வியாழன் 27 2014

சாதியை கேட்டதால் சூடு வாங்கிய பேக்கரி மாஸ்டர்...

படம்-www.a2ztamilnadu.com

முகப்பில் பேக்கரி ஸ்வீட் கடையும் பின்னால் பேக்கரி தயாரிப்பு தொழிலகமும் நடத்தி கொண்டு வந்த முதலாளியின் முன் மாடசாமி அழைத்து வந்த பத்தொன்பது வயது நிறைந்த  கணபதி மரியாதையுடன் நின்று கொண்டு இருந்தான்

அய்யா, இந்தப் பயல்தான் நான் சொன்ன பையன் இவனுக்கதான் வேலை தங்களிடம் வேலை கேட்டேன் என்றார் மாடசாமி.

மாடசாமி சுட்டிக்காட்டிய பையனை, பேக்கரி முதலாளி பார்த்துக் கொண்டே, உள்ளே ஒரு பையனை வர வழைப்பதற்க்காக , கடையிலிருந்த அழைப்பு மணியை அடித்துவிட்டு.... பணிவாக நின்று கொண்டிருந்தவனிடம் பெயரைக் கேட்டார்.

“பேரு..என்னப்பா”....

”கணபதி ங்க சார்,.........

“எந்த வேல கொடுத்தாலும் செய்விய்யாப்பா”...???

“ ..எந்த வேல கொடுத்தாலும் செய்வானுங்க” என்றார் மாடசாமி,

மாடசாமி சொல்வதை கேட்டப் பிறகும் கனபதியை  கேட்டார்.

“என்னப்பா.......... செய்வீய்யா”........

“ எந்த வேலையின்னாலும் செய்வேன் சார்”.......

“வேலைக்கு ஒழுங்கா..வந்துடனும். மாடசாமி....க்காகத்தான் உன்னை வேலைக்கு சேர்த்திருக்கேன். புரியுதா ” என்றார் முதலாளி.

“அவரு பேருக்கு பங்கம் வராம”..”நான் வேல பார்க்குறேன் சார்”..என்றான் கணபதி.

உள்ளேயிருந்து கனபதி வயதுடைய உழைப்பாளி ஒருவன் வந்து நின்றபோது கனபதியை சுட்டிக்காட்டி அவனை உள்ளே அழைத்துச் செல்ல பணித்தார்.. கணபதி மாடசாமியிடம் சொல்லிவிட்டு , வந்த பையனைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.

பேக்கரி முதலாளி, சில ஸ்வீட் அயிட்டங்களை பையில் போட்டு மாடசாமி கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.

உள்ளே வந்தபோது பத்து பேருக்கு மேல் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தார்கள். புதிதாக வேலைக்கு வந்தவனை  எல்லோரும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்கள் வேலையை கவனிக்கத் தொடங்கினார்கள்.

ஒவ்வொரும் வேலை செய்வதை கவனித்தபடி நின்று கொண்டு இருந்த கனபதியை அழைத்து வந்தவன்.  கனபதியை ஒரு தட்டு தட்டி வா... என்று சைகையால காட்டிவிட்டு முன்னே சென்றான். 

பின்னே சென்ற கணபதி, “பன், ரொட்டி தயார் செய்யும் சூட்டு அடுப்பங்கரைக்கு அருகில் வந்து நின்றான். அங்கு நீண்ட கரண்டியால் சூட்டு அடுப்புக்குள் இருந்து பன் அடுக்கி வைக்கபட்டு தட்டுகளை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தவரிடம் விடப்பட்டான்.

“மாஸ்டர் அண்ணே, முதலாளி உங்களிடம் அழைத்துச் செல்லச் கூறி”  கணபதியை சுட்டிக் காட்டினான்.

மாஸ்டர் அண்ணன் குட்டையாகவும் கட்டையாகவும் இருந்தார். அடுப்பக்கருகில் இருந்தாலும் கருத்துப் போகாமல் சிவப்பாகவே இருந்தார்.

மாஸ்டர் அண்ணன். கனபதியைப் பார்த்தார்.

