செவ்வாய் 30 2014

கோட்சேவுக்கு சிலை..பிறகு கோயில்..!!!






சுடப்பட்டு செத்தவர்க்கு சிலை வைக்கும்போது..சுட்டவர்க்கு சிலை வைக்கக்கூடாதா..? என்று ஒரு கேள்வி....

சுடப்பட்டுச் செத்தவரும் வ்ர்ணாசிரமத்தை ஆதரித்தார்..சுட்டவரும் வர்ணாசிரமத்தை ஆதரித்தார். முன்னவர் வர்ணாசிரம கொள்கையில் மிதவாதியாய் இருந்தார். பின்னவர் தீவிரவாதியாய் இருந்தார்


முன்னவருக்கு பல இடங்ககளில் சிலை வைத்து சுதந்திரத்துக்காக பாடுபட்டவர் என  ஏட்டில் எழுதியும் சினிமா படம் பிடித்து  காட்டிக் கொண்டு ,அவருக்கு ஒளி வட்டம் கொடுத்து  வந்தது அவரது சார்பான கூட்டம்.
Image result for கோட்சே சிலை

பின்னவரின் கூட்டத்தாருக்கு  வராது வந்த மாமணியான ஆட்சியதிகாரம் கிடைத்தவுடன். சுட்டவருக்கு புகழ்மாலை சூட்டி சிலை வைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாதிவெறி குலதெய்வத்துக்கு  சிலை வைத்து அந்த சிலைக்கு அரசே சாதிவெறிக்கு பத்தி கொளுத்தி வருடந்தோறும் தங்க காப்பு அணிவித்து  சாதிவெறியை மூட்டி    தாழ்த்தப்பட்டவர்களை பலி கொடுப்பது போல்.....




 வர்ணாசிரமத்தை காத்த தியாகி கோட்சேவுக்கும்  இந்துஸ்தானில்  ஆட்சியை பிடித்தவர்கள் இந்துஸ்தானில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள்...

சிலை வைத்து  சில நா்ட்கள் கோட்சேவின் பிறந்த நாளில் முன்னோட்டம் பார்த்துவுிட்டு ,கோவிலே கட்டி அந்தக் கோவிலுக்கு சூலாயுதம் கொண்டு  நாத்திகர்களையும், முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் பலி கொடுப்பார்கள்.


8 கருத்துகள்:


  1. சவுக்கடி நண்பா,,, ஆனால் உரைக்கவில்லையே அரசுக்கு...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. நினைக்கும்போதே வேதனையாக உள்ளது. இதுதான் கலிகாலம் என்பார்களோ?

    பதிலளிநீக்கு
  3. நீங்க சொல்றதைப் பார்த்தால் ,நாடு சீக்கிரமே வல்லரசு ஆயிடும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  4. சூடு,சொரணை, வெட்கம்,மானம் உள்ளவங்களுக்குதான் நண்பா..உரைக்கும்....

    பதிலளிநீக்கு
  5. கலிகாலம் எப்போதோ ஆரம்பித்தவிட்டது ஐயா.... கலிகாலத்தின் மத்தியில..இருக்கிறமா.. கடைசியில இருக்கிறாம்மா.... இன்னும் சீக்கிரத்திலே தெரிந்துவிடும் ஐயா....

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கு தெரியாதா நண்பரே...நாடு மோடி தகவல் நுட்பத்தின் மூலமா பிரச்சாரம் செய்தப்பவே... வல்லரசாகியிடுச்சு.......

    பதிலளிநீக்கு
  7. "அன்பும் பண்பும் அழகுற இணந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!

    வலைப் பூ நண்பரே!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. நட்புடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து கூறும் நண்பர்க்கு ஆங்கில புத்தாண்டா... தமிழ் புத்தாண்டா...என்று வேறுபடுத்தி சொல்லியிருக்கலாமே.......

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...