ஞாயிறு 07 2014

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்...

படம்-http://ta.wikipedia.org/s/48v
சொத்து குவிப்பு வழக்கில், கொள்ளைக்காரியான, வாய்தாராணிக்கு ஜாமீன் வழங்கிய  விவகாரத்தில் உச்ச மன்ற நீதிபதி மீது..சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி ஜனாதிபதியிடம் புகார் மனு  அளித்துள்ளார்.

கூடவே, மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானாந்த கவ்வுடா விடமும் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில்

சொத்து குவிப்பு வழக்கில் கொள்ளக்காரிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் சட்ட வரைமுறையின்படி ஜாமீன் தர மறுத்தது.

இதையடுத்து கொள்ளக்காரியும், கொள்ளக்காரியின் கூட்டாளிகளும் உச்சி குடுமி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இதில் உச்சி குடுமி தலைமை நீதிபதி தத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீன் வழங்கியது.

இந்த ஜாமீன் உத்தரவில் விளக்கமாக எதுவும் குறிப்பிடாமல்.ஒரு வரியில் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார்.

பொதுவாக அப்பீல் செய்யும்போது வழக்கு விசாரனை நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சட்ட நெறி முறைகளை பின்பற்றாமல் ஜாமீன் கொடுக்கும்போது எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் சந்தேகத்தை எற்படுத்தி உள்ளது. ஜாமீன் வழங்கியதில் ஏற்பட்ட சந்தேகத்தின் தொடர்பாக..விசாரனைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழு விசாரித்து முடிவு அறிவிக்கும்வரை “தத்து” தலைமை நீதிபதியாக செயல்படக்கூடாது. என்று தன் மனுவில் கூறியுள்ளார்.

சட்டப் போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி அவர்களுக்கு

கொலைகாரர்களும் கொள்ளைக்காரிகளும், ஆளும்  காட்டுமிராண்டிகள் நிறைந்த நாட்டில், “சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” போலதான் ..அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய உச்சி குடுமி நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் என்பது தெரியாமலா இருக்கும்...

11 கருத்துகள்:

  1. தெரிந்து இருந்தாலும் கூட தைரியமாக சட்டப் போராட்டம் நடத்தும் அவர் பாராட்டப்பட வேண்டியவர் தானே ?
    தம் 1

    பதிலளிநீக்கு
  2. மறுப்பதற்கில்லை........அவர்கள் அதைத்தான் திீர்ப்பாக சொல்லப்போகிறார்கள் என்பதை சுட்டிகாட்டவே....இந்தப் பதிவு..

    பதிலளிநீக்கு

  3. “தத்து” தலைமை நீதிபதிக்கு பித்து பிடிச்சுப்போச்சோ...
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  4. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவளாய் இருக்கட்டும் என்று ராமசாமயின் விருப்பம் நிறைவேறினால் நல்லதுதான்.
    தம 3

    பதிலளிநீக்கு
  5. பித்து பிடிக்கவில்லைநண்பரே! பித்தனாய் மாறிவிட்டாரு.....

    பதிலளிநீக்கு
  6. கனிமவளக் கொள்ளையை விசாரிக்கவேண்டி மனு போட்டவருக்கு கிரானைட்ட மட்டும் விசாரிச்சா போதும் பின்னாடி பாத்துக்கலாம் என்பது மாதிரிதான் இதுலேயும் அவருக்கு நடக்கும்..திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  7. ம்ம்,
    நம்பிக்கை அதுதானே நம்மைப் போன்றவர்களிடம் இருக்கும் கடைசிச் சொத்து வலிப்போக்கரே!

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. தத்துவின் நீதியற்ற செயலை டிராபிக் இராமசாமி வெளியே கொண்டுவந்திருக்கார்.

    பதிலளிநீக்கு
  9. கடைசியாக இருக்கிற கோவணத்தையும் உருவிக்கிட்ட மாதிரி...கடைசி சொத்தான நம்பிக்கையையும் இல்லாமல் ஆக்கிவிட்டார்களே!! திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  10. டிராபிக் இராமசாமிக்கு முன்னாலயே நாடு போற்றாத நல்லவர்கள் அம்பலத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள். திரு. வேக நரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...