“பேரு என்னடா”????

“கனபதி....ண்ணே.”.......

“யாருடா........ ஒன்ன கொண்டு வந்து விட்டா”.....???

“மாடசாமி, அண்ணண்ணே  ” 

“ யாருடா”....??  மாடசாமி, என்றபடி  மாவைப் பிசைந்து கொண்டு இருந்த உதவி மாஸ்டரைப் பார்த்துக்கேட்டார்” மாஸ்டர் அண்ணன்..

முதலாளி மாஸ்டரிடம் வருவதைப் பார்த்ததும்,“ கனபதியை காட்டிப் பேசினார்  மாஸ்டர்.  முதலாளி சொன்னதும் .கார்பரேசனில் வேலை பார்க்கும் மாடசாமியா.... என்று தெரிந்து கொண்டார். முதலாளியின் முன்னே கணபதியிடம் கேட்டார் மாஸ்டர்.

“ஏலே... மாடசாமி சொந்தக்காரா..”???

“  இல்லேண்ணே..... தெரிஞ்சவர்”

“ முதலாளிய பார்த்து, சரிங்க அண்ணாச்சி”....என்றார் மாஸ்டர்.

“ முதலாளி, கணபதிய பார்த்து சொன்னார். மாஸ்டர் சொல்றத கேட்கனும் என்று விட்டு ” நகர்ந்தார்.

முதன்முதலாக வேலைக்கு சேர்ந்த கனபதிக்கு எடுபிடி வேலை கொடுக்கப்பட்டது. டீ வாங்கி வரவும், டீ டம்ளரை கழுவி வைக்கவும், மற்றவர்கள் ஏவும் வேலைகள் மட்டும் கொடுக்கப்பட்டது. கனபதியும்  ஏவுன எல்லா வேலைகளையும் செய்து வந்தான். சில வேலைகளில் தப்பாய் செய்தபோது  மாஸ்டரிம் திட்டும் வாங்கிக் கொண்டான்.

இப்படியாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடிவிட்டது. பேக்கரி கடைக்கு வேலைக்குச சேர்ந்தால், அங்கு வேலை செய்பவர்களுக்கு நன்றாக திண்ணக் கிடைக்குமென்று தன் நண்பர்களும், வேலைக்கு சேர்த்துவிட்ட மாடசாமி அண்ணனும் சொல்லக் கேட்டு இருந்தான். ஆனால் வெலைக்கு சேர்ந்த மறு நாட்களிலே புரிந்து கொண்டான் அவர்கள் சொன்னதெல்லாம் அத்தனையும் பொய் என்று....

ரொட்டி.பன், பட்டர்பன், பிஸ்கட், பப்ஸ் போன்றவற்றின் வாசனைதான் பிடிக்காலாமே  ஒழிய ருசிக்க முடியாதுன்று.. ருசிக்க கொடுத்து வைத்தவர்கள் மாஸ்டரும், முதலாளியும்தான்.

உடைந்துவிட்டதை கூட திண்ண முடியாது மாஸ்டர் சூடு போட்டு விடுவார்.

காலையில் எட்டு மணிக்கு வேலைக்குச் சென்றால் இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு புறப்பட முடியும்.. வீடு வந்து சேர்வதற்குள் பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். ஞாயிற்று கிழமை ஒருநாள்தான் விடுமுறை. சில நாட்களில் அந்த விடுமுறையும் பறி போய்விடும். ஆனால் மாஸ்டர்க்கும்,மற்றும் சிலருக்கும் அப்படியில்லை. மாஸ்டர் காலையில் வந்தால் மதியம் சாப்பாட்டுக்கு செல்பவர் நேரம் கழித்து புத்தம் புதிதாய் வருவார். சில நாட்களில் வராமலே இருப்பார். சில நாட்களில் காலையில் வராமல் மாலையில் வந்து பத்து மணிக்கு மேல் வேலை செய்வார். அந்த நாட்களில் மாஸ்டர் சொல்லும் நேரத்தில்தான் வீடு செல்ல முடியும். அப்படி நேரங்கழித்து வீட்டுக்கு சென்றால் மறு நாள் காலையில் எட்டு மணிக்குப் பதிலாக ஒன்பது மணிக்குவர சலுகை காட்டப்படும்.

