புதன் 02 2014

ஒரு பூசாரியும் இரு கற்களும்





ஒரு கிராமம் இருந்தது .அந்த கிராமத்துக்கு பொதுவான ஒரு கோயில் இருந்தது.

அந்தக் கோயிலுள்ள சாமிக்கு பவர் ஏஜென்டாக ஒரு பூசாரி இருந்தார்.

அந்தக்கோயிலுக்கு மேல்சாதியை சேர்ந்த மேலத்தெருக்காரர்களும் பக்தர்களாக  இருந்தார்கள்.

அதே மாதிரி கீழ்சாதியின்னு அழைக்கப்பட்ட கீழத்தெருக்காரர்களும் பக்தர்களாக இருந்தனர்.

ஒரு நாள் இரு தெருக்காரர்களும்  கோயிலுள்ள சாமியிடம் முதலில் யார் வேண்டுவது என்ற பிரச்சினை எழுந்தது.

கடவுளின் ஏஜென்டான பூசாரிடம் சென்றனர். மேலத் தெரு பிரநிதியிடம் ஒரு கல்லை கொடுத்தார். இதே மாதிரி கீழத் தெரு பிரநிதியிட ம் ஒரு கல்லை கொடுத்தார்.

சில நாட்கள் கழித்து மேலத்தெருக்காரர் வந்து பூஜாரியிடம் வந்து கல்லால் ஒன்னும் பயன் இல்லையே என்றார்.

அப்போது பூஜாரி சொன்னார், கீழத்தெருவில் அந்தக் கல்லை எறிந்தால் பலன் கிட்டும் என்றார்.

இதே கீழத் தெருக்காரர்கள் கல்லைக் குறித்து கெட்டபோது, மேலத்தெருவில் எறிந்தால் பலன் கிட்டும் என்றார்.

அன்று இரவே பூஜாரி சொன்னதுபோல் இரு தெருக்காரர்களும் செயல்பட  தீயாய் பலன் தெரிந்தது.


6 கருத்துகள்:


  1. ஊரு ரெண்டுபட்டா.... பூசாரிக்கு கொண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
  2. அந்த கொண்டாட்டத்துக்குதான்,பவர் ஏஜென்ட் ஊர ரெண்டாக்குறார் ஜீ

    பதிலளிநீக்கு
  3. அதெல்லாம் சரி! அந்த பூசாரி, மேலத்தெருவா அல்லது
    கீழத்தெருவா என்று சொல்லவில்லையே?

    பதிலளிநீக்கு
  4. அந்த பூசாரி கடவுளின் பவர் ஏஜெனட் என்பதால் கோயிலுக்கு அருகிலே அவருக்கு தனியாக ஒரு தெரு இருக்கிறது திரு. தமிழ்...அய்யா

    பதிலளிநீக்கு
  5. கடவுள் கல்லு எழுந்து வந்து இதை தடுத்து நிறுத்த வேண்டாமா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  6. அதான் கல்லு உருவில் பவர் ஏஜென்ட் மூலமாக ரெண்டு தெருவுக்கும் போயிருக்காருல ஜீ

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...