வியாழன் 09 2015

எஜமானியாம்மாவின் நாயாக இருந்தாலும்,வாயும் வாலும் வேறு வேறனாவை...!!!

Image result for நாயின் வகைகள்
படம்-www.kungumam.co.in

எஜமானியம்மாவின் விசுவாசமான நாயாக இருந்தாலும்.அந்த நாயின் வாயும்.வாலும் வேறு வேறனாவை என்பதற்கு ஆதாரமாக இந்தச் சம்பவத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

அடித்தக் கொள்ளையின் ஊழலால், தீர்ப்பு கூறப்பட்டு, தன் கார்டனில் ஓய்வு எடுத்து கொண்டே, தன் சுண்டு விரலால் ஆட்சியையும்,  ஆளும் ஆட்களையும் ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கும் எஜமானியம்மாவின் அருமையையும்.பெருமையையும் செவ்வாய் மண்டலம்வரை பரப்பிக் கொண்டியிருக்கும் தொண்டர்கள், ஊழியர்கள், அமைச்சர் பெருமக்கள், நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில்....

நீரின் மேலே  மிதந்து (டாஸ்மாக தண்ணி அல்ல) எஜமானியம்மாவின் ஆயுளை கெட்டியாக்கி உழைத்த கோமகனும், எஜமானியம்மாவின் மேல் ஒரு துறும்பு பட்டால் அந்தத் துறும்பை கடித்து சின்னாபின்னமாக்கி, தன் ஆதிக்க சாதிகூட்ட பராக்கிரமத்தை காட்டித்திரியும் கொம்பனும், எதிர் எதிரெதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது, எல்லா ஓட்டு சீட்டு கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.

அதாவது, கிணத்து தண்ணியிலேயும், கண்மாய் தண்ணிலேயேயும் முழ்காமல் மிதந்து எஜமானியம்மாவின் புகழ் பாடும் கோமகன். அடக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.  பிற சாதியை அடக்கி ஒடுக்கியே வீரம் பெற்ற ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் கொம்பன். இவர்கள் எதிர்எதிர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும். எஜமானியம்மாவின் பக்தர்கள். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் அடிமைகள்...

இவர்களின் பக்தியையும், விசுவாசத்தையும் கண்டு மனம் குளிர்ந்து போன எஜமானியம்மாவர்கள் இருவருக்கும் தொகுதி எம்எல்ஏ என்ற பதவியை கொடுத்து அனைவரையும் அரவனைக்கும் வள்ளல்தன்மையைக் பறைச்சாட்டிக் கொண்டார்.

எஜமானியம்மா ஆளும் நாட்டில் குளிர்காலம்போயி, கோடைகாலம் வந்தது.. குடிக்கும் தண்ணரீரை பாட்டிலில் அடைத்து பகாசூர கொள்ளைக் கம்பெனிக்கு போட்டியாக, குறைந்த விலையில் விற்று,தன் தயாள குனத்தின் கரிசனத்தை வெளிப்படுத்திக் கொண்ட எஜமானியம்மாளின் புனித உள்ளத்தை மேலும் தெரியப்படுத்துவதற்க்காக, எஜமானியம்மாவின் பக்தர்கள் இலவசமாக, நீர்,மோர் பந்தலை திற்ந்து வக்கற்ற மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.

இப்படியாக எஜமானியம்மாளுக்கு புகழும் பெருமையும் சேர்த்து அதன்மூலமாக மேலும் பதவியும் பரிசும் பெறும்விதமாக, தன் அல்லகை்கைகள் மூலமாக, கொம்பன், கோமகனின் தொகுதிக்குள் புகுந்து, அந்த கோமகனை புறக்கணித்துவிட்டு அடுத்தத் தேர்தலில், இந்தக் கோமகனின் தொகுதியை கபளிகரம் செய்து, இந்தத் தொகுதியை தனக்கோ, அல்லது தனது சாதிவெறி குலகொழுந்துகளுக்கு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன்., எஜமானியம்மாவின் புகழ்பரப்பு என்ற பதாகையுடன்“ நீர்மோர் பந்தல்” திறப்பு விழாவில், தனது ஆதிக்கச்சாதிவெறி படையுடன் வந்து. திறந்து வைத்தார் சாதி வெறி குலதெய்வத்தின் பெயரை தனது பெயராக சூட்டிக் கொண்ட திருகுமங்குல தொகுதி கொம்பன்.

இந்தச் செய்தியறிந்து, எஜமானியம்மாவின் புகழை பரப்புவதற்க்காக கோயிலுக்கு வேண்டிக் கொண்ட தாடியுடன் தனது தொகுதியான ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு உள்ள ஸ்தலத்தில் ,படையில்லாமல் ஆஜராகி

திருகுமங்க கொம்பனிடம், “எனது தொகுதிக்குள் எனக்கு தெரிவிக்காமல் என் அனுமதி இல்லாமல் நீர்,மோர் பந்தலை எப்படி திறக்கலாம் என்று கோமகன் கேட்க..

இது கட்சி நிகழ்ச்சி, மாவட்டச் செயலாளர் என்ற முறையில்“நீர்மோர் பந்தலை திறந்து வைக்க எனக்கு அதிகாரம் உள்ளது, அதுக்கு என்னாங்குறே... என்று தனது ஆதிக்கச் சாதி வெறி குணத்துடன் நாக்கை  துறுத்திச் கொண்டு கெட்ட வார்த்தை பேச...

