செவ்வாய் 22 2014

கிரிகெட்டுக்குள் வேட்டி தடை ஏன்???

படம்..kalapam.ca


21/ 7/ 14 ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு வழக்கின் வாய்தாவுக்கு சென்று இருந்த போது  மாவட்ட கோர்ட்டின் வக்கீல் அய்யாமார்கள் எல்லாம் “பாய்காட் செய்து இருப்பது தெரிய வந்தது.

எதற்கு வெளிநடப்பு என்று விசாரித்தபோது, வேட்டி கட்டி சென்ற நீதி அரசரை கிரிகெட்டு கிளப்புக்குள் அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக தெரிந்தது. 

வக்கீல் அய்யாக்கள்  எல்லாரும் இனி கோர்ட்டுக்கு வரும்போது வேட்டி கட்டி வந்து தமிழரின் வீரப் பெருமையை நிலை நாட்டினால்தான் கிரிகெட் மட்டையர்களுக்கு புரியும்.

நீதி மன்றங்களில் வழக்கு விசாரனைக்கு வரும் மனுதாரர்களைவிட , வழக்கு நடத்தும் வக்கீல்களின் கூட்டமே அதிகமிருப்பதாக  தெரிந்தது. அது இந்த வெளி நடப்பின் காரணமாக அந்தக் கூட்டம் வெகுவாக குறைந்து இருந்தது.

வழக்குகளின் போது வக்கீல்கள் யாரும், தமிழனின் வீரப்பெருமையை நிலை நாட்டுவதற்க்காக வெளிநடப்பு செய்தபடியால் ஆஜராகவில்லை.அதனால் எங்களை.. மூன்றாதவதாக கூப்பிட்டுவிட்டு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

அதனால்  கோர்ட்டுக்குள்   உள்ள சில திண்டில் உட்கார்ந்து ஒவ்வொரு தோழர்களும் கதை அளக்கத் தொடங்கினார்கள்.

அப்போது ஒரு தோழர் இந்த வேட்டி பிரச்சினை இன்னுமா தீர வில்லை!!. அதான் அம்மா, பாஞ்சாலிக்கு கண்ணன் சேலை கொடுத்து மானத்தை காப்பாத்தியது போல...........

தமிழகத்தை நிரந்தரமா..ஆளும் அம்மா..... கண்ணனாக உருவெடுத்து  பாஞ்சாலிகளான தமிழக வேட்டி கட்டிய ஆண்களுக்கு அதாவது வீரத்  தமிழர்களின் மானத்தை காப்பத்திவிட்டாரே......  தமிழகத்து வேட்டியை மதிக்கதாவர்களின் கிளப்புகளுக்கு தடை விதிக்கப்படும் என்று ஆணையிட்டுள்ளாரே , ..........

வேட்டியை மதிக்காத அந்த துரியோதணர்களும், அம்மாவின் ஆணைக்கு பணிந்து விட்டார்களே....பின் என்ன பிரச்சினை என்றார்.

அப்போது வேறு தோழர். கிரிகெட்டுக்குள் ஏன்? வேட்டியை அனுமதிப்பதில்லை என்று தெரியுமா? என்றார்.

அப்போது நான் ,இருபது வயசு வரையில் டவுசர் பேண்ட்தான் அணிந்திருந்தேன் தோழர். வேட்டி கட்டிய பழக்கமே  இன்றுவரை எனக்கு இல்லை தோழர்.என்னுடைய முதலாளிகூட.  டவுசர் போட்ட காலத்திலிருந்தே என்னைத் தெரியும்  என்று கிண்டலடிப்பார் தோழர்.. பிற்பாடுதான் கைலி கட்ட ஆரம்பித்தேன். அதனால் எனக்கு வேட்டின் அருமை பெருமை மற்றும் கிரிகெட்டுக்குள் வேட்டி கட்டியவரை்களை அனுமதிமதிப்பதில்லை என்பதும் எனக்கு தெரியவில்லை. அந்த வரலாற்று சம்பவத்தை சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் என்றேன்.

அந்தத் தோழர் சொல்ல ஆரம்பித்தார். அது வந்துத் தோழர்.    தொலைக் காட்சியில் கிரிகெட் விளையாட்டை நேரடி ஒளிபரப்பை பார்த்து இருக்கீங்களா? என்றார். 

பக்கத்தில் இருந்தவர் ஓ....பாத்திருக்கிறோம் தோழர் சொல்லுங்க என்றார்.

