செவ்வாய் 26 2014

கடப்பாரை வேண்டுமா...? தலைவா....??

Nose picking in progress.jpg
படம்-ta.wikipedia.org

 நாலு  பேர் கூடுகிற  இடங்கள் என்றாலும் சரி, பொது இடமானாலும் சரி, நாகரிகமானவர்கள் செய்யும் அநாகரிகச் செயல்கள் இருக்கே......... அந்த நாகரிமானவர்கள் செய்யும்  அநாகரிமான  செயல்களை கண்டு,  ரசிகராக இல்லாதவர்கள் முகம் சுளிப்பார்கள், சிலர் கண்டும் காணாமல் இருப்பார்கள், சிலர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.

அப்படியான  அநாகரிமான் செயல் ஒன்று நாகரிமானவர் ஒருவரால் எனக்கு அருகில் நடைபெற்றது.

நான் குடியிருக்கும் என் வீட்டு இடம் சம்பந்தமாக மாவட்ட நீதிமன்றத்தில் ஜெ-ன் சொத்து குவிப்பு வழக்குக்கு  போட்டியாக வாய்தாவில் இருக்கிறது. ஜெ.யின் வழக்காவது விசாரனைக்கு வந்துவிட்டது என் வழக்குக்கோ விசாரனை்க்கே வரவில்லை.

அந்த வழக்கு சம்பந்தமாகவும். தெரு தாதா.... தெரு பாதையை தனது  பாதை என்றும் .அந்தப்பாதையில் நான் பாதாள சாக்கடை  இணைப்பு கொடுக்கக்கூடாது என்று என்மேல் போட்ட வழக்கிற்க்காகவும் நீதி மன்றத்துக்கு சென்றிருந்தேன்.

அப்போது கூடுதல் முன்சிப் நீதிமன்றத்து க்கு முன் நின்றிருந்த ஒரு நாகரிகமானவர் ஒருவர். அவருடைய கைகளால் அவருடைய மூக்கை நோண்டு நோண்டுன்னு நோண்டிக் கொண்டு இருந்தார்.

அவர் பக்கத்தில் இருப்பவர்களைப்பற்றியோ, போவோர்-வருவோர் பற்றியோ எதையும் கண்டு கொள்ளாமல் மூக்கை நோண்டிக் கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்தவர்களும. அவர் கை, அவர் மூக்கு நமக்கு என்ன என்று ஒவ்வொருத்தரும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

இதைக் கவனித்த நான், அவர் மூக்கு நோண்டுவதை நிறுத்துவதற்கு ஒரு வழியாக ,  சலிக்கமால் வெட்கப்படாமல் மூக்கை நோண்டிக் கொண்டு இருந்தவரை, என்னை பார்க்கும்படியாகச் செய்தேன்.

அவர். என்னைப் பார்த்த மறு கணம், சிரிக்காமல், கடப்பாரை வேண்டுமா.... தலைவா?? என்றேன்.

அவ்வளவுதான் அந்த நாகரிகமானவர்க்கு நான் கேட்டதின் பொருள். புரிந்து விட்டது. மூக்கை நோண்டுவதை நிறுத்தினார். சுற்றிலும் பார்வையை செலுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

6 கருத்துகள்:


  1. நல்லவேளை கேட்டதோட விட்டீங்க கடப்பாரையை எடுத்து மூக்குல நுளைக்காம விட்டீங்களே...

    பதிலளிநீக்கு
  2. கடப்பாரை வேண்டுமா என்று கேட்டீர்கள் சரி ,அதென்ன தலைவா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை, அந்த நபரும் கடப்பாரை கொண்டா என்று கேட்கவில்லை...

    பதிலளிநீக்கு
  4. தலைவான்னு சொன்னது... என்னிடம் கோபப்பட்டு சண்டைக்கு வரக்கூடாதல்லா.... அதற்க்காகத்தான், பார்வையாளர்கள் என்னை அதிக பிரசங்கின்னு சொல்லிடக்கூடாதல்லவா....

    பதிலளிநீக்கு
  5. உணர்த்த வேண்டியதை அருமையா உணர்த்தினீர்கள். எனது கவனிப்பின் படி தென்கிழக்கு ஆசியநாட்டவங்க பலருக்கு உங்க கடப்பாரை உதவி தேவைபடுகிறது :)

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...