ஞாயிறு 30 2014

காட்டு மிராண்டிகளின் தேசத்தின் கௌரவம்.

படம்-m.vikatan.com
இந்(து)தியாவை காட்டுமிராண்டிகளின் தேசம் என்று சொன்னவர்களின் வாயில் சர்க்கரையைத்தான் போட வேண்டும். அவர்கள் அப்போதே இந்துதியாவைப் பற்றி சொல்லி விட்டார்கள்.

இன்றைய காட்டுமிராண்டிகளின் இந்தீயாவை கணிக்கத் தெரியாதவர்கள்தான். இந்தீயா. செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பி விட்டதால் இந்தீயா தீயாய் வல்லரசாகிவிட்டது என்று 100 மீட்டர் உயரத்துக்கு துள்ளி குதிக்கிறார்கள்

பரமக்குடியிலும், தர்மபுரியிலும், உசிலம்பட்டியிலும் மற்றும் இந்தீயாவின் மற்ற மாநிலங்களில் நடக்கும் சாதிவெறி காட்டுமிராண்டிகளின் கொலைகளால் அந்தந்த மாநிலங்களுக்குதான் கௌவரமாக கருதப்பட்டு வந்தது. அது இந்தீயாவின் கௌவரமாக கருதப்படவில்லை.

இந்தியாவின்  தலைநகர் டெல்லியில். ஜனாதிபதி மாளிகையின் பணியாற்றிய பணியாளர் அபிஷேக்கின் காதல் மனைவி பாவனாயை, உசிலம்பட்டி பிரமலைகள்ளர் சாதிவெறி காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட விமலாதேவியைப் போன்றே.. ஊரறிய திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று நைச்சியமாக  பேசி அழைத்து வந்து..பாவனாவின் பெற்றோர் ஜெகன்மோகன்யாதவ்- சாவித்ரி ஆகியோர்களால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் பெருமையாக பீத்திக் கொள்வதற்கு  காட்டுமிராண்டிகளின் தேசத்திற்கு இந்த கௌவரமும் கிடைத்துவிட்டது..

வாழ்க! காட்டுமிராண்டிகளின் தேசம்! 
வளர்க!! காட்டுமிராண்டிகளின் கௌரவம்.!!!

விமலாதேவி

12 கருத்துகள்:


  1. கொடுமைதான் காட்டுமிராண்டிகளை களைந்தால்தான் நாடு உருப்படும்
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. இருப்பதில் பெரும்பாண்மையினர் காட்டுமிராண்டிகளாய்த்தான் இருக்கிறார்கள். இதில் நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாகத்தானே உருப்படும்.

    பதிலளிநீக்கு
  3. நமது பாரம்பரிய கலாச்சாரத்தை உலகறிய செய்து விட்டார்கள் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. வாழ்க! காட்டுமிராண்டிகளின் தேசம்!
    வளர்க!! காட்டுமிராண்டிகளின் கௌரவம்.!!!

    பதிலளிநீக்கு
  5. காட்டுமிராண்டிகளின் தேசமே தான்.

    பதிலளிநீக்கு
  6. காட்டுமிராண்டிகளை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள் வலிப்போக்கரே...!
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  7. ஒரு காலத்தில் தன் வாழ்க்கைத் துணையைப் பெண்கள் தாமே தேர்ந்தெடுக்கும் உரிமை தமிழ்நாட்டில் இருந்தது. தாய் வழிச் சமூகமாக, வேட்டையாடிகளாக இருந்த அந்தத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டுமிராண்டிக் கூட்டம் என்றார்கள். ஆனால், தனி மனித உரிமையைப் போற்றுகிற, பெண்ணுக்கு எல்லா உரிமைகளும் இருந்த அந்த வாழ்க்கை முறையின் விழுமியங்கள் நாகரிக வாழ்க்கை நிலவுவதாகச் சொல்லப்படும் இன்றைய வாழ்க்கை முறையில் அணுவளவும் இல்லை என்பதையும், உண்மையில் அவர்கள் வாழ்ந்ததுதான் நாகரிக வாழ்க்கை எனவும், நாம் வாழ்வதுதான் காட்டுமிராண்டி வாழ்க்கை என்பதையும் பின்னந்தலையிலடித்து உரைக்கின்றன இந்த கௌரவக் கொலைக் கொடூரங்கள்!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி! திரு.வேக நரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் காட்டுமிராண்டிகளை பற்றி தெரிந்து கொளவதற்கத்தான். திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  10. நாகரிக வாழ்க்கையைத்தான் காட்டுமிராண்டி வாழ்க்கை என்று காட்டுமிராண்டிகள் நாகரிகமானவர்களுக்கு உரைத்திருக்கிறார்கள் திரு.ஞானபிரகாசன் அவர்களே!!!!

    பதிலளிநீக்கு
  11. //நாகரிக வாழ்க்கையைத்தான் காட்டுமிராண்டி வாழ்க்கை என்று காட்டுமிராண்டிகள் நாகரிகமானவர்களுக்கு உரைத்திருக்கிறார்கள் திரு.ஞானபிரகாசன் அவர்களே!!!!// - 100க்கு 100 உண்மை!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...