ஞாயிறு 19 2015

மனிதாபிமானத்தை மறக்கடித்த செல்போன் காதல்...

படம்- மாலைமலர்


கோட்டயம் ரயில் நிலையம். அந்த வழியாக செல்லும் ரயில்கள் யாவும் எப்போதுமே மெதுவாகத்தான் நகர்ந்து செல்லும். அந்த ரயில் நிலையத்துக்கு சற்று தள்ளி ஒரு லெவல் கிராசிங். அந்த லெவல் கிராசிங்கில் கேட் கீப்பராக தாமஸ் செயஸ்டியான் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

வழக்கம் போல் அன்று..மங்களுர்- நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் வருகைக்காக தாமஸ் செபஸ்டின் தன்பணியை செய்து கொண்டு இருந்த பொழுது ...

சற்று தொலைவு தள்ளி ,தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்த பெண் ஒருவர் தண்வாளத்திலே மயங்கி விழுவதைக் கண்டார். கண்டவுடன் பரபரப்பு அடைந்தவராக...

வந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தும் முயற்சியாக, சிவப்புக் கொடியை விடாமல் ஆட்டிக் கொண்டே யாரவது உதவிக்கு வருவார்களா என்று சுற்றும் முற்றும் விடாமல் பார்த்தார்.

அப்போது தண்டவாளத்தில் மயங்கி விழுந்த கிடக்கும் பெண்ணுக்கு அருகில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் தன் பலம் கொண்ட மட்டும் கத்தி, அந்தப் பெண்ணை காப்பாற்றுமாறு கூக்கிலிட்டார்.

கேட் கீப்பரின் கூக்குரலை காதில் வாங்கிக் கொள்ளாமல் புறந்தள்ளிய இரண்டு வாலிபர்களும், மயங்கி விழுந்த கிடந்தப் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல்  உதவி கூட செய்யாமல் தங்களது “செல்போனில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண்ணையும், ரயில் வருவதையும் நேரடிக் காட்சிகளாக மிக ஆர்வத்துடன்  பதிவு செய்து கொண்டு இருந்தனர்.

 கேட்கீப்பர் தாமஸ்செயஸ்டியான் கூக்குரலிட்டபடியே ,சிவப்புக் கொடியை ஆட்டிய வண்ணமிருந்தார். வாய் பார்த்துக் கொண்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் சிவப்பு கொடியை ஆட்டுவதை கண்டவுடன் அவரும் பதறிப்போய் ரயிலை நிறுத்தினார்.

எஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்தியும், தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த பெண்ணின் மீது மோதிய பிறகே நின்றது.

ரயில் நின்ற பிறகு வேகமாக ஓடிவந்த தாமஸ் அந்தப் பெண்ணின் உயிரற்ற உடலைத்தான்  பார்த்தார்.

ரயில்வே போலீஸ் வந்து விசாரித்தபோது. தாமஸ் சொன்னார். “ நான் ஓடிவந்து அந்தப் பெண்ணை காப்பற்றுவதற்க்குள் ரயில் வந்துவிடும் என்பதால்தான். அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர்களை பார்த்து, அந்தப் பெண்ணை காப்பாற்றும்படி கத்தினேன்.

ஆனால், அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர்களோ, அந்தப் பெண்ணின் மீது ரயில் மோதுவதை படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.. அவர்கள் உடனடியாக செயல்பட்டு இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம் என்றார்.

பின் குறிப்பு-- இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார்.  பலவகையான பழக்கங்கள்படியே இந்த செல்போன் காதல் பெரும்பாண்மையானவர்களின் மனிதாபிமானத்தைதை  கொன்றொழித்து வருகிறது .உடனடியாக வாட்ஸ் அப்பிலும், சிறிது நாள்கழித்து பேஸ்புக்கிலும் இந்தக் கொடூரம் வரும் .இதையும் பெரும்பாண்மையானவர்கள் பார்த்து இரசிப்பார்கள்.  என்றார்


17 கருத்துகள்:

  1. கதையாயினும் உண்மையைத்தான் சொன்னீர்கள் நண்பரே உணர்சியற்ற ஜடமாகிக்கொண்டு வருகிறான் மனிதன்.

    பதிலளிநீக்கு
  2. செய்தி பத்திரிக்கையில் வந்த நடந்த சம்பவத்தைதான் கதை வடிவில் சொல்லியிருக்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. அதிர்ச்சியும் அவலமும் ஒரு சேர.............
    என்ன சொல்வது..
    உலகம் எங்கு போகிறது!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு எங்கு செல்லும் அழிவை நோக்கித்தான்...நண்பரே..

      நீக்கு
  4. தங்கள் மனிதாபிமான கொலையை வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் மற்றவங்க கண்டு ரசிக்க வேண்டும் என்ற கொலை வெறி.

    பதிலளிநீக்கு
  5. மனிதாபிமானம் எங்கே?
    அய்யோ மனிதன் தன் விஞ்ஞான வளர்ச்சியை இப்படியா?
    என்ன சொல்வது
    மனம் பதைக்கிறது, இன்றைய இளைஞர்கள் விவேகமானவர்கள் என்று பெருமைபட்டுக்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, மனிதன் என்றாவது,,,,,,,,,,,,,,,,,,
    வேதனையுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் என்ற மனிதாபிமானத்தைதான் கொல்கிறது செல்போன் வளர்ச்சி.....

      நீக்கு
  6. மனிதர்கள் நாசமாகத்தான் போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதாபிமானத்தையும் வாட்ஸ்அப்பும் பேஸபுக்கும் நாசமாக்கிறது.

      நீக்கு
  7. அதுவும் இந்த வாட்ஸ் அப் வந்தவுடன் பாவிகள் மேலும் படுபாவிகள் ஆகி விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாவிகளையும் படுபாவிகளையும் எவர் இரட்சிக்க ப் போகிறார்களோ.....

      நீக்கு
  8. இப்படிப்பட்ட முட்டாள்கள் வாழும் பூமியில் நானும் இருப்பதை எண்ணி வருந்துகிறேன் !

    பதிலளிநீக்கு
  9. இந்த முட்டாள்கள் வாழும் பூமியில் வருத்தப்பட்டு பாரம் சுமந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் வேதனைப் படுகிறேன், இப்பதிவை படித்த பிறகு. இரக்க மற்ற மனிதர்கள் அல்லது தாம் செய்வது என்னவென்பதை அறிய இயலா மனிதர்கள்

    பதிலளிநீக்கு
  11. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
    பாரிசில் பட்டிமன்ற தர்பார்
    http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
    வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...