புதன் 29 2015

மகன் மூலம் ”மே நாள் சூளுரை”.யை தெரிந்து கொண்ட தந்தை........!!!

ndlf-may-day-notice-slider
படம்-வினவு


அந்தத் தெரு முச்சந்தியில் உள்ள டீக்கடையில்  ஒரு கூட்டமாக இருப்பதைக் கண்டதும். ஒருவர் சொன்னார்

“தோழர்  அந்தக் டீக் கடையில் கூட்டம் இருக்கிறது. நீங்கள் முன் சென்று பிரசுரத்தை கொடுத்து கொண்டு இருங்கள். தோழர்கள் இந்த வரிசைப்படியே நிதி வசூல் செய்து கொண்டு வருவார்கள் என்றார்.


அவர் கையில் பிடித்திருந்த பேனா சின்னம் வரையப்பட்டு இருந்த கொடியை தான் வாங்கிக் கொண்டு  மே நாள் பிரசுரத்தை கொடுத்தார்.


அதைப் பெற்றுக்கொண்ட தோழர் டீக்கடையில் கூடியிருந்த கூட்டத்திடம் மேநாள் பிரசுரத்தை விநியோகித்தார். கூடியிருந்த கூட்டமும் மறுப்பு ஏதும் சொல்லாமல் நீட்டிய பிரசுரத்தை வாங்கியது. சிறிது நேரத்தில் ஒவ்வொரு கடையாக நன்கொடை பெற்று வந்த தோழர்கள் அந்த டீக்கடைக்கு வந்தபோது கடைக்காரர், தோழர்களிடம் நிதி வசூல் நோட்டை வாங்கி ஒரு நோட்டம் பார்த்து விட்டு ஒரு நூறு ரூபாய் என்று எழுத்தால் எழுதிவிட்டு ரூபாயையும், நோட்டையும் கொடுத்தார். டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருந்த   பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்களும் தங்கள் பங்குக்கு நண்கொடை கொடுத்து நோட்டில் எழுத வேண்டாம் என்று மறுத்தபோது  வசூல் செய்து கொண்டு இருந்த தோழர் . அவர்கள் கொடுத்த ரூபாயை  நோட்டில் குறித்துக் கொண்டே...அடுத்த கடைக்கு நகர்ந்தார்.

மதிய வேளையில் வழக்கமாக வேலையை முடித்துவிட்டு வந்த மாரியப்பன் தான் உட்காரும் சீட்டீல் மேல்நாள் சூளுரை என்ற நோட்டீசை பார்த்தார். அதை பவ்வியமாக எடுத்து , பத்திரமாக மடித்து தன் அரைக்கால் டவுசரில் மடித்து வைத்துக் கொண்டார்.

 வேலை முடிந்து விட்டுக்கு வந்தவுடன் மகளை். மகனை பாரத்தார். மகள் தண்ணீர்பிடிக்க தாயாருடன் சென்றதை கவனித்ததும் மகனை தேடினார். மகன் விளையாடும் கிரிகெட் மட்டையை பார்த்தபோது அது சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டவுடன் சற்று அமைதியாகி மகன் வரவை நோக்கி காத்திருந்தார்.

முழு ஆண்டு தேர்வு முடித்திருந்த மகன்தன் நண்பர்களை சந்திவிட்டு வரும்போது தன் தந்தை விட்டில் இருப்பதைக் கண்டவுடன் விரைவாய் வந்தான். வந்தவுடன் தன் தந்தை வாங்கி வந்திருந்த தின்பண்டங்களைில் சில வற்றை எடுத்து ருசி பார்த்தான்.

தன் மகன் திண்டு முடிக்கும்வரை பொறுமை காத்த அந்தத் தந்தை, தன் பையில் மடித்து வைத்திருந்த  நோட்டீசை படித்துக் காட்டுமாறு வேண்டினார்.

அதை வாங்கிப் பார்த்த மகன், மடித்திருந்த பிரசுரத்தை பிரித்து, தன்தந்தையை கவனிக்குமாறு சொல்லிவிட்டு சத்தத்துடன் படிக்க ஆரம்பித்தான்.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
இந்த ஆண்டு மேதினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால்விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.
ஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இதுதான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கேள்வியாகும்.
மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகிய உயர்பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும், இவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.
உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல், கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.
எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின்படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும், நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.
நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்கம், அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கி விட்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம், நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்குப் பயன்படுவதைவிட, பன்னாட்டு உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.
ஒடுக்கப்படும் சாதியினர், மதச்சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின் உச்சநிலையை எட்டிவிட்டன. நாட்டின் சமூக பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள்தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத்தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டுமொத்தச் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காணமுடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் திணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகத்தனத்தையும் தோல்வியையுமே இவை காட்டுகின்றன.
இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்துவந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூட திவாலாகி, தோற்றுப்போய் விட்டன என்பதையும், சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள் கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள் (blackhole) போயக் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் காட்டுகின்றன
இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாயவுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும்தான் இது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இதுதான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒரு உச்சநிலையை எட்டிவிட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களும் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இனி தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும், முழக்கங்களும் முன்வைத்து தனித்தனி இயக்கங்கள் நடத்தித் தீர்வுகாண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.
நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு
வெளியேதான் உள்ளன!
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின்
அதிகாரத்தைத் தட்டிக் கேட்க
வேண்டும்!
அவர்களின் அதிகாரத்துக்கு
சவால்விட வேண்டும்!
தங்களுக்கான அதிகார அமைப்புகளை
மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்!
மே நாள் சூளுரை :

ஆளும் அருகதையற்ற
அரசுக் கட்டமைப்பை
வீழ்த்துவோம்!

மக்கள் அதிகாரத்தை
நிறுவுவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர-இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

பேரணி- பொதுக்கூட்டம் 

மே நாள் கலை நிகழ்ச்சிகள்

மே-1 2015 மாலை 4.30 காந்தி மைதானம்,

கிருஷ்ணன் கோவில் தெரு.

 மாலை.6.30மணி

கோவில்பட்டி


தொடர்புக்கு--
கோவில்பட்டி-     மதுரை-       உசிலை
9944899190            9791653200       9894312290

கம்பம்-      சிவகங்கை-    ராஜபாளையம்
7502451019     9443175256       9751047902


புதியஜனநாயகம்  படியுங்கள் புதிய தொழிலாளி


----------------கடகடவென்று படித்து முடித்தபோதுதான் தன் தாயும் சகோதரியும் சேர்ந்து தான் படிப்பதை கேட்டுக் கொண்டியிருந்தது அந்த தந்தையின் மகனுக்கு தெரிந்தது. அந்த தந்தைக்கோ ஒரு கல்லில் ரெண்டு மங்காய் அடித்து விட்டதில் பெருமையாக இருந்தது.

8 கருத்துகள்:

  1. மே தின வாழ்த்துக்கள் ...
    அருமை

    பதிலளிநீக்கு
  2. எமது வாழ்த்துகளும் இருக்கட்டும் தோழரே...

    பதிலளிநீக்கு
  3. நோட்டீசு கொஞ்சம் நீளம்தான் ,வாசிக்க பய பிள்ள கஷ்டப் பட்டிருப்பானே :)

    பதிலளிநீக்கு
  4. பய புள்ள ஒரு இடத்துல கூட திக்காம படுச்சுபுட்டான்டா எம்மகெ என்று பெருமைபட்டுகிட்டதாக கேள்வி....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...