புதன் 12 2014

குழந்ததையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறார்கள்...


படம்-www.vikatan.com

சாராயக் கடையை திறந்து அதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு நல்ல லாபமும் அதிகமான வருமானமும் அடைந்து வரும் தமிழக  நாட்டை ஆண்டுவரும் ஆட்சியாளர்களைப் பற்றி தெரியாதார் யாருமில்லை...

 குடிமக்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் இப்பேர்பட்ட தமிழக அரசு  தமிழ்நாட்டு குடிமகன்களின் குடிப்பழக்கத்தால் மாநிலத்தில் திருட்டு,வழிப்பறி, கொள்ளை.கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும்.

விடுமுறை காலங்களில் குடித்துவிட்டு டூவீலர், கார் முதலிய வாகனங்களில் வலம் வருவதால் விபத்துக்கள் ஏற்ப்பட்டு பலர் உயிரிழந்து வருவதாகவும் போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினாலும் குடிகார குடிமகன்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று ஒப்புக்கு புலம்புகின்றனர்.

சாராயக் கடை வியாபாரத்திலிருந்து வரும் பெரும்பாலான வருமானத்தொகை போலீசுக்கே செலவிடப்படுவதால்..தாங்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதாகக் காட்டுவதற்க்காக சிற்சில இடங்களில் பிளக்ஸ் போர்டை மாட்டி வைத்துள்ளனர். அதிலும் அந்த விளம்பரத்தில்கூட  கள்ள சாராயத்தை குடித்து  பொசுக்குன்னு சாக வேண்டாம். நல்ல சாராயத்தை குடித்து  பலருக்கும் பல அவதி கொடுத்துவிட்டு சாகுங்கள் என்ற ரீதியாக வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. இப்படியாக தங்கள் விழிப்புணர்வை காட்டிவிட்டு..

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 62 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதாக புள்ளி விபரக் கணக்கு காட்டுகிறார்கள்.

கள்ளச்சாராய சாவை தடுக்கிறேன் பேர்வழி என்று சிலர் சாவதை காரணமாக காட்டி கள்ளச்சாராயத்தை ஒழிக்காமல்... நல்ல சாராயம் தருகிறேன் என்று சொல்லி  பலபேர் சாவோடு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் குழி பறித்துள்ளனர்.

 கள்ளச்சாராயத்தை தடுக்கவோ, நல்லச் சாராயக்கடையை இழுத்து மூடவோ விரும்பாத வக்கற்றவர்கள். இனி வரும் காலங்களில் போதையில் வண்டி ஓட்டினால் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப் போறாங்களாம். பழைய சட்டங்களின்படியே இந்தச் புதியச் சட்டமும் சாராயம் குடிக்காதவர்களை  புடுச்சு சிறையில் தள்ளுவதற்கே பயன்படும்.

முன்னோரு காலத்தில் சாராயம் குடித்தவர்களை ஊதச் சொல்லி கண்டுபிடித்து அடித்து இழுத்துச் செல்வார்கள். இனியும்  ஊதச் சொல்லி ஏண்டா குடிக்கவில்லை என்று கேட்டு குடிக்காதவர்களை  அடித்து இழுத்து செல்வார்கள்.

இது குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுகிற கதையாகத்தான் இருக்கும்

6 கருத்துகள்:


  1. இனிமேல் ரோட்டுல நடக்கும்போது நாதஸ்வரத்தோடத்தான் போகணுமோ,,,,

    பதிலளிநீக்கு
  2. அதிரடி அபராதம் என்றதும் குன்ஹா பற்றிய பதிவாக இருக்கும் என்று நினைத்தேன்.
    என்ன செய்ய இப்படித்தான் தண்ணி காட்டுகிறார்கள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. நடந்து போகும்போது மட்டுமல்ல... டூவிலர்,கார் போன்றவற்றில் போனாலும் நாதஸ்வரத்துடன்தான் போகவேண்டும்..திரு. கில்லர் ஜி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. குன்ஹா பெரும் பேரு வாங்குகிறார் உச்ச நீதி மன்றத்துக்கு வந்தவிடுவார்என்று பொறாமையாலும் அச்சத்தாலும்தான் உச்சி நிதி மன்றம் அவருடைய தீர்ப்பை மதிக்கவில்லை என்பது அப்போதே தெரிந்து விட்டதே! திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. அதென்ன நாதஸ்வரம் ,எப்படி வாசிக்கிறார்கள் ?
    த ம 2

    பதிலளிநீக்கு
  6. டூவிலர்,கார்ல போறவங்கள் ஊத சொல்லவாங்க...அதான் நாதஸ்வரம்..மேலும் விளக்கம் தங்களுக்கு வேண்டுமென்றால் மதுரையை கலக்கி கொண்டு இருக்கும் திரு. கில்லர்ஜி அவர்களை அனுகவும்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...