஏழை)

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்திய திரு.மதுரை தமிழர்க்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பக்கத்திலே இன்னொரு 11மாடி இருக்கிறது ஜீ

    பதிலளிநீக்கு
  6. ஏழைகள் பரிதவித்து சாவார்கள். செல்வந்தர்கள் உண்டு கழித்து சாவார்கள் இதுதான் சாவிலும் வித்தியாசம் கில்லர்ஜீ.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...