வெள்ளி 31 2014

பிச்சை எடுத்த கீதாவுக்காக தண்டம் கட்டும் மீனாட்சி...!!!

வீதி வீதியாக பிச்சை எடுக்க
 பயன்படுத்திய யானை பறிமுதல்: 
 வனத்துறையினர் நடவடிக்கை
படம்--மாலைமலர்



மதுரை ..திருவாளர்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றான அண்ணாநகரில் கீதா என்ற பெண் யானை, பாகனின் உதவியுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது.

இதைக் கண்ட வல்லரசு இந்தியாவை ஏலம் போட்டு கூவி கூவி விற்பனை செய்வதை பெருமையாக பீத்திக் கொள்ளும் நாட்டில் பிச்சை எடுப்பதை தேசிய அவமானமாக கருதிய திருவாளர்கள் கூட்டத்தில் உள்ள திருவாளர் ஒருவர்.

எங்கே..பத்த வைக்கனுமோ....அங்கே கச்சிதமாக பத்த வைத்தார்.

திருவாளர் பத்த வைத்த தகவலை அறிந்த வனத்துறையினர் மற்ற விபரங்களில்படி மணி ஆட்டிக் கொண்டு வராமல், சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தனர்.

வந்த வனத்துறையினர் பிச்சை எடுத்த கீதாவின் உரிமையாளரைப் பற்றிய விபரத்தை கேட்டறிந்தனர்.

பிறகு. திருவாளர் ஏரியாவில் பிச்சை எடுத்த குற்றத்திற்க்காக...கீதாவின் உரிமையாளரான மீனாட்சி அம்மாளுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்ட மீனாட்சி அம்மாளை பார்த்தபோது

“ அவனவன் தேர்தல நின்னு ஓட்டு பிச்சை எடுத்து, அதிகாரத்துக்கு வந்ததும் ஒவ்வொரு நாடாக  போயி பிச்சை கேட்டு வர்றது..தெரியல.....

கஞ்சிக்கு செத்த கீதா , ஆசீர்வாதம் செய்து துட்டு வாங்கினதுல.... இவிங்க  வல்லரசு பெரும கிழிஞ்சு தொங்குதாம்ப்பா.....

பத்தாயிரம் ரூபா.... இருந்தா... நாங்க ஏண்டா..ஒங்க பாஷையில பிச்சை எடுக்குறோம்..... என்று மீனாட்சி அம்மா கேட்டாலும் கேட்டுறும்  என்று கூடியிருந்த கூட்டம்.

ஆத்தாடி..ஆத்தா, நமக்கேன் இந்த வம்பு என்று நிணைத்து தலைதெறிக்க ஓடியது.

எப்படி.....!! .பிச்சை எடுப்பதை...தடுத்திட்டோம்ல...... மீஜையே இல்லாத திருவாளர் மீஜையை முறுக்கினார்.


6 கருத்துகள்:

  1. பிச்சை எடுக்கிறது யானைப் பசிக்கே போதாதே ,மீனாட்சி அம்மாளுக்கு என்ன மிஞ்சும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அதானே யானைக்கே பத்தாத போது ..மீனாட்சி அம்மாளுக்கு பத்தாயிரம் அபராதமாம்....இதைதான் கேனப்பய ஊர்ல கிறுக்குபய நாட்டாமைன்னு சொல்லுவாங்கலோா....

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!! திரு.யாழ்பாவணன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. இந்த அபராதம் பத்தாது அய்யா! பத்தாது!
    யானைப் பசிக்கு சோளப் பொறி - இது!
    இன்னும் கொஞ்சம் கூட்டி போடுங்கய்யா!
    கூட்டிப் போடுங்க!
    மீனாட்சியிடம் இல்லாத சொத்தா?
    மக்களை ஓட்டாண்டி ஆக்கிய
    ஒஸ்திகளின் ஆஸ்திகளை குஸ்தி செய்ய யார் வருவார்?
    பராபரமே?
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. தங்கள் மனுவை அப்படியே...மீனாட்சி அம்மாளுக்கும் அபராதம் போட்ட வனத்துரைமார்களுக்கும் அனுப்பிச்ச..தங்களின்குறை தீர்ந்தவிடும் திரு. புதுவை வேலு அவர்களே!!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...