வெள்ளி 14 2014

“புறம்போக்கு”சிறைச்சாலையை மையப்படுத்தும் படமாம்...

ஜூலியஸ்பூசிக் http://ta.wikipedia.org/s/3r3t


சிறைச்சாலை வழியாகத்தான் மனித நாகரிகம் வளர்கிறது என்று சொல்கிறார். “புறம்போக்கு” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான் ஜனநாதன்.

இதற்கு ஆதரவாக அவர்,  “தூக்கு மேடை குறிப்புகள்” என்ற நூலை எழுதிய ஜூலியஸ் பூசிக்-கை பற்றி சொல்கிறார்.செக்கோஸ்லோவோக்கியாவின் கம்யூனிஸ்ட்  தோழர் ஜூலியஸ் பூசிக்  இட்லரின் நாஜிக் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு  கொல்லப்படுகிறார். ஜூலியஸ் பூஷிக் கொல்லப்பட்டவுடன் அவரின் சிறைக் குறிப்புகளை தேடி எடுத்து  அவருடைய மனைவி ”தூக்கு மேடைக் குறிப்புகள்” என்று வெளியிடுகிறார்...

மனித நாகரிகம் சிறைச்சாலை வழியாகத்தான் வளருகின்றது என்று சொல்லியிருக்கிறார். நிலவுகின்ற (முதலாளித்தவ,பாசிச)அரசியலையும் அதன் தத்தவத்தை எதிர்த்தபோது .சிறை பிடிக்கப்படுகிறார். சிறையில் அடைக்கபட்டவுடன் அவருடைய தத்துவம் நடைமுறைப்படத்தப்படுகிறது. வரலாறு முழுக்க சிறைச்சாலை வழியாகத்தான் சமூகம் வளர்ந்து வந்திருக்கிறது என்று ஜூலியஸ் பூசிகக் சொன்ன குறிப்புகளின் ஒரு விஷயத்தை  இந்தப் படத்தில் சொல்கிறேன் என்றார்.இயக்குநர்

கூடவே.....பகத்சிங் சிறையிலிருந்த போது நிகழ்ந்த சம்பவத்தையும் தன் “புறம்போக்கு” படத்தில் குறியீடாக  பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்.

இந்தப்படத்திற்க்காக உண்மையான சிறைச்சாலையாக இரண்டு கோடி செலவில் 150 கார்பெண்டர்களுடன் முப்பது நாட்களில் அமைத்து 500 பேர்களுடன் 55 நாட்கள் சிறைச்சாலை படப்பிடிப்பு நடந்தது. கல்யாண நாள் மாதிரி இருந்தாக  தெரிவித்தார்.

சிறைச்சாலைக்கு போகாதவர்களால் சிறைச்சாலை அனுபவம் தெரிய வாய்ப்பில்லை.என்றாலும் . தனியாக சிறைச்சாலை சென்று வந்தவர்களுக்கு   சிறைச்சாலை அனுபவம் பற்றி “ புறம்போக்கு” படம் வந்தப்பிறகுதானே தெரியும். ஜனநாதனின் சிறைச்சாலை ரியாலிட்டியா??? சினிமாத்தனமா...? என்று......................

rsz_purampokku (1)
http://puthucinema.com/

11 கருத்துகள்:

  1. //சிறைச்சாலைக்கு போகாதவர்களால் சிறைச்சாலை அனுபவம் தெரிய வாய்ப்பில்லை.என்றாலும் . தனியாக சிறைச்சாலை சென்று வந்தவர்களுக்கு சிறைச்சாலை அனுபவம் பற்றி “ புறம்போக்கு” படம் வந்தப்பிறகுதானே தெரியும். ஜனநாதனின் சிறைச்சாலை ரியாலிட்டியா??? சினிமாத்தனமா...? என்று.//
    சரியா சொன்னீர்கள் இது. எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
    கத்திபடத்தை விவசாயிகளின் துன்பங்களை வெளியே கொண்டுவத்த படம்,கம்யூனிஸ்டு கொள்கையை விளக்கும் படம் என்று சிலர் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. அந்தப் படம் வரும்போது நமக்கு நிணைவிருந்தால்...பார்க்கலாம் திரு.கில்லர்ஜி அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  3. படம் வரும்போது இல்லாத பில்டப்பெல்லாம் செய்து விளம்பரம் செய்கிறார்கள் வந்தப்பின் படம் பார்த்தவர்களை கேட்டால் பெரிய டப்பா..என்கிறார்கள்...சினிமா வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை கச்சிதமாகத்தான் செய்கிறார்கள்.திரு. வேகநரி அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  4. தாமத வருகையை மன்னியுங்கள் வலிப்போக்கரே!
    உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
    பாலன் என்பாரின் தூக்குமேடை நினைவுகள் என்று பாலன் என்பார் எழுதிய அவரது அனுபவத்தைப் பார்த்த நினைவு!
    சமூக சேவையா என்ன...?
    காசு பணம் துட்டு மணி மணி
    த ம +1

    பதிலளிநீக்கு
  5. சிறைச்சாலை சென்று வந்தவர்களுக்கு சிறைச்சாலை அனுபவம் பற்றி “ புறம்போக்கு” படம் வந்தப்பிறகுதானே தெரியும்.
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. ரீல் எப்படி ரியலாக முடியும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  7. ரீல் எப்படி ரியல் ஆகும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  8. இது ஜூலியஸ்பூசிக்-ன் தூக்குமேடை குறிப்புகள்...வரலாற்றை தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்க்காவும் இருக்கலாம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. அடி வாங்கினவர்களுக்குதானே வலியின் கொடூரம் தெரியும்.தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. ரீலை.... ரியல் என்றுதானே பூச்சூட்டுகிறார்கள்....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...