புதன் 11 2015

ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு

நிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்



அங்கோலாவின் கடைசி அரசியான நிசிங்காவின் வரலாற்றைக் கூறும் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் நாகரிகமடைந்த நாடுகளும், அங்கே மன்னராட்சிகளும் இருந்துள்ளன. ஐரோப்பிய காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பெரும் போர்கள் நடந்துள்ளன. ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு, தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது.

17 ம் நூற்றாண்டில் அங்கோலாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர்கள், அங்கிருந்த மன்னன் நின்கோலா வின் பெயரே, அந்த நாட்டின் பெயர் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள். அதனால், முபுண்டு மொழி பேசும் மக்கள் வாழ்ந்த இராச்சியத்தின் பெயர், அன்றிலிருந்து அங்கோலா என்று அழைக்கப் படலாயிற்று.

1583 ம் ஆண்டு, கிளுவாஞ்சி மன்னருக்கு மகளாக பிறந்த நிசிங்கா, வருங்காலத்தில் இராணியாக வருவாள் என்பதை, ஒரு அப்போதே ஒரு பெண் சோதிடர் அறிவித்திருந்தார். கிளுவாஞ்சி மன்னர், போருக்கு செல்லும் போதெல்லாம், இளவரசி நிசிங்காவை தன்னோடு அழைத்துச் செல்வார்.

அங்கோலா மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள், அங்கே கோட்டை கட்டி, மன்னருக்கு கீழ்ப்படிவான குடிமக்களையும் பிடித்து வைத்திருந்தனர். அப்போது நடந்த போரின் முடிவில், அங்கோலா மன்னருக்கும், போர்த்துகேய ஆளுநருக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

போர்த்துக்கேயருடனான சமாதான ஒப்பந்தத்தில் இளவரசி நிசிங்கா கையொப்பம் இட்டிருந்தார். சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக, கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்நானம் எடுத்து, Dona Anna de Sousa எனும் போர்த்துகேய பெயரை சூட்டிக் கொண்டார். ஆயினும், போர்த்துகேய காலனியாதிக்கவாதிகள் ஒப்பந்தத்தை மீறியதுடன், மீண்டும் போருக்குள் இழுத்து விட்டனர். பல வருடங்களாக தொடர்ந்த போரில், நிசிங்காவின் சகோதர்கள் கொல்லப் பட்டனர். இறுதியாக, மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப் பட்டது.

இதற்கிடையில், அங்கோலாவின் இன்றைய தலைநகர் லுவாண்டா உட்பட பல கரையோர பிரதேசங்கள், போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் வந்து விட்டிருந்தன. ஏனைய உள்நாட்டுப் பிரதேசங்களில், நிசிங்கா தனது இராசதானியை கட்டியெழுப்ப விரும்பினார். ஆயினும், நீண்ட காலமாக நீடித்த போர் ஏற்படுத்திய அழிவுகள், விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.

நிசிங்கா தனது 80 வது வயதில், 17 டிசம்பர் 1663, மதங்கா எனுமிடத்தில் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் காலனிய ஆட்சியதிகாரம் விரிவடைந்தது. பல்லாயிரக் கணக்கான அங்கோலா குடிமக்கள், அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அங்கோலா முழுவதும் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அங்கோலா இராணி நிசிங்காவின் வரலாறு முழுவதும் ஏற்கனவே எழுத்தில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. தற்போது அது சினிமாப் படமாக தயாரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேய மொழி பேசும் இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது


நன்றி!    கலையகம்

6 கருத்துகள்:

  1. பொம்பளை கட்டபொம்மன் போலிருக்கே :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பார்க்கிறேன் அண்ணா .

    தம+

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...