கிரிகெட் விளையாட்டின் போது  விளையாடுபவர்கள் ரன்னு எடுத்தாலோ, கோட்ச் பிடித்தாலோ....அப்போது கிரிகெட் ரசிகர்களின் கூச்சல் பெரிய ஆரவாரமாக இருக்கும் அப்போது நேரடி ஒளிபரப்பும் கேமரா அந்த ரசிகர்களை படமெடுக்கும் ரசிகர்களும் அந்த கேமராவைப் பார்த்து ஆ....ஆ..ஊ...ஊ என்று ஊளையிடுவார்கள்  பார்த்து இருப்பீர்கள்.

அப்போது அந்த கிரிகெட் மட்டை ரசிகர்களை பார்த்தீர்கள் என்றால்.அவர்கள் காட்டவாசியைப் போலவோ, ஆதிவாசிகளைப்போலவோ, வல்லரசு இந்தியாவின் நாகரிகத்துக்கு பொருந்தாத வேசங்களுடன் காட்சி அளித்துக் கொண்டு இருப்பார்கள்.

ரன்னு எடுத்த போதும்,அவுட் ஆன போதும் ஊளையிடும் காட்டுவாசி ரசிகர்களை   நேரலை ஒளிபரப்பில் கேமரா படம் பிடித்து வரும்போது   வேட்டி கட்டிய ஆதிவாசி ரசிகர் என்னசெய்வார்......

என்ன செய்வார்................. என்ன செய்வாரா???

விளையாட்டு பரவசத்தில் விளையாட்டு வீரர்களின் நாட்டு கொடியை பிடித்து அங்கிட்டும். இங்கிட்டும் ஆட்டுவது மாதிரி தான் கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்தோ,அல்லது வேட்டி கட்டிய மற்ற ஆதிவாசி ரசிகரின் வேட்டியை உருவியோ, கேமராமுன் ஆட்டிவிட்டால் அது நேரடி ஒளிபரப்பாகி விடுமல்லவா............



ஆரம்பத்தில் இப்படித்தான்  கிரிகெட்டின் போது வேட்டி கட்டி சென்ற ரசிகர்கள் கொண்டாட்டம்  இன்றைய டாஸ்மாக் குடிமகன் கொண்டாட்டம் மாதிரி  கட்டிய வேட்டியை உருவி  நேரடி ஒளிபரப்ப முன் கொடி அசைத்தார்களாம். அதிலிருந்துதான்  கிரிகெட் மைதானம்,கிளப் போன்றவற்றிக்கு வேட்டிகட்டி வருவதற்கு தடை விதித்தார்களாம்.

அந்தத்தடைதான் பிரிட்டிஸ்காரன் போன பிறகும். அவன் போட்ட.சட்டம் கோர்ட்டு, அங்கி போன்றவற்றை மாற்றாமல் பின்பற்றி ஒழுகி வரும் வீரப்பரம்பரைகள்  மாதிரிதான். இந்த கிரிகெட் கிளப்புகளும்  பரம்பரையாக ஒழுகி வந்தன.

அந்த வீர நடைமுறை சட்டத்தை பின்பற்றித்தான். வேட்டி கட்டி சென்றவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்து இருக்கிறார்கள்.

இது தெரியா ... வெங்காயங்கள்தான் தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் , தமிழ் மரபு ,மசிறு,மட்டைன்னு பீத்தீதுகள் என்றார்.

இதோடு கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார். வேட்டி என்பது ஆதிக்கச் சாதிகளின் அதிகாரச் சின்னம் என்றார்.

எப்படி என்று கேட்டபோது சொன்னார்.  வேட்டி கட்டிய நீங்கள், கட்டிய வேட்டியை மடித்து கட்டியபடி இந்தக் கோர்ட்டின்  மாஜிஸ்ரேட் முன்னால் நிற்க முடியுமா..??? மடித்து கட்டிய வேட்டியுடன் காவல் நிலைய ஆய்வாளர் முன் நிற்க முடியுமா??... திங்கள் கிழமைதோறும் மனு நீதி நாள்ன்னு மனு வாங்கும் மாவட்ட ஆட்சியாளாரிடம் மடித்து கட்டிய வேட்டியுடன் மனு கொடுக்க முடியுமா??? உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் என்றார்.

அது மரியாதைக்கு என்றேன் நான்.

