புதன் 13 2014

இப்படியும் சமா(இ)ளிப்பு..........

ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஓட்டு கேட்டு வரும்போது ஒரு பேச்சு ,வெற்றி பெற்றவுடன் ஒரு பேச்சு, ஆட்சி நாற்காலியில் அமர்ந்தவுடன் ஒரு பேச்சு....இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு பேச்சாக பேசி வருபவர்கள், புதுசா ஆட்சிக்கு வந்தவர்கள்.

இது அவர்களுக்கே உரித்தான் பேச்சு அல்ல, ஒவ்வொரு கட்சிகளிடம் உள்ள இயல்பான,மாற்முமடியாத,மறுக்கமுடியாத கொள்கை முழக்கம் .இது அடிமட்ட தொண்டனிலிருந்து பேரரசர் வரைக்கும் நீட்டி பரவியிருக்கிறது.

60 ஆண்டுகளில் ஆண்டவர்கள் செய்யாததை, 60 நாட்களில் செய்யமுடியுமா?ஃ என்று பேரரசர் மோடி கேட்டு சமாளிப்பது மாதிரி....
படம்-www.vinavu.com


பேரரசர் கட்சியின் தமிழகத்து முன்னால் மூத்த தலைவர் ஒருவரான் இவர்  இப்படி பேசி சமாளிக்கிறார்.

செத்துப்போயி கறையான் அரித்து, மண்ணொடு மண்ணாகி போன  சமஸ்கிருதத்தை தோண்டி எடுத்து .அதற்ககு உயர்பிக்கும் முகமாக ,சமஸ்கிருதாத்தை வார விழாவாக கொண்டாடிச் சொல்லி பேரரசு உத்தரவு போட்டது.

அதை  மானமுள்ள தமிழர்கள் எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்க்காக , இப்படி பேசியிருகிறார்

தமிழுக்கும் ஒரு வாரம் விழா எடுத்து கொண்டாடுங்கள். அதற்க்காக சமஸ்கிருத வார விழாவை எதிர்க்காதீர்கள் என்றார்.

தமிழ் பேசும் மாநிலத்தில் தமிழ் வார விழா கொண்டாட சொல்வது போல் சமஸ்கிருதம் பேசும் மாநிலத்தில் சமஸ்கிருத வார விழா கொணடாடுவது தானே ,என்றும் சமஸ்கிருதா விழாவுக்கு ஒரு ஆணை பிறப்பித்தது மாதிரி தமிழ் வார விழாவுக்கு ஆணை பிறப்பியுங்கள் என்றால்.............

அதற்கு என்ன சொல்வார்.   ஒன்று இளித்துக் கொண்டு  பலவிதமாக சமா (இ)ளிப்பார்..

8 கருத்துகள்:

  1. நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமென்றாலும் பேசும் என்று சும்மாவா சொன்னார்கள் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நாக்குல நரம்பில்லாம பேசக்கூடாதுன்னுதான்.மானம்,அவமானமுன்னு ஒன்னு வச்சுருக்காங்க ஜீ

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! திரு.அன்பைத்தேடி அன்பு...

    பதிலளிநீக்கு

  4. நல்லவன் நின்றாலும் ஒருவாக்கு, கெட்டவன் நின்றாலும் ஒருவாக்கு, என தனது போக்கு மாற்றாத மக்கள் இருக்கும் வரை மாறாது இந்த நாக்கு.

    பதிலளிநீக்கு
  5. தமிழுக்கும் ஒரு வாரம்
    விழா எடுத்து கொண்டாடுங்கள். - அதை
    நானும் வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...