வியாழன் 12 2014

வருங்கால பொறியாளர்களை கொன்ற நிகழ்கால பொறியாளர்கள்.

படம்bharathithambi.com.














ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார்  பொறியியல் கல்லூரியில் இரண்டாம ஆண்டு படித்துக் கொண்டு இருந்த வருங்கால பொறியாளர்கள்.

செமஸ்டர் தேர்வு முடிந்த பின், கல்விச்சுற்றுலா வுக்கு இமாச்சல பிரதேசத்துக்கு சென்றவர்களில் 24  வருங்கால பொறியாளர்கள் பிரேதமானார்கள்.

 இமாச்சலத்தில் உள்ள சூலு-மணாலிக்கு சென்ற வருங்கால பொறியாளர்கள் மாண்டியில் உள்ள பிரபல பியஸ் ஆற்றங்கரையில் ஜாலியாக பொழுதை கழித்துக் கொண்டு இருந்தனர்.

திடிரென்று பியஸ் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வந்தது. ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்த வர்களில் ஆறு பெண்கள் உள்பட  24 வருங்கால பொறியாளர்களை , ஆற்றின் வெள்ளம் இழுத்துச் சென்று காவு வாங்கியது.

பியஸ் அணை ஆற்றிலிருந்து மின்சாரம் பயன்படுத்திய தண்ணீரை எந்தவித முன்னறிவிப்பு எதுவுமின்றி   பணியில் இருந்த நிகழ்கால பொறியாளர்கள் திறந்து விட்டதால்  வருங்கால பொறியாளர்கள் பலியானார்கள்.

இதனால் வருங்கால பொறியாளர்களை கொன்ற துக்கு பரிகாரமாகநிகழ்காலபொறியாளர்களில் ஒருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாவங்களுக்கு பரிகாரம் செய்துவிட்டால். பாவம் ஒழிந்து திரும்பவும் பாவங்கள் செய்தாலும்  தீமைகள் அண்டதாம்.............பாவத்தை போக்கும் அத்தாரிட்டிக்காரர்கள் சொன்னது.

2 கருத்துகள்:

  1. அத்தனை ஆசைகளும் கனவுகளும் ஆற்றோடு அடித்த செல்லபட்டது.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பர்களே!!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...