என்ன மரியாதை, அவர்கள் மக்களின் ஊழியர்கள் என்றுதானே சொல்கிறார்கள். பேண்ட்  அணிந்துள்ள நீங்கள் மரியாதைக்காக பேண்ட்டை தூக்கிக் கொண்டு நிற்க முடியுமா?? என்றார்.

எனக்கு அவர் சொல்வது அப்பட்டமான உண்மைகள் என்று தோன்றியது எனக்கு மறுப்பு எதுவும் சொல்ல தோன்றவில்லை.

வேறு  தோழர் மறுப்பு சொல்ல முயன்றபோது .எங்களை கோர்ட்டிலிருந்து  “ குருசாமி வகையாற” என்று அழைத்தார்கள் வாசலில் நின்ற தோழர் விரைவாக வரும்படி அழைத்தார்.

எல்லோரும் ஓடி , மாஜிஸ்திரேட் முன்  “உள்ளேன் அய்யா”என்று சொல்லாமல் ஆஜராகினோம்.



இதன் தொடர்ச்சி அடுத்த வாய்தாவின் போது தொடரும்.


6 கருத்துகள்:

  1. அதுசரி நம்மாளுங்க சட்ட சபையிலேயே வேடடி அவுத்து காட்டுறவங்களாச்சே!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சட்டசபைல அனுமதி உண்டு..இங்கதான் இல்லபோல... சட்டசபையை காரணம்காட்டி கிரிகெட்டுக்குள் வேட்டி அனுமதி கேட்கலாம்..

    பதிலளிநீக்கு
  3. நண்பர் வலிப்போக்கன் எழுதிய நீண்ட பதிவு இது தான் எனக்கு தெரிஞ்சு.
    //இது தெரியா ... வெங்காயங்கள்தான் தமிழ் கலாச்சாரம் தமிழ் பாரம்பரியம் தமிழ் மரபு மசிறுமட்டைன்னு பீத்தீதுகள் என்றார்.//
    உங்களுக்கு விளக்கமளித்த தோழருக்கு வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளில் சிலவற்றில் பேண்ட் சட்டையை ஆண் பெண்கள் களைஞ்சு எறிஞ்சிட்டு ஓடிய செய்திகள் தெரியாது போலும்!
    விளக்கமளித்த தோழருக்கு ரஷ்ய பேண்ட் மீது கவர்ச்சியிருக்கும்,அதே போல் காபிடலிஸ்ட் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க பேண்ட் மீது கவர்ச்சியிருக்கும்.அதற்காக இவங்க எல்லாம் தமிழகத்திலே தமிழங்க வேட்டியை தடை செய்யணும் என்றும்,வேட்டி தடையிருக்குமிடங்களை கண்டுகொள்ள கூடாது கண்டுக்க கூடாது என்று எல்லாம் ஆசைபடகூடாது.

    பதிலளிநீக்கு

  4. திரு. வேக நரி அவர்களுக்கு எனக்கு விளக்கமளித்த தோழரைப்பற்றி அடுத்து பேசுவோம். அந்த தோழர் சொன்ன“

    வேட்டி கட்டிய நீங்கள், கட்டிய வேட்டியை மடித்து கட்டியபடி இந்தக் கோர்ட்டின் மாஜிஸ்ரேட் முன்னால் நிற்க முடியுமா..??? --- இதுக்கு என்ன பதில் சொல்வீர்கள்...




    பதிலளிநீக்கு
  5. //வேட்டி கட்டிய நீங்கள் கட்டிய வேட்டியை மடித்து கட்டியபடி இந்தக் கோர்ட்டின் மாஜிஸ்ரேட் முன்னால் நிற்க முடியுமா..???//

    முடியாது.
    எதற்காக ஜிஸ்ரேட் முன்னால் வேட்டியை மடித்து கட்டியபடி நிற்க வேண்டும்?
    அதே போல் வெளிநாட்டில் கூட பேண்ட்டை மடித்து உயர்த்திய படி மாஜிஸ்ரேட் முன்னால் நிற்க முடியாது,விசா நீடிக்க வெளிநாட்டு ஆபீஸ்சுக்கு போகவும் முடியாது.
    ஆனா அவங்க உடை பேண்ட்டை மாட்டிக்கிட்டு எந்த கிளப்பிற்கும் எங்கேயும் அங்கே போகலாம்.ஆனா தமிழர்கள் தேசத்தில் ஒரு கிளப் புத்தக வெளியீட்டு விழவுக்கு போன நீதிபதிக்கே வேட்டி கட்டி கொண்டு வந்தார் என்ற காரணத்துக்காக அனுமதி கொடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...