மூன்று வாரத்திற்கு மேல் வேலை செய்ததால் மற்ற எல்லோரிடம் பழக்கம் ஏற்ப்பட்டது. காலையில் வந்தவுடன் எந்தெந்த வேலை செய்யவேண்டும். மாஸ்டர்க்கு உதவியாக என்னென்ன பொருட்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது.

காலையில் சரக்குகளை எடுத்துக் கொண்டு லைன்க்கு செல்பவர்களுக்கு வேண்டிய சரக்குகளை எடுத்து வைத்து பட்டர் பன்னில் கிரிம் தடவ வேண்டிதில் சீனி மாவு மற்றும் கத்தி முதலியவற்றை வைத்துவிட்டு. மாஸ்டரின் வருகைக்காக சூட்டு அடுப்பை உதவி மாஸ்டருடன் மற்றும் சிலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அந்த நேரங்களில் முதலாளி சொல்லும் வேலைகளையும் செய்து முடித்துவிடவேண்டும்

மாஸ்டர் வந்துடவுடன் சூட்டு அடுப்பு  அனலுடன்  மாஸ்டர் மனம் கோனாமல் நடந்து கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்யாதவர்களை மாஸ்டர் திட்டுவார். சில நேரங்களில் அவர்களின் சாதியைச் சொல்லித் திட்டுவார்.  அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.  மாஸ்டர் கெட்ட வாரத்தைகளாலும், சாதியச் சொல்லித் திட்டுவதும். கனபதிக்கு பிடிக்கவில்லை. புதிதாய் வந்த பயல் என்று திட்டாமல் இருக்கிறார் நாளைக்கு நம்மையும்“ இப்படித்தானே திட்டவார். என்று நிணைத்தான்.

கணபதி  மாஸ்டர் சொன்ன ஒரு வேலையைச் செய்ய சுனக்கம் காட்டியபோது திட்டி தீர்த்துவிட்டார். அப்போதுதான் கனபதியின் சாதியைப் பற்றிக் கேட்டார்.

“டேய், கணபதி...நீ என்ன சாதிடா...”?????

“ அப்படின்னா.....என்னாண்ணே..”......???

“ஏய,........ஏங்கிட்டயே.... ஓ..ன்  ரூட்ட காட்டூறீயா... தொலச்சு பிடுவேன்னு ”உன் சாதிய சொல்றா..நாயே...!!!”

“ அண்ணே .என்க்கு சாதியே இல்லேண்ணே....”.....

“ அப்போ....நீ சாதி கெட்ட  பயலாடா”.........

“ அதுவும் எனக்கு தெரியாதுண்ணே”......

“மாஸ்டருக்கு , கோபம் வந்தது.. போடாங்......... என்றபடி கெட்டவார்த்தை மெதுவாக சொன்னார்.

உதவி மாஸ்டரைப் பார்த்து “பய..நம்மல கேனையன்னனு நெணைச்சுகிட்டான் ”.....

“ஏடே....... சாதியே இல்லாதவன் எவனுமில்லடா....இந்த நாட்டிலே.... தேவடியாளுக்குகூட சாதி இருக்குடா” வெண்ணெ..... வானத்திலிருந்து வந்தவன் மாதிரி சாதியே தெரியாதுன்னு நடிக்கிற... சூத்துல சூடு வச்சுடுவோம்டீ..” ஒழுங்கா சாதியச் சொல்லு” என்றார் உதவி மாஸ்டர்.

அண்ணே. “ நிஜமாண்ணே... நான் என்ன சாதின்னெ எனக்கு தெரியாதுன்னே”..

