வியாழன் 31 2014

சும்மா கேட்டுப்பாருங்க..அந்த குரலில் நியாயம் உங்களுக்கு புரியும்.

Bala Cartoonist Bala
சில குரல்கள் மட்டும் தான் கேட்ட மாத்திரத்தில் உங்களை அப்படியே கட்டிப்போட்டுவிடும். தமிழகத்தில் மகஇக தோழர் கோவன் அவர்களின் குரலுக்கு நான் பெரும் ரசிகன்.
கலை கலைக்காக என்று உலா வரும் குரூப்புகள் மீது எனக்கு சுத்தமா மரியாதை கிடையாது. கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
அப்படி மக்களுக்கான கலைஞர்களில் ஒருவர் சீத்தல்(Sheetal Sathe) . மராட்டியத்தில் இயங்கும் Kabir Kala Manch அமைப்பின் கலைக்குழு போராளி.
இவரின் கலகக்குரல் மக்களிடம் எழுச்சியை உண்டுபண்ணுவது கண்டு எரிச்சலடைந்த அதிகார வர்க்கம் கடந்தாண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சீத்தலையும் அவர் கணவரையும் நக்சலைட்டுகள் என்று கூறி சிறையில் அடைத்தது. இப்போது ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்.
Anand Patwardhan இயக்கிய ஜெய் பீம் தோழர் என்ற ஆவணப்படத்தில் தான் சீத்தலின் குரலை முதன்முறையாக கேட்டேன். அதன்பின் இணையத்தில் பலமுறை அவரின் பாடல்களை தேடி கேட்க ஆரம்பித்தேன். கேட்கும்போதே உங்களுக்கு பல்வேறு உணர்வுகளை உண்டுபண்ணக்கூடியது.
மராட்டிய மொழி புரியாவிட்டாலும் பரவாயில்லை.. நீங்களும் சும்மா கேட்டுப்பாருங்க.. மொழிக்கான அவசியமில்லாமல் அந்த குரலில் வெளிப்படும் நியாயம் உங்களுக்கு புரியும்.. 
-கார்ட்டூனிஸ்ட் பாலா
25-7-14

Jai Bhim Comrade (Excerpt - Kabir Kala Manch) by Anand Patwardhan.mov

7 கருத்துகள்:


  1. ஒரு ஈர்புணர்வு உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  2. கேட்டு ரசித்தேன் அருமை !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. அவரின் பாடல்கள்! நீங்க சொன்னது சரியே.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்களுக்கு உரியவர். கார்டுனிஸ் பாலாவுக்கே சேரும் திரு.வேகநரி.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...