பக்கங்கள்

Tuesday, January 13, 2015

இந்து மனுதர்மக் கொடுங்கோன்மைக்கு சில சான்றுகள்..

படம்--
இந்துத்துவம் ஒரு வாழ்க்கை முறையென்றும்.இமயம் முதல் குமரி வரை இந்திய மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சாரம் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ் .  பாரத கலாச்சாரம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் பார்ப்பன பயங்கரவாதம் இமயம்முதல் குமரி வரை எண்ணிலடங்கா மக்களை பலி கொண்டிருக்கிறது.


அவர்களின் அந்த  மனுதர்ம கொடுங்கோன்மைக்கு சில சான்றுகள்.

1930-களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிலிருந்த கேரளா- வைக்கம் நகர வீதிகளில்  நடப்பதற்குகூட தாழ்த்தப்பட்ட, ஈழவ சமுதாய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.   (அன்று பெரியார் தலைமையில போராட்டம் வென்றது.. அன்றைய காங்கிரசின் பார்ப்பன கும்பலையும் சங்கராச்சாரியையும் கதி கலங்க வைத்தது)

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிலிருந்த குமரி மாவட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்... சாணார் சமூகத்துப் பெண்கள் மார்பை மறைக்க கூடாது என்பது அரசாங்க சட்டம். இந்த கொடுமைக்கு எதிராக அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி  , மேற்சட்டை அணிந்தார்கள். “ சாணார் பெண்கள் மார்பை மறைப்பது மேல் வருணத்தாராகிய (பார்ப்பனர்) எங்களது மத உணர்வை புண்படுத்துகிறது” என்று பிரிட்டீஷ் ராணியிடம் புகார் செய்தார்கள் கேரளத்து பார்ப்பனர்கள்.


 குஜராத்தில் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நரோடா பாட்டியா எனும் அகமதாபாத் நகரத்தில் நடத்திய  இனப்படுகொலையில் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட முசுலீம் மதத்தை சேர்ந்த  மக்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் போல நாற்புறமும் சுற்றிவளைத்து எரித்துக் கொல்லப்பட்டனர்.


அரியானா மாநிலம் துலேனா-வில் மாட்டின்  தோலை உரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஐந்து தலித்துகளை விசவ இந்து பரிசத்தின் குண்டர்களும் போலீசும் சேர்ந்து பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தனர். இந்துக்களை பொருத்தவரை கோமாதாவின் உயிர் புனிதமானது என்று அறிக்கை விட்டான் கிரிராஜ் கிஷோர். “ 5 தலித்தகளை வெட்டிக் கொன்ற கொலைகாரர்களை கைது செய்யக் கூடாது” என்று ஊர்வலம் விட்டார்கள் ஜாட் சாதி வெறியர்கள். போலீசோ.. மாட்டை கொலை செய்தற்க்காக கொல்லப்பட்டு இறந்துபோன தலித்துகள் மீதே வழக்கு பதிவு செய்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்ணியத்தில்  தலித்துக்களின் “ நாக்கை அறு, காதில் ஈயத்தை ஊற்று” என்று கூறும் மனு நீதியை மிஞ்சும் தண்டனை . உழைத்து வாழும் தலித்துக்கு வழங்கப்பட்டது   அது “நாய் தின்னும் மலத்தை மனிதனின் வாயில் திணித்த தண்டனை.  எதற்கு இந்த தண்டனை என்றால் ”லஞ்சக் காசை நக்கி வயிறு வளர்த்த ஒரு  மேல் “ஜாதி” நாய் பீ தின்று வயிறு வளர்க்கும் ரகசியத்தை ஊருக்கே தமுக்கடித்து அறிவித்தற்க்காக...........