கோமகனும் இவர்களின் அரட்டல் மிரட்டலுக்கு பயந்து தொகுதியை விட்டுக் கொடுத்திடக்கூடாது என்ற பதைபதைப்பில் எதிர்த்து கேள்விக்கேட்க, ஒரு கட்டத்தில் கோமகனுக்கும், கொம்பனுக்கும் கை கலப்பு ஆரம்பித்தவுடன், கூடியிருந்த கூட்டங்களில்  சிலர் இவர்களுக்கு இடையே உள்ளே புகுந்து கோமகனையும் கொம்பனையும் விலக்கிவிட்டனர்.

கொம்பன் ,தன் ஆதிக்கத்தின் பவரையும், பலத்தையும் நிலைநாட்டும் விதமாக, அதனைக்காட்டி தன்னை எதிர்த்த கோமகனை அடக்கும்விதமாக  கோமகனின் எதிர்ப்பை மதிக்காமல், வீம்புக்கு பஸ்ஸாண்டில் அருகில்  சென்று ,நீர்மோர் பந்தலை திறந்து வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிவிட்ட வெற்றிப் பெருமிதத்தில் கொம்பன் ஊர்வலமாகச் சென்றார்.

இந்தச் சம்பவத்தைக் நேரில் கண்ட தொகுதி மக்களோ, இந்தக் கோமகன் தொகுதிக்குள் அந்த கொம்பன் வந்து நிர்மோர் பந்தல் திறந்து வைத்தது மாதிரி, அந்தக் கொம்பன் தொகுதிக்குள் இந்தக் கோமகன் சென்று நீர்மோர் பந்தல் திறந்து வைத்தால் அந்தக் கொம்பன் சும்மா இருப்பாரா??? என்று கேள்வி கேட்டனர்.

நடுநிலையாளர்களோ.... கொம்பனின் ஆதிக்கச்சாதிவெறியின் ஆதிக்கத் திமிறால்தான் இந்த பிரச்சனை என்றார்கள்.

 இந்தியாவே, நாலா பிளந்து மண்ணோடு மண்ணாக போகாதொழிய சாதி வெறியும் சாதி ஆதிக்கமும் ஒயாது ஒழியாது என்ற போதிலும், சாதியிலே பெரிய சாதியான எஜமானியம்மாவின் வீட்டு விசுவாசமுள்ள நாயாக இருந்தாலும்.அந்த நாயின் வாயும்,வாலும் வேறு வேறனாவை என்றுதான் இந்தச் சம்பவம் இந்தச் சமூகத்திற்கு மீண்டும்  உணர்த்துகிறது.


21 கருத்துகள்:

  1. அருமையாக சித்தரித்து சொல்லியுள்ளீர்கள் நண்பரே வாழ்த்துகள்.
    வாழட்டும் பெருங்குடி மக்கள்.

    பதிலளிநீக்கு
  2. என் தொகுதிக்குள் நீ எப்படி வரலாம் ? MLA இன்னொரு MLAயைப் பார்த்து கேட்கும் கேள்வியா இது ? நாடு உருப்பட்ட மாதிரிதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடு இப்ப என்னமோ உருப்பட்டு இருக்கிற மாதிரியில்ல சொல்லுறீங்க நண்பரே......

      நீக்கு
  3. பதில்கள்
    1. எப்படியாவதுடிநாசமாகப் போகட்டும் என்பதை -வேடிக்கை பார்க்க கூட்டம் அலைமோதும் நண்பரே...

      நீக்கு
  4. வாலை நிமிர்த்த பார்க்காதீர்!
    நாயின் கடிக்கு பயந்து ஓடுங்கள்!
    இதுதான் இன்றையை இவர்களது நிலை தோழரே!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  5. எஜமானியம்மாவுக்கு இரண்டு அடிமைகள், அவர்களுக்குள் ஜாதி வெறி,நல்லாயிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வெறியை கெளுத்தி குளிர் காய்வதற்கும் அடிமைகள் உண்டு நண்பரே..

      நீக்கு
  6. இந்தியாவே, நாலா பிளந்து மண்ணோடு மண்ணாக போகாதொழிய சாதி வெறியும் சாதி ஆதிக்கமும் ஒயாது ஒழியாது. எத்துனை உண்மையான வார்த்தைகள். அருமை.

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    கொம்பன், கோமகனின் தொகுதிக்குள் புகுந்து, அந்த கோமகனை புறக்கணித்துவிட்டு அடுத்தத் தேர்தலில், இந்தக் கோமகனின் தொகுதியை கபளிகரம் செய்து, நாலு காலுமில்ல...ஒரு வாலுமில்லாத..........!

    அருமை.

    த.ம. 7.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.ஜேம்ஸ் அய்யா அவர்களுக்கு தங்களின் தளம் வராமல் தமிழ்நண்பர்கள் தளம் தான் வருகிறது. தங்களின் தளத்தை கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்

      நீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    எனது பதிவைப் பதிவு செய்து விட்டு ‘தமிழ்நண்பர்கள்’ பகுதியில் இணைப்பது உண்டு. மற்றபடி என்னவென்று தெரியவில்லை.

    எனது வலைத்தள முகவரி:

    manavaijamestamilpandit.blogspot.in

    -மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்லது அய்யா...எனது வாசிப்பு பட்டியல் மூலம் தங்கள் பதிவை தொடருகிறேன் அய்யா....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...