வெள்ளி 22 2014

சாஸ்திரம் பார்த்த சாஸ்திரக்காரன்......

படம்-udhayasankarwriter.blogspot.com


மழையுமில்லாமல் விளைச்சலுமில்லாமல் வருமானமும் இல்லாமல் தவித்து  கொண்டு இருந்த நேரம்.

கிராமத்து மக்களில் பலர் பொழைப்பு தெடி நகரத்துக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்படி போய் கொண்டு இருந்தபொழுது,பக்கத்து ஊரில் இருந்த நல்ல மனசுக்காரர் ஒருவர். வழி நடையாய் செல்லும் மக்களின் தாகம் தணிக்க , தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்கி கொண்டு இருந்தார்.

வழிநடையாய் சென்ற மக்கள் அந்தத் தண்ணீர் பந்தலில் உள்ள கம்புகளில் மாட்டி வைக்கப்பட்டு இருந்த குவளைகளை எடுத்து தண்ணீர் வாங்கி குடித்து விட்டு அந்தக் கம்புகளிலே குவளையை மாட்டி விட்டுச் சென்றனர்.

சாஸ்திரம் படித்த சாஸ்திரர்க்காரர் ஒருவர் வந்தார். வந்தவர். மாட்டி வைக்கப்பட்ட குவளைத் தொடாமல் .பந்தலுக்குள் வைத்திருந்த புத்தம் புதிதான குவளையில் தண்ணீர் கேட்டார்.

அதைக் கேட்டு கொண்டு இருந்த தண்ணீர் வழங்கி கொண்டு இருந்த பணியாளர். ஒருவர். “அய்யா, இங்கு மாட்டியுள்ள குவளைகள் புதிதானவைதான், தாங்கள் அதிலே தண்ணீர் வாங்கி பருகலாம் என்றார்.

அது கேட்ட சாஸ்திரர்காரர் சுத்தமானவையாக இருந்தாலும். சுத்தமில்லாத நீசர்கள்  தொட்டு குடித்துவிட்ட குவளைகளில் குடிப்பது நான் கற்ற சாஸ்திரத்துக்கு எதிரானது . அதனால் உள்ளே இருக்கும் குவளையில் தண்ணீர் தாரும் என்றார்.

 அய்யா, வாய் வைத்து குடிக்கும் சிறுவர்களுக்கான குவளைகள் தனியாக இருக்கிறது. உங்கள் முன் இருப்பவைகள் எல்லாம்  அன்னாக்க குடித்துவிட்டு வைத்ததுகள். நிீங்கள் நோக்கு,கழிப்பு பார்த்தால் ,உங்கள் திருப்திக்கு கழுவி விட்டு கொண்டு தண்ணீர் வாங்கி குடியுங்கள் என்றார்.

தண்ணீர் குடித்துவிட்டு சென்றவர்கள் என்னென்ன சாதிக்கார்கள் என்று தெரியாது . அதோடு குவளையை கழுவினால் தண்ணீர் வினாகும் அப்பா... அதனால்தான் அங்கியிருக்கும் புதுக் குவளையை கேட்கிறேன் என்றார் சாஸ்திரக்காரர்.

சாஸ்திரக்காரரும்,பணியாளரும் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில்,  தண்ணீர் வழங்க  ஏற்ப்பாடு செய்த நல்ல மனசுக்காரர் வந்து சேர்ந்தார். சாஸ்திரக்காரரர் கோரிக்கையை கேட்டவர். 

அய்யா சாஸ்திரக்காரரே...... பஞ்சத்தால் எல்லோரும் பரிதவித்து இருக்கையிலே... இப்படி குடிக்கிற தண்ணியிலே.. சாஸ்திரம் பார்க்கிறீரே அய்யா...நீர் என்ன ஜென்மம் அய்யா.....என்று திட்டியபடி .. உள்ளே இருந்த புதியக் குவளையில் எடுத்து தண்ணீர் வழங்கும்படி பணியாளரை பணித்தார்.


புதியாய் இருந்த குவளைகளோ....உடைந்து இருந்தாலும். அதிலேயே தண்ணீர் வாங்கி குடித்தார்..சாஸ்திரம் பார்த்த சாஸ்திரக்காரர்.

.


4 கருத்துகள்:


  1. சாஸ்திரக்காரரை ரெண்டு சாத்தியிருந்தா சரியாயிருக்கும் நண்பரே... இதை கதைக்காக தாங்கள் எழுதியிருந்தாலும் உண்மை சம்பவங்கள்தானே...

    பதிலளிநீக்கு
  2. தாகம் தனிப்பவரின் ஜாதி மட்டும் தாகத்தால் மறந்து விடுமா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...