மீனாட்சிபுரத்தில் 1981இல் 1000 தலித் மக்கள் இசுலாமுக்கு மதம் மாறியபோது, ஆர்.எஸ்.எஸ்.அலறித் துடித்தது. உடனே... பாரத ரதனா விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ள  வாஜ்பாயி உடனே மீனாட்சி புரத்துக்கு வந்திறங்கினார். “ தலைக்கு ஒரு லட்சம் தருகிறோம். தாய் மதத்துக்கு திரும்புங்கள்” என்று ஆசை காட்டினார். “ உன் மதத்துக்கு வேண்டுமானால் விலை குறிக்கலாம், எங்கள் மானத்துக்கு விலை வைக்க முடியாது” என்று முகத்திலடித்தார்கள் மக்கள். அதனால்தான்    சட்டம் போட்டு மதமாற்றத்தை தடுக்க வேண்டுமென அலறுகிறது சங்க பரிவாரம் தலைமையிலான மோடி அரசு.

கூத்திரம்பாக்கத்தில் மக்கள். அரசாங்கத்தையே ஆட்டிவைத்தவரும் சங்கரராமனை கொலை செய்து விடுதலையான சங்கராச்சாரிக்கு அடிபணிய மறுத்தன 60 தலித் குடும்பங்கள். “ நாங்கள் வழிபட முடியாத கடவுள் எங்களுக்குத் தேவையில்லை, மதம் மாறுகிறோம் ” என்று அறிவித்தார்கள். இதனால் அமைச்சர் வந்தார், அதிகாரிகள் வந்தார்கள், சங்கராச்சாரி வந்தார்., ஆனால் கடவுளான  சாமி மட்டும் தலித் தெருவுக்கு வரவேயில்லை... மதம்மாறும் முடிவிலிருந்து மாறத தலித் மக்களை இந்து மத லாக்-அப்பில் அடைத்து வைக்க கடைசியாக போலீஸ் வந்தது. அன்று இந்து மதத்தின் ஜாதிய முகத்திரை கிழிந்து தொங்கியது.இப்படியான பல இந்து மனுதர்மக் கொடுங்கோன்மைகள்  இது மட்டுமல்ல  அன்றிலிருந்து இன்றுவரை  இன்னும் அதிகமாக  இருக்கின்றன.


நன்றி! ---புதிய கலாச்சாரம் மற்றும் புதியஜனநாயகம் மாத இதழ்கள்.

10 comments :


 1. விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என 6 அறிவு மனிதன் பீற்றிக்கொள்கிறான் ஆனால் ? அவனுக்கு அறிவு வளர்ந்து விட்டதா ? என்ற குழப்பத்திற்க்கு மட்டும் விடை கிடைக்கவே இல்லை.
  த.ம.1

  ReplyDelete
 2. 6அறிவு மனிதனை 5அறிவு விலங்குகள் அடக்கி கொண்டு இருக்கும்வரை விடை கிடைக்காது...

  ReplyDelete
 3. இப்போது பெருமாள்முருகன் மேல் பாய்ந்து இருப்பதும் ,மனுதர்மத்தின் பசுத்தோல் போர்த்திய புலியின் மறுபக்கம்தான் !

