செவ்வாய் 17 2015

பழைய விசுவாசத்துக்கு சிலைக்கடன்...............

படம்-www.dinamani.com-

உலகத்திற்கு நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் கற்றுக் கொடுத்தாக பீற்றிக் கொள்ளும் அந்நாடு, ,உலகின் பல நாடுகளை கபலிகரம் செய்து அந்நாட்டை  கொள்ளையடித்ததோடு மட்டும் இல்லாமல் விடுதலைக்கு போராடிய நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கிய  உலகின் பழமையான ஜனநாயக நாட்டிற்கு ,உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் பிறந்து,, வளர்ந்து பலவிதங்களில் பக்கபலமாகவும், பெரும் உதவியாகவும் இருந்து கால ஓட்டத்தில் மறைந்து போனாலும்....

உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் கரன்சி நோட்டில் இடம்பிடித்து தனது பொக்கை வாயை காட்டிக் கொண்டு இருப்பவரக்கு. உலகப்போரில் தனது படைக்கு உலகில் பெரிய ஜனநாயகநாட்டிலிருந்து ஆள்திரட்டி படைக்கு உதவிய விசுவாசத்தைப்போல் எண்ணிடங்கா விசுவாசத்திற்கு  நன்றிக்கடனாக...

உலகின் பழமையான ஜனநாயக நாட்டின் தலைநகரில் உள்ள, அந்நாட்டு நாடாளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தின் சதுக்கத்தில் ஒன்பது அடி உயரமுள்ள வெண்கல சிலையை நிறுவி, பழமையான விசுவசத்திற்கு  பிரதி பலனாக சிலைக் கடனை நிறுவி திறந்து வைத்தது,  உலகத்திற்கு ஜனநாகத்தையும் நாகரித்தையும் கற்றுக் கொடுத்தாக சொல்லிக் கொள்ளும் அதி பயங்கரமான முன்னால் கொடுங்கோல் அரசு....

27 கருத்துகள்:

  1. இங்கே இருக்கிறவர்கள் காந்தியை கேவலமாப் பேசுவதும் ,அங்கிருப்பவர்கள் அவருக்கு சிலையை வைப்பதும் ...என்னதான் நடக்குதுன்னு புரியலே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுஒன்னுமில்ல ஜி..இங்குள்ளவர்களை முதுகில் குத்தியிருக்கிறார்.. அங்குள்ளவர்களை முதுகில் தட்டி கொடுத்து இருக்கிறார் இந்திய கரன்சி நோட்டில் இருக்கும் காந்தி....

      நீக்கு
  2. ஏதோ நினைத்துப்பார்க்கிறார்களே என்று கொள்வோமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. ஐயா... உப்பிட்டவரை உள்ளலவும் மறக்க கூடாதல்லவா.....

      நீக்கு
  3. நம்ம நாட்டான் சிலையை இடிக்கிறான், வெளிநாட்டான் சிலையை வடிக்கிறான்.
    த.ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் கோட்சே சிலை வடிக்க டெண்டர் விட்டுருக்கான் ஜி.. டெண்டர இன்னும் யாரும் வாங்கல...ஜி

      நீக்கு
  4. உலகத்திற்கு ஜனநாகத்தையும் நாகரித்தையும் கற்றுக் கொடுத்தாக சொல்லிக் கொள்ளும் அதி பயங்கரமான முன்னால் கொடுங்கோல் அரசு...

    அவங்க பயங்கரமான கில்லாடிங்க. அவர்களுக்கு பஜனை பாட பல தமிழர்கள் இங்கே இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் தமிழர் எதிலும் தமிழர் இருக்கும்போது அவர்களுக்கு பஜனை பாட தமிழர்கள் இல்லாமல் இருப்பார்களா...!!திரு. வேகநரி அவர்களே!!

      நீக்கு
  5. இன்னும் விரிவா எழுதியிருக்கலாம் தல .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவாக எழுதலாம்தான்...ஏனோ எழுத தோனவில்லை திரு. மெக்னேஷ் அவர்களே!!!

