சனி 07 2014

பொது நல வாதியை விரட்டி அடித்த நீதி அரசர்கள்..






படம்.makkalaatsi.blogspot.com

ஒரு பேரரசு இருந்தது. அந்த பேரரசில் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில உள்ள..

மக்களில் பெரும்பாலனோர். சிலர் நடத்திய தொழிலகங்களில் அத்தக் கூலிகளாக வேலை செய்து வந்து தங்கள் வாழ்ககையை  ஓட்டிக் கொண்டு இருந்தனர்.

ஒரு நாளு, நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எல்லாம் சேர்ந்து தொழில் வளம் பெருகும் என்றும் அன்னிய நாட்டு பணம் வளரும் என்று சொல்லி, கொள்ளக்கார,கொலகார நாடுகளைச் சேர்ந்த  தொழில் அதிபர்களை வெத்திலை.பாக்கு வைத்து அழைத்து வந்தனர்.

அப்படி, அழைத்து வரப்படட்டவர்களால் ஏற்ப்பட்ட தொழில் பெருக்கத்தால் அந்த ஊரில் உள்ள சின்ன  தொழிலகங்கள் எல்லாம் தாக்கு பிடிக்க முடியாமல் திக்குமுக்காடி போய கதி கலங்கி நின்றன.

இத்தகைய புன்னியத்தால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்காமல் அவதிப்பட்டனர். கிடைக்கும் ஒரு சில வேலைகளில் முன்பு வாங்கிக் கொண்டு வந்த கூலியையும குறைத்தும் பெற்று வந்தனர்.

இந்தக் கொடுமையையும் நிலைமையும் கண்டு பாதிக்கப்பட்ட  அந்த ஊரு தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாடாளும் ஆட்சியாளர்களக்கு தெரிவிப்பதற்க்காக......

தங்கள் குடும்பத்துடன் “அரை ஆடை பக்கிரி ” என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட போராட்டமான உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்கள்.

கஞ்சிக்கு வழியில்லாமல், கஞ்சிக்கு வழிகேட்டு உண்ணாவிரதம் பேராட்டம் நடத்தும் கஞ்சிக்கு செத்தவர்களின் போராட்டத்தைக் கண்டு..

ஆட்சியாளர்களால் பயன் அடைந்துவருபவர்கள் சிலர் “ஏட்டிக்கு போட்டியாக” உண்ணாவிரதப் போராட்டத்தை கேலி செய்து அடக்கும் விதமாக..........

பெயரைச் சொன்னால் நாக்கில் எச்சில் ஊறும் விதமாக  விதவிதமான உணவு பதார்த்த வகைகளுடன் “ உண்ணும் விரதம்” என்ற புதுப்போராட்டத்தை கண்டு பிடித்து அவர்களும் குடும்ப சகிதமாக அந்த உண்ணும் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தனர்.


இத்தகைய இரண்டு போராட்டங்களும் அந்த ஊரில் எதிரெதிரே நடந்து கொண்டு இருந்தன.

இதைக் கண்ட  அந்த ஊர் சமூக ஆர்வலர் ஒருவர். “உண்ணும் விரதம்” போராட்டம் நடத்தும் வக்கிரபுத்தி கொண்டவர்களால் “ உண்ணாவிரதம்” போராட்டம் கொச்சைப் படுத்தப்படுவதை சசிக்க மனமில்லாமல்...

அந்த ஊருக்கு தொலைவில் உள்ள நகரத்து உயர் நீதி அரசர்கள் கொலு வீற்றியிருக்கும் மன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது, விசாரித்த நீதி அரசர்களோ.. அந்த உண்ணும் விரதத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் அந்தஸ்களின் விபரத்தையும், உண்ணும் விரதம் போராட்டத்தின் போது என்னென்ன உணவு வகைகள் வழங்கப்பட்டன. எத்தனை பேர்கள் எவ்வளவு உண்டார்கள் என்ற அளவையும் உணவு வகைகளின் பட்டியலையும் அதனால் வழக்கு தொடுத்த பொது நல வாதிக்கு என்ன பாதிப்புகள் ஏற்ப்பட்டன.

என்பதையும் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தாக்கல செய்தவரை “ படுவா ராஸ்கல் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தே தொலச்சு புடுவோம் படுவா” என்று சொல்லாமல் சொல்லி அந்த பொதுநல வாதியை விரட்டி அடித்தனர்  உயர் நீதி அரசர்கள்.  

2 கருத்துகள்:

  1. புரிகிறது நண்பரே மன்மோகன்சிங் போயிட்டாரு,,,, மோடி வந்துட்டாரு,,,, அவராவது மோசடி செய்யாமல் இருப்பாருனு நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  2. நம்பமால் ஏமாறுவதைக் காட்டிலும் நம்பி ஏமாறுவது நம்ம மக்களுக்கு பெருமை கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...