பக்கங்கள்

Wednesday, July 30, 2014

செத்தும் கெடுத்த காதலன்.......

படம்--tamilnanbargal.com


விருதுநகர் மாவட்டம் வேப்பங்குளம் பகுதியை  சேர்ந்தவர் ராமர் கட்டிடத் தொழிலாளி.வயது40, இவருக்கு ஒரு மனைவி, 2மகள்கள்.1 மகன், ஒரு கள்ளக்காதலி உள்ளனர்.

இந்த நிலையில் ராஜபானையம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருபுத்திரனின் மனைவியான லட்சுமியை கள்ளக் காதலியாக வைத்துள்ளதை, ராமரின் மனைவி மீனாள் கண்டித்தார். இதனால் கனவன் மனைவிக்கும் தகராறு ஏற்ப்பட்டது.

இதனால் மனம் உடைந்த ராமர். தனது கள்ளக்காதலி வீட்டுக்கு வந்து, காதலி வெளியே சென்ற நேரம் பார்த்து தூக்கு போட்டு இறந்தார்.

சம்பவம் அறிந்த போலீசு விரைந்து வந்து பொணத்தை கைப்பற்றி தனது மனைவி வீட்டில்  சாகாமல் கள்ளக்காதலி வீட்டில் ஏன் ? சாகவேண்டும் என்று விசாரித்து வருகிறது.

8 comments :

 1. அதானே ,சுகத்தை அனுபவித்துவிட்டு துக்கத்தைக் கொடுக்கலாமா ?
  த ம 1

  ReplyDelete

 2. என்ன நண்பரே,,, செத்தும் கொடுத்தவர் போயி....
  செத்தும் கெடுத்தவரிடம்.... வந்து விட்டீர்கள்.

  ReplyDelete
 3. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான விசாரணைதான் ! பதிவோட ஆரம்பத்துல மனைவி, பிள்ளை... அப்புறம் கள்ளகாதலி என இயல்பாக சேர்த்தது... சாரி சிரிப்பு வந்துடிச்சி !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 4. பகவான்ஜீ கருத்துரைக்கு-----
  ரெம்ப பேர் துக்கத்தை அதாவது இம்சையைத்தான் தொடர்கதையாக கொடுத்துக்கொண்டு இருக்கறார்கள்

  ReplyDelete
 5. கில்லர் ஜீ கருத்துரைக்கு.....

  ஏற்கனவே, அதுபற்றி சந்தேகம் இருந்தது. முன்னவர் செத்தும் கொடுத்தவர். பின்னவர் செத்தும் கெடுத்தவர்...எனக்கு கிளியர் ஆயிருச்சு நண்பரே!!

  ReplyDelete
 6. சாமானியன் கருத்துரைக்கு----

  இப்படியாவது...தங்களை சிரிக்க வைத்தேன! அது போதும்..

  ReplyDelete
 7. சாவின் பின்
  சாம்பலை விசாரித்து
  என்ன பயன்?

  ReplyDelete
 8. அந்த சாம்பலில் ஏதாவது கிடைக்காதா..? என்ற நப்பாசைதான.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com