      நீக்கு
  6. பதில்கள்
    1. என்னமோ எனது சிந்தனைக்கு தோன்றியது திரு. பொன்தனபாலன்ஜி அவர்களே!!!

      நீக்கு
  7. இப்போ நம்மைப் பார்த்து பயம் வந்துவிட்டது என்று கொள்ளலாமா? ஆனாலும் ஏனோ மனம் சந்தோசப்படல, ஆனால் தங்களின் சொல்லடி ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ எனக்கு தோன்றிய சிறு வகையிலான சொல்லடி திரு. மகேஷ்வரி பாலசந்திரன் அவர்களே!!

      நீக்கு
  8. பதில்கள்
    1. இந்தக் கருத்துரையை நான் எப்படி புரிந்து கொள்வது திரு. இ.பு. ஞானபிரகாசன் அவர்களே!!

      நீக்கு
    2. நல்லது. அந்த காந்தியின் பிரிட்டீஷ் காரர்களுக்கு செய்த பணிகளை தாங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.நண்பரே...

      நீக்கு
    3. காந்தியடிகள் மட்டுமில்லை, பெரியாரும் வர வர அளவுக்கு மீறித் தூற்றப்படுகிறார். எனக்கு இத்தகைய குற்றச்சாட்டுகளில் ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை.

      பெற்று வளர்த்து நாம் இருபதாண்டுகளுக்கும் மேலாக மிக நெருங்கிப் பழகும் தாய் தந்தை, நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக வேறு யாரையும் விட உடலாலும் உள்ளத்தாலும் நெருங்கிப் பழகும் மனைவி, நம் உடம்பிலிருந்து வெளிவந்து பிறந்த நாள் முதல் நாம் உயிர் விடுகிற நாள் வரை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் நம் கண் முன்னே நாள்தோறும் நாம் பார்க்க வளரும் பிள்ளைகள், இவர்கள் யாரையும் விட நம்மைப் பற்றிக் கூடுதலாய் அறிந்தவர்களான நம் நண்பர்கள் ஆகியோரே வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் தவறாக நடந்து விடுகிறார்கள், நம்மைத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது, நாம் அவர்களைப் பற்றித் தவறாக நினைத்துக் கொள்கிறோம், தவறாகப் புரிந்து கொள்கிறோம். இப்படி ஒரு நிகழ்வு எல்லோர் வாழ்விலும் ஒருமுறையாவது நிகழாமல் இல்லை. அப்படியிருக்க, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், நாம் கண்ணால் பார்த்துக் கூட இராத இந்தத் தலைவர்களைப் பற்றி நாம், இன்றைக்குக் கிடைக்கும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு "அவர்கள் அப்படியொரு காரணத்துக்காகத்தான் அந்த முடிவை எடுத்தார்கள்; இப்படியொரு காரணத்துக்காகத்தான் இந்த முடிவை எடுத்தார்கள். உண்மையான சமூக அக்கறையில் அந்த முடிவுகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தன்னலக்காரர்கள்; உண்மையாகவே அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் இல்லை" என்றெல்லாம் குற்றஞ்சாட்டுவது எந்தளவுக்கு அறிவாளித்தனம் என்பது எனக்குப் புரியவில்லை.

      நீக்கு
    4. நல்லதை விட கெட்டதே அதிக புரிந்த ஒருவரை பற்றி தெரிந்து அவரின் கெட்டதுகளை கூறவதற்கு அறிவாளித்தனம் தேவையில்லை ...அம்பேத்கர் எழுதிய நூல்களிலிருந்தே ஏராளமான ஆதாரங்களை காட்டலாம். தங்களுக்கு விறுப்பு வெறுப்பு இல்லையெனறால்..காந்தியைப்பற்றி அதிகம் எழுதியுள்ள வினவுதளத்தில் காந்தியை பற்றி தேடி படிக்கலாம்,நண்பரே.. எனக்கு காந்தியை பற்றி குறை கூறுவது புறஞ்சொல்லி எழுதுவதற்கு என் சிற்றறிவை பயன்படுத்துவதில்லை..

      நீக்கு
    5. நான் பொதுவாகத்தான் சொன்னேன் நண்பரே!

