வியாழன் 13 2014

இந்தத் தொடரைப் பற்றி புகார் இருந்தால் தெரிவிக்கவும்...

www.tamilula.com



உலகத்தில் இருக்கும் ஸ்டார் டீவியின் பல கிளைகளில் ஒன்றான தமிழக ஸ்டார் விஜய்டீவியில் ஒளி-ஒலி பரப்பாகும் “தெய்வம் தந்த வீடு” தொடரில்

புதன் கிழமை12/11/14 அன்று  காட்டிய காட்சியில் சித்ராவின் மருமகளான சீதா மயக்கம் தெளிந்து முழித்து பார்த்தபோது எதரில் கிருஷ்ணன் சிலை இருப்பதைக் கண்டதும் வேண்டிக் கொள்கிறாளாம்

பக்தி பரவசத்தில் எழுந்திருக்க முயன்றபோது கயிற்றால் கட்டப்பட்டு இருப்பது கூமுட்டை சீதாவுக்கு தெரியவருகிறதாம். கட்டுலிருந்து விடுபட முயன்றபோது முடியவில்லையாம்.

சுற்றும் முற்றும் பார்க்கிறாள் சீதா.... பாஞ்சாலிக்கு அவ்வுளோ சேலை கொடுத்து உதவிய மாதிரி..இந்த சீதாவுக்கும் கிருஸ்ணன் உருவில் இருக்கும் கண்ணன் ஒரு “கத்தி”யை கொடுத்து உதவுகிறானாம்.

என்ன பிரயோசனம் கொடுத்த “கத்தி”யோ மொட்டை கத்தி யாக இருக்கிறது.
திருடன் வீட்டில மொட்ட கத்தியா இருக்கும்.. கத்தி கொடுத்த பகவான் பதமுள்ள “கத்தி” கொடுத்து இருந்தால்...தொடரில் நடித்திருந்த சீதா அந்த கத்தியால்  கயிரை அறுத்து தப்பித்தால் என்று ஆறுதல் அடையலாம் 

 கிருஷ்ணன் கொடுத்ததோ..மொட்டை  “கத்தி”  அதை வைத்துக் கொண்டு எப்படி அறுத்து இருப்பாள்..... யோசித்த போது அதையும் ஒரு வினாடிக்குள் காட்டி முடித்துவிட்டார்களாம்.....

 அதோடு அந்த மொட்டக்கத்திய காட்டிய போது...“ இந்தத் தொடரைப்பற்றிய புகார் இருந்தால் தெரிவிக்கவும் என்று  வேறு அறிவிப்பு வந்ததாம்....

இதைப்பற்றி ரெண்டு தொடர் ரசிக மாமணிகள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு இருந்தார்களாம் மொட்ட  “கத்தி”ய பற்றி நாம எப்படி புகார் தெரிவிக்கிறது என்று...

களவானிபய. கிருஷ்ணன் .சீதாவுக்கு மொட்ட....“கத்தி”ய கொடுத்துப்புட்டான்டா..........!!!!!!!!!!!!!

 திருட கொடுத்த கத்தி பட கதையாசிரியர்  பராவாயில்லை..“கத்தி” பார்த்துவிட்டார்.


4 கருத்துகள்:


  1. நண்பா, இந்த எழவுகளை எல்லாம் உட்கார்ந்து பார்க்கிறீங்களா ?

    பதிலளிநீக்கு
  2. நான் எங்க பாத்தேன்.. அந்த நல்ல பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை நண்பா.... ரெண்டு அம்மணிகள் ரெமப நேரமா பேசிக் கொண்டு இருந்ததை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு அம்மணியின் குடும்பத்தலைவர் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டு இருந்த போது நான் கேட்டது......

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ண லீலையில் இனி மொட்ட கத்தியும் சரித்திரத்தில் இடம்பெறும் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. சேலையே சரித்திரத்தில் இடம் பெற்று இருக்கும்போது கத்தி இடம் பெறாமலா.......!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...