புதன் 22 2015

ஒரு அமைச்சர் சீமானின் நகைச்சுவை அனுபவம்.....


படம்-voiceofmannar.com


உலகில் பரப்பளவு கொண்ட நாடுகளில் ஏழாவதும்,,அணு ஆயுதம் வல்லமை   இராணுவ வலிமையில் உள்ள நாடாக ஐந்தாவதாகவும்  மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவதாகவும் உள்ள ஒரு தேசம் அது.

 அந்த தேசத்தில்  நீண்ட காலத்துக்குபின் ஆட்சி பொருப்புக்கு வந்தப் உள்துறை அமைச்சரும்,அவரது பாதுகாப்பு படை பரிவாரங்களின் அதிகாரிகளும் அந்த நாட்டின் உள்ள உயர்ந்த பல மாடிகளை கொண்ட பங்களாக்களில் நடக்கும் நிகழ்ச்சிக்களுக்காக... அந்த மாடியின் உயரத்துக்கு செல்லும் லிப்டில் பயணித்தனர்.

அந்த லிப்டில் அமைச்சர் உள்பட பாதுகாப்பு படை அதிகாரிகளைச் சேர்த்து நான்கு பேர்கள் பயணித்தனர்.   இந்த நான்குபேர்களுடன் ஐந்தாவதாக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரியும் லிப்டில் பயணிக்க முயன்றபோது அவருடைய உருவம் மற்றவர்களுடன் சேர்ந்து நிற்பதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் அடுத்த முறையில் வருவதாக அமைச்சரிடம் உத்தரவு பெற்று  அடுத்த முறைக்காக காத்திருந்தார்.

 நால்வருடன் சென்று கொண்டு இருந்த லிப்டானாது திடிரென்று பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. பதறிப்போன பங்களா நிர்வாகம், அவசரமாக இயங்கி லிப்டுக்குள் தவித்துக் கொண்டு இருந்தவர்களை மீட்டது.

எப்போதும் போலவே அமைச்சருக்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு படை அதிகாரிகளை முதலில் மீட்டு,கடைசியாக அமைச்சரை மீட்டது..

லிப்டுக்குள் சிக்காமல், லிப்டு மீட்புக்குழுவிற்கு தப்பித்த  எல்லை பாதுகாப்பு படை அதிகாரியைப் பற்றி ,  தான் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தன் அனுபவத்தை கூறினார்அமைச்சர்.

பெருத்த உருவமான எல்லை பாதுகாப்பு படை அதிகாரி எங்களுடன் லிப்டுக்குள் சிக்கியிருந்தால்.. அந்த எல்லை பாதுகாப்பு அதிகாரியால் நாங்களும், அந்த அதிகாரியால் லீப்டு மீட்பு குழுவினரும் ரெம்பவும் சிரமப்பட்டு  கஷ்டப்பட்டு இருப்போம்.

நல்லவேளையாக நாங்களும், லிப்டு மீட்பு குழுவினரும்  அந்த கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி அந்த தேசத்தின் அமைச்சர். எல்லை பாதுகாப்பு படை அதிகாரியிடமிருந்து தான் தப்பித்த அனுபவத்தை பகிர்ந்தார்....


16 கருத்துகள்:

  1. பாதுகாப்புப் படையினரிடமிருந்து அவரும் அவரிடமிருந்து மக்களும் தப்பிக்க வேண்டிய நிலை..!

    உண்மைதான் வலிப்போக்கரே!

    பதிலளிநீக்கு
  2. சிறிது நேரம் தப்பித்ததற்கு இப்படி என்றால் ,இவர்கள் ஆட்சியில் மாட்டிக் கொண்டு மக்கள் ஐந்தாண்டுகள் படாத பாடு பட வேண்டியிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையை கொடுத்தாகிவிட்டது படாதபாடு பட்டுதான் ஆக வேண்டும்.. நண்பரே...

      நீக்கு
    2. அப்பா..பெயரில்லா நாகரிகமா திட்டலாம் என்று அனுமதி கொடுத்தற்க்காக.... ....இப்படி....

      நீக்கு
  3. தொந்தி எல்லா இடத்திலும் பிரட்சினைதானோ.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்தில் தொந்தியும் வெயிட்டுதான் பிரச்சினை நண்பரே...

      நீக்கு
  4. மீட்புக் குழுவுக்கு
    பட்ஜெட்டில் கூடுதல் நிதி
    வலி போக்கரின் பதிவின்
    எதிரொலி!!!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொந்தியையும் உடல் கணத்தையும் குறைக்கவும் நிதி ஒதுக்கினாலும் ஆச்சாரியமில்லை நண்பரே....

      நீக்கு
  5. இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் இயற்கை கொடுத்தும் என்ன பயன்? சூப்பர். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. எங்கே என் கருத்தைக் காணோம்,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  7. என்ன வலிப்போக்கரே, இரண்டுமுறை கருத்து எழுதியும் காணோம், என் பக்கத்திற்கு பாதை தெரியலையோ??????????????

    பதிலளிநீக்கு
  8. இரண்டு தினங்களாக ான் வரும் பாதை தடைபட்டுவிட்டது. அதாவது இணைய இணைப்பு இல்லை... திரு.mageswari balachandran அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...