  ReplyDelete
 4. இந்து மதத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று கூறிவிடமுடியாது . ஒருமுறை ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் , பெந்தகோஸ்மே சபைக்கும் கத்தோலிக்கர்களுக்கும் நடந்த சண்டையை சென்னையில் கண்ணெதிரே கண்டிருக்கிறேன் . ஹூமாயுனை ஷியா பிரிவிலிருந்து சன்னி பிரிவுக்கு மாறசொல்லி பாரசீக ஆரசன் ஷா கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவைத்திருக்கிறான் . யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நடந்த படுகொலைகள் கிட்டத்தட்ட 20 நூற்றாண்டுகளாக இன்னும் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளது . கிறித்தவர்களுக்கிடையே கருப்பன் , வெள்ளையன் போன்ற பிரச்சனைகள் இன்னும் பல கொலைகளுக்கு காரணமாய் மேலைநாட்டில் நடந்துவருகிறது . முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் நடந்த இஸ்ரேல் புனிதப்போரினை தாங்கள் அறிந்திருப்பீர்கள் . இந்தியாவில் மொகலாயர்களும் , ஆப்கனியர்களும் , மங்கோலியர்களும் செய்த படுகொலைகளை கணக்கிட்டால் பலகோடியைத்தாண்டும் . தைமூர் இந்தியாவிற்கு வந்தபோது மாத்திரம் 10 ்லட்சம் படுகொலைகளைச்செய்திருந்தனர் . ஹூமாயுன் , நாடோடியாக திரிந்தபோது , உணவுக்கு வழியில்லாமல் ஒரு ஊரிலிருந்த பசுக்களை வெட்டிச்சாப்பிட்டு , அவ்வூர்வாசிகளால் நையப்புடைக்கப்பட்டு துரத்திவிடப்பட்டார் என்று வரலாற்று ஆசிரியரும் ஹூமாயுனின் அவையிலிருந்தவருமான அப்துல் தெரிவித்துள்ளார் . ஏன் , மதமாறிய மக்களுக்கு மட்டும் உயர்வான அந்தஸ்து சமூகத்தில் கிடைத்துவிட்டதா ? நாடார் பெண்கள் திறந்த மார்புடன் திரியவேண்டுமென்று ஆதிக்ககுலத்தார் போட்டிருந்த சட்டத்தை மதமாற்றத்தின் காரணமாய் மாற்றவில்லை . நாடார்கள் கடுமையாக உழைத்து , தங்களின் பொருளாதார நிலையில் ஏற்றம் கண்டு சமூகத்தில் உயர்வடைந்தனர் . தலித்துகள் பிரச்சனையில் பார்ப்பன அரசியல் இருப்பதென்பதோ உண்மை தான் . ஆனால் அதை அவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்திக்கொள்வதன்மூலமே சமூகமாற்றத்திற்கு அடிகோல முடியும் . ஆங்காங்கே சில ஆதிக்க சமூகத்தினரால் நடக்கும் பிரச்சனைக்களை , உலக பிரச்சனைபோல் எடுத்திக்காட்டி , தலீத் மக்களிடையே அரசியலை வளர்க்கும் அற்ப புத்தியுடன் திரியும் அரசியல்வாதிகள் போலில்லாமல் , உண்மையாக அவர்களின் உயர்வுக்கு வழிசெய்வது ஒன்றே அவர்களை உயர்த்தும் .

  ReplyDelete
 5. பெரும்பாண்மையுள்ள இடங்களில் புலியாகவும் இல்லாத இடங்களில் பசுத்தோல் போர்த்திய புலியாகவும் பாய்வதுதான் மனுதர்மத்தின் தந்திரம்

  ReplyDelete
 6. எல்லா வகையான் மதங்களிலும் சமத்துவம் நேர்மை கிடையாது.இன்மையில் உள்ள கஷ்டங்களுக்கு காரணம் எதுவும் கூறமால் இல்லாத ஒரு உலகத்தையே வாயப்பந்தலில் காட்டுகின்றன்.திரு.திருமுருகன் அவர்களே!!

  தலித் மக்களில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் இன்னொரு வகை ஆதிக்கச் சாதியினராகவும்... எல்லா மூடப்பழக்கங்களும் கொண்ட கருப்பு வகை பார்ப்பனராக உள்ளனர்.திரு

  ReplyDelete
 7. மனு நீதி..மனித நீதியே அல்ல---உண்மைதான் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!

  ReplyDelete
 8. என்று மதம் வேண்டாம் மனிதம்தான் வேண்டும் என்று மாந்தர்கள் உண்டருகிறார்கள் என்றால் , அது பூமியின் அழிவு நாளாகத்தான் இருக்கும். மொழி , மதம், இனம் , நாடு, சாதி , சமயம் , இனம் என்ற பெயரில் நட்ககும் வன்முறைகள் அனைத்தும் சமூகத்தில் இருந்து களையப்படவேண்டியவை .

  ReplyDelete
 9. மொழி , மதம், இனம் , நாடு, சாதி , சமயம் , இனம் என்ற பெயரில் நட்ககும் வன்முறைகள் அனைத்தும் சமூகத்தில் இருந்து களையப்படவேண்டியவைதான் அதற்க்கான சரியான வழிமுறைகளில் மக்கள் செல்வதில்லை என்பதும் உண்மை

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com