      காந்தியடிகள் தவறே செய்யவில்லை என நான் சொல்லவில்லை. காந்தியடிகளோ, பெரியாரோ, உலகத் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவ்வப்பொழுதைய அரசியல் சூழ்நிலைகளுக்கேற்பத்தான் நடந்து கொள்ள முடியும். அது மட்டுமில்லை, இந்தியா போன்ற மூடநம்பிக்கை மிகுந்த நாடுகளில் தலைவர்களும் அதற்கு ஆட்பட்டிருப்பது இயல்பே. யாராக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட அறிவாளியாக இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலையை ஒட்டித்தான் அவருடைய செயல்பாடுகளும் கொள்கைகளும் ஓரளவு மேம்பட்டு இருக்குமே தவிர, ஒரேயடியாக இன்றைய காலக்கட்ட அளவுக்கு அன்று அவர்கள் மேம்பபட்டிருக்க முடியாது. எனவே, இன்றைய காலக்கட்டத்தின் பார்வையில் அன்றைய நடவடிக்கைகளையும் முடிவுகளையும் பார்த்து விமரிசிக்கக்கூடாது என்பதே என் கருத்து. மற்றபடி, காந்தியடிகளாகவே இருந்தாலும் தவறு செய்திருந்தால் தவறுதான். அதை நாம் மறைக்கவோ, மறுக்கவோ வேண்டியதில்லை. அதே நேரம், எவ்வளவுதான் தவறுகள் செய்திருந்தாலும் காந்தி போற்றத்தக்கவர்தான். எவ்வளவுதான் நன்மைகள் செய்திருந்தாலும் இட்லரை நாம் மதிக்க முடியாது இல்லையா? அதே போலத்தான் இதுவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
    6. எவ்வளவு நல்லது செய்திருந்தாலும் கெட்டது செய்திருந்தாலும் யாரும் எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை. அந்த விமர்சன பார்வையில்தான் காந்தியயைப் பற்றி எழுதியுள்ளேன். இல்லாத கடவுளை பற்றி கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள், கடவுளை வணங்குபவர்களின் மணம் புன்புடும் என்று பார்த்தால்.... கடவுள் என்பவர் ஒருவர் இல்லை என்பதை அவர்களால் நிருபிக்கமுடியாது அவர்களின் விமர்சனம் மற்றவர்களுக்கு அதாவது என்னைப் போன்றவர்கள் தெரிந்திருக்க முடியாது .திரு. ஞானப்பிரகாசன் அவர்களே...

      நீக்கு
    7. //எவ்வளவு நல்லது செய்திருந்தாலும் கெட்டது செய்திருந்தாலும் யாரும் எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை// - அதைத்தானே நானும் சொன்னேன்? பின்வருமாறு:

      //காந்தியடிகளாகவே இருந்தாலும் தவறு செய்திருந்தால் தவறுதான். அதை நாம் மறைக்கவோ, மறுக்கவோ வேண்டியதில்லை//

      நீக்கு
    8. சரி, விடுங்கள்! இறந்து போன காந்தியடிகளின் பழம்பெருமையைக் காப்பாற்ற ஒத்த கருத்துள்ள நாம் முறுக்கிக்கொள்ள வேண்டா!

      நீக்கு
    9. உங்கள் கருத்தில் நீங்கள் இருக்கீறீர்கள். என் கருத்தில் நான் இருக்கிறேன். இதில் முறுக்கிக் கொள்வதற்கு எதுவுமில்லை நண்பரே....

      நீக்கு
  9. I condemn your misunderstanding. Nowadays it is a trend to insult popular leader and get some traffic

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தியைப்பற்றி எனக்கு தவறான புரிதல் இல்லை நண்பரே.. காந்திதான் இந்நாட்டு மக்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி இருக்கிறார் அதை நல்லவர்கள் நேர்மையானவர்கள் ஆதார ஆவணத்துடன் தொகுத்து வெளியிட்டு உள்ளார்கள். காந்தியை குறை கூறுவதால் நான் கோட்சேவின் ஆள் என்று நிணைக்க வேண்டாம் நண்பரே

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...