“ அடங்கொக்கா,  ஓன் நடிப்ப எங்கிட்ட காட்டாதிடீ..” ஒழுங்கா..நீ என்ன சாதின்னு சொல்லிப்பிடு,

“என்னண்ணே, உன்மையைச் சொன்னா,...? நடிக்கிறேன்னு சொல்றிங்க....” என்னப் பாத்தா எந்தச் சாதின்னு ஒங்களுக்கு தோனுது”


“ங்கோத்தா.... அது தெரிஞ்சா... நான்.ஏண்டா ஒங்கிட்ட கேட்கிறேன்.,என்றார்.
 மாஸ்டர்

மாஸ்டரும்,உதவி மாஸ்டரும் மற்றவர்களும், கணபதி என்ன சாதின்னு . சொல்லச் சொன்னார்கள்,

“ தான் என்ன சாதியின்னு தெரிஞ்சக்கமா இவிங்க விட மாட்டோங்கே போலிருக்கே” என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தான். மாஸ்டர் திரும்பவும் கேட்டபோது.. எங்க வீட்டுல கேட்டு வந்து சொல்றேண்ணே என்று அன்றைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

மறுநாள். மாடசாமி அண்ணன பார்த்து.. சொன்னபோது , அவிங்க என்ன சாதிடா ” என்று கேட்கச் சொன்னதோடு....அங்கு எந்தச் சாதிக்காரன் அதிகமாக இருக்கானோ.. அவன் சாதிய சொல்லுடா...என்றார்.

மறு நாள் வந்தபோது, மாஸ்டர் வருவதற்கு முன்னே, வேறு ஒரு அண்ணன் கேட்டான்.

“ என்னடா. நீ என்ன சாதின்னு கேட்டு வந்தியா...”???

“ ஆமாண்ணே...... நான் சொல்வதற்கு முன் நீங்களெல்லாம் என்ன சாதின்னு சொன்னத்தான் , நான்.. என்ன சாதின்னு சொல்வேன்”

“ கத அப்படி போகுதா..... யாரும் சொல்லேன்னா... நீ சொல்ல மாட்டியாக்கும்”.

“ஆமாண்ணே”

“என்ன ஓமாண்ணே”.. மாஸ்டர் வரட்டும்டீ”....

“மாஸ்டர் வரும்போதே...முதலாளி பார்த்துவிட்டு வந்தார்.. வந்தவுடன் எதுவும் பேசாமல் வேலையை தொடர்ந்தார். வேலையின் இடையேதான் மற்றவர்களிடம் பேசினார்.  அப்பொழுது நாய் சும்மா இருந்தாலும் நாய் வாலு சும்மா இருக்காது என்பது மாதிரி. வேறு ஒரு அண்ணன்  கணபதி சாதியப் பத்தி கிளப்பிவிட்டான்.

மாஸ்டர். கணபதியிடம் என்னடா.... கேட்டீயாடா என்று கேட்டபடி ரெட்டிய எடுக்க பயன்படும்  சூடாகியிருந்த கரண்டியின் முனையை இலேசாக  கனபதியின் கையில் படும்படி செய்தார். சிறிது சூடு பட்ட கனபதி கைகளை உதறியபடி .... அண்ணே..... என்னண்ணே........ என்றான்.

“ இது கொஞ்சோனு சூடு... பெருசா வச்சா..தோலு வெந்து போகும் எப்படி வசதி ” என்றார் மாஸ்டர்.

மாஸ்டரை முதலாளி கூப்பிடுவதாக ஒருவன் வந்து சொன்னதும், கரண்டியை கணபதி கையில் கொடுத்துவிட்டுச் சென்றார் மாஸ்டர். உதவி மாஸ்டரோ மாவை பிசைந்து கொண்டு இருந்தார்.. கரண்டியை வெளியே எடுக்காமல் அடுப்புக்குள்ளேயே வைத்திருந்தான்.

மாஸ்டர் வந்தவுடன்.  ஏற்கனவே தயாராகி வைத்திருந்த அயிட்டங்களை தூக்கி பசங்களிடம் கொடுத்து கொண்டு இருந்தார். ... அடுப்புக்கு உள்ளே இருந்த தட்டுகளை எடுக்குமாறு கனபதியை திட்டினார். பதட்டத்தில் தட்டுகளை வெளியே எடுத்தவன். கடைசியாக இருந்த தட்டுகளை குனிந்து எடுத்துக் கொண்டு இருந்த மாஸ்டர் முதுகில் மேல் தவறவிட்டான்.

சூடு பட்ட மாஸ்டர் ஆ.வூவென கத்தி கணபதிய அடிக்க பாய்ந்தார். கணபதி சூட்டு கரண்டியை போட்டுவிட்டு  வேறு பக்கம் ஓடி பதுங்கிவிட்டான். முதலாளி மாஸ்டரின் சத்தம் கேட்டு ஓடிவந்தார் . உதவி மாஸ்டர் கணபதி முதுகில் மாவு கையோடு ஒரு அடி விட்டு, மாஸ்டரை தூக்க ஓடினார்.

சிறிது நேரத்தில்பேக்கரி தொழிலகமே அல்லோல்பட்டது. மாஸ்டர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்.. ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு முதலாளி கணபதியை திட்டி ரெண்டு போடு போட்டார்.

கணபதி தவறவிட்டுவிட்டான் என்று பார்த்தவர்களில் சிலர் சொன்னதும் முதலாளி உதவி மாஸ்டரை திட்டினார்.

“இவன் வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம் கூட ஆகல..அதுக்குள்ள இவன்கிட்ட ஏன்டா கரண்டிய கொடுத்து எடுக்கச் சொன்னிங்க”..என்று திட்டினார்.

வெளியே செல்லும் லைன்மேன் சொன்னார்.இதுக்கு முன்னாடி, கனபதி நல்லாத்தான் வேலை செய்தான் அண்ணாச்சி.... இன்னிக்கு பரபரப்புல விட்டுட்டான் அண்ணாச்சி என்று சொன்னதும் கனபதி மேல் இருந்த கோபம் முதலாளிக்கு சற்று குறைந்தது.

அன்று எல்லோரிடமும் திட்டும், அடியும் வாங்கியும், நாள் முழுவதும் சாப்பிடாமல் வந்த சோர்வும், பயத்தால் வந்த கலக்கமும். தெரியாமல். அன்று அவனது மனம் புத்துணர்ச்சியாக இருந்தது





8 கருத்துகள்:


  1. நல்லா இருக்கு கடைசிவரை ஜா’’தீ’’யை சொல்லவே இல்லை.... ஸூப்பர்
    நண்பரே தவறாக நினைக்க வேண்டாம் எல்லா இடங்களிலுமே கனபதி என்று வருதிறது தவறு.
    கணபதி இதுவே சரி.
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. நன்றி! நண்பரே!! திருத்தி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.ஜாதி இல்லை என்ற கணபதி கிரேட் மனிதர். இந்தியாவில் தமிழகத்தில் அரசும் ஜாதி கேட்கிறது, பதிவர்களும் மற்றவர்களும் ஒருவரை தாக்கும் போது என்ன ஜாதி என்று பார்த்து,ஜாதி சொல்லி தான் தாக்குகிறார்கள்.
    //மாஸ்டரும் உதவி மாஸ்டரும் மற்றவர்களும் கணபதி என்ன சாதின்னு . சொல்லச் சொன்னார்கள்//
    தமிழகத்தில் ஜாதி வெறி அவ்வளவு கவர்ச்சியாக உருவாக்கபட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! திரு.வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. சாதி என்ன என்று கேட்போரை இப்படிச் சூடு வைத்து விடலாமா?
    நடந்த நிகழ்வா புனைவா ?
    பகிர்விற்கு நன்றி வலிப்போக்கரே!
    தமிழ்மணம் கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  6. நடந்த நிகழ்வுதான் நண்பரே! சூடு வைத்தது திட்டுமிட்டு வைத்தது அல்ல. எதார்த்தமாக நடந்தது. திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. சூடுபட்ட பூனைகள் இனி ஜாதியைப் பற்றி கேட்க மாட்டார்கள் என்பதால் ஏற்பட்ட புத்துணர்வுதானே அது ?
